பத்திரிகையாளர் சமூகம் பெருமிதம் கொள்கிறது! என்று சென்னை பத்திரிகையாளர்கள் சங்கத்தின் பொதுச்செயலாளர் ஷபீர் அகமது மகாலிங்கம் பொன்னுசாமிக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தமிழ்நாடு மாநில தகவல் ஆணையராக மூத்த பத்திரிகையாளர் திரு. மகாலிங்கம் பொன்னுசாமி அவர்கள் நியமிக்கப்பட்டிருப்பது மிகுந்த மகிழ்ச்சியையும் பெருமிதத்தையும் அளிக்கிறது. என்று தெரிவித்துள்ளார்.
சென்னை பத்திரிகையாளர்கள் சங்கத்தின் பொதுச்செயலாளர் ஷபீர்அகமது.
தமிழ்நாடு மாநில தகவல் ஆணையராக மூத்த பத்திரிகையாளர் மகாலிங்கம் பொன்னுசாமி அவர்கள் நியமிக்கப்பட்டிருப்பது மிகுந்த மகிழ்ச்சியையும் பெருமிதத்தையும் அளிக்கிறது.
முதன்முறையாக முழுநேரப் பத்திரிகையாளராகப் பணியாற்றிய ஒருவர் தமிழ்நாடு தகவல் ஆணையராக நியமிக்கப்பட்டிருப்பது வரவேற்கத்தக்க வரலாற்றுச் சிறப்புமிக்க நிகழ்வாகும்.
மிகவும் எளிய குடும்பப் பின்னணியில் இருந்து வந்து, குடும்பத்திலேயே முதல் பட்டதாரியாக உயர்ந்து, தனது கடின உழைப்பாலும், அர்ப்பணிப்பாலும், பத்திரிகைத் துறையில் சுமார் 25 ஆண்டுகள் அனுபவம் பெற்றவர் மகாலிங்கம் பொன்னுசாமி. புதிய தலைமுறை, நியூஸ் 18 தமிழ்நாடு, டைம்ஸ் ஆஃப் இந்தியா, தி ஃபெடரல் உள்ளிட்ட ஊடகங்களில் பணியாற்றியவர். அவர் எழுதிய பல புலனாய்வுக் கட்டுரைகள் அரசின் கவனத்தை ஈர்த்து, இலங்கைத் தமிழ் அகதிகள் முகாம்களில் வாழும் மக்களின் அடிப்படை வசதிகளை மேம்படுத்துவது, ஆந்திரச் சிறைகளில் வாடிய தமிழகத் தமிழர்களுக்கு சட்ட உதவி கிடைப்பது எனப் பலரது வாழ்க்கையில் மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளன.
பத்திரிகையாளர் மகாலிங்கம் பொன்னுசாமி.
இந்த நியமனம் தனிப்பட்ட முறையில் மகாலிங்கம் பொன்னுசாமி அவர்களுக்குக் கிடைத்த அங்கீகாரம் மட்டுமல்ல, நேர்மையாகவும் அர்ப்பணிப்புடனும் பணியாற்றும் பத்திரிகையாளர்களுக்கு அளிக்கப்பட்டுள்ள அங்கீகாரமாகும்.
தமிழக வெற்றிக் கழகத்தின் தலைமையிலான அரசு, பல்வேறு சமூகப் பின்னணிகளையும், துறைசார் அனுபவங்களையும் கொண்டவர்களை தகவல் ஆணையர்களாக நியமித்திருப்பதன் மூலம் புதிய வாய்ப்புகளுக்கான கதவுகளைத் திறந்துள்ளது. இந்த நியமனங்கள் எவ்வித வெளிப்புறச் செல்வாக்கிற்கும் இடமின்றி, தகுதி, அனுபவம் மற்றும் பங்களிப்பின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்டிருப்பது பாராட்டுக்குரியது.தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் அடிப்படை நோக்கமான வெளிப்படைத்தன்மை, அரசின் பொறுப்புடைமை மற்றும் மக்கள் தகவல் பெறும் உரிமை ஆகியவற்றை வலுப்படுத்தும் வகையில், பல்வேறு பின்னணிகளில் இருந்து தகவல் ஆணையர்கள் நியமிக்கப்பட்டிருப்பது இந்தச் சட்டத்தின் உண்மையான நோக்கத்தையும் ஜனநாயக உணர்வையும் மதிக்கும் செயலாகும்.
இந்த வரவேற்கத்தக்க நடவடிக்கையை மேற்கொண்டுள்ள தமிழக அரசுக்கும், மாநில தகவல் ஆணையராகப் பொறுப்பேற்கவுள்ள திரு. மகாலிங்கம் பொன்னுசாமி அவர்களுக்கும் பத்திரிகையாளர் சமூகத்தின் சார்பில் மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறோம்.
அவரது பணி சிறக்கவும், தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் நோக்கம் மேலும் வலுப்பெறவும் வாழ்த்துகிறோம். மாநில தகவல் ஆணையராக பொறுப்பேற்றுள்ள பத்திரிகையாளர் மகாலிங்கம் உங்களுக்கு பல பத்திரிகையாளர்களும் அவரது நண்பர்கள் மற்றும் பல பத்திரிகையை சங்கங்கள் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளனர்.
குறிப்பு: பத்திரிகையாளர் மகாலிங்கம் பொன்னுசாமி பல தமிழ் பத்திரிகை மற்றும் ஆங்கில பத்திரிகை தொலைக்காட்சிகளில் பணியாற்றியவர் சமூகத்தின் அவலங்களை நெஞ்சுரத்தோடு எழுதியவர்.
ஆனால் இவர் வளர்ந்து விடக்கூடாது என்று சில துரோகிகள் அவர் மீண்டு எழுந்து விடக்கூடாது என்று முதுகில் குத்தியவர்கள் முகம் எல்லாம் தற்போது கரி பூசிய முகமாக வெட்கத்தில் தலை குனிந்து நிற்கிறார்கள். திறமைக்கும் நேர்மைக்கும் சமூகம் ஒரு நாள் நல்ல வாய்ப்பை வழங்கும் என்று சொல்லுகிறார்கள் மகாலிங்கம் பொன்னுசாமியின் நெருங்கிய நண்பர்கள்.
திமுகவுக்கு ஜால்ரா தட்டிய பத்திரிகையாளர்கள் மாதம் ,மாதம் உதவித்தொகை வாங்கிக்கொண்டு திமுகவுக்கு ஆதரவாக சொம்பு தூக்கி ஜால்ரா அடித்தவர்கள் அனைவரும் வயிற்று எரிச்சலில் இருக்கிறார்கள் என்று சொல்லுகிறார்கள் சென்னை பத்திரிகையாளர்கள்.