#Exclusive story, #special story, #Angel College news , #psycho professor news, #Karur district news
தமிழ் மாநில பகுஜன் சமாஜ் கட்சியின் கரூர் மாவட்ட தலைவர் நிலவு சிவா என்பவர் தமிழக முதலமைச்சரின் தனிப்பிரிவு மற்றும் காவல் துறை இயக்குனர் எஸ்சி, எஸ்டி ஆணையம் மற்றும் தமிழகத்தின் அரசுத்துறை செயலாளர்கள் என பல அதிகாரிகளுக்கு ஒரு புகார் ஒன்றை அனுப்பி உள்ளார்.
அந்தப் புகாரில் தனியார் கல்லூரியில் பணியாற்றும் பேராசிரியர் குறித்து அந்த புகாரில் பல குற்றச்சாட்டுகளை முன்வைத்து புகார் அனுப்பியுள்ளார். அவர் அனுப்பியுள்ள புகாரில் கூறப்பட்டுள்ளதாவது;
நான் மேற்கண்ட முகவரியில் வசித்து வருகிறேன் அங்கீகாரம் பெற்ற கட்சியில் பாதிக்கப்பட்ட மக்களுக்காகவும் சட்டம் தொடர்பான விஷயங்களை பொதுமக்களுக்கு உதவி செய்யும் சமூக சேவகன் ஆக பணியாற்றி வருகிறேன். தற்பொழுது மாண்புமிகு முதல்வரின் லஞ்சம் இல்லா தமிழ்நாடு மற்றும் மது மற்றும் போதை இல்லா தமிழ்நாடு சட்ட விதிமுறை மீறல் இல்லா தமிழ்நாடு மக்கள் நலன் காக்கும் தமிழ்நாடு என்ற நட்பெயருடன் பல்வேறு நல திட்டங்களை ராக்கெட் வேகத்துடன் செயல்படுத்தி வரும் தற்போதைய மாண்புமிகு முதல்வர் மற்றும் அமைச்சர் அவர்களின் உரிய செயல்பாட்டிற்காக நான் இந்த மனுவை சமர்ப்பிக்கிறேன்.
மேற்படி ஒன்னாவது எதிரி எதிர் மனுதாரர் ஆன ராஜா மீது கீழ்க்கண்ட குற்ற வழக்குகள் நிலுவையில் உள்ளது தென்னிலை காவல் நிலையத்தில் எட்டு வழக்குகளும் அதாவது crime number 324 bar 20-20 256 bar 2021 261 bar 2021 24 bar 2022 74 bar 2022 92 bar 2023 42 bar 2025 98 / 2026கரூர் நகரத்தில் ஒரு வழக்கும் கரூர் மதுவிலக்கு பிரிவில் ஒரு வழக்கும் நிலுவையில் இருந்து வருகிறது. பிரபு என்பவர் மீது crime number 96 bar 2026 women harassment act CSR 148 bar 20-26 CSR 149/206 CSR 150 bar 2026 என்ற வழக்குகள் நிலுவையில் உள்ளது.
ரகுநாத் என்பவர் மீது தென்னிலை காவல் நிலையத்தில் நான்கு வழக்குகள் நிலுவையில் உள்ளது. CSR 148 bar 26 CSR 149 bar 26 crime number 96/206 women harassment act. இவ்வாறு எதிர் மனுதாரர்கள் ராஜா பிரபு ரகுநாத் ஆகிய மூவரும் குற்றப் பின்னணி கொண்ட நபர்கள் ஆவார்கள்.


இவர்கள் கட்டப்பஞ்சாயத்து குவாரி உரிமையாளர்களை மிரட்டி பணம் பெறுதல் பதிவு செய்யப்பட்ட தொழில் நிறுவனத்தில் மிரட்டி படம் பறித்தல் தன்னிடம் வரும் தனியார் பிரச்சனைகளை எடுத்துச் சென்று அரசு அதிகாரிகளை மிரட்டி பணம் பறித்தல் தனிநபரின் தொழிலை முடங்க வைத்து அதன் மூலம் தனிநபரிடம் பணம் பெறுதல் தொழில் செய்யும் நபரிடம் அதிக தொகை பெற்று எதிரிக்கு சாதகமாக செயல்படுவது போன்ற சட்ட விரோத பல செயல்களை தென்னிலை கிராமத்திற்கு உட்பட்ட பகுதிகளில் கடந்த ஐந்து ஆண்டுகளாக செய்து வருகிறார்கள் என்பதற்கு அவர்கள் மீது உள்ள மேற்கண்ட வழக்குகளே சாட்சியாகும்.
பிரபு பெட்ரோல் பங்க் உரிமையாளர்.
மேலும் எதிர்மனுதாரர்கள் ராஜா, பிரபு, ரகுநாத் ஆகிய மூவரும் இந்திய இறையாண்மைக்கு எதிராகவும் இந்திய சட்டங்களுக்கு எதிராகவும் அரசு அதிகாரிகளை செயல்பட சொல்லி மிரட்டி வருகிறார்கள் மேலும் தன்னிடம் யாராவது வந்து புகார் கொடுத்தால் அந்த புகாருக்கு ஆதரவாக அரசு அதிகாரிகளை செயல்பட சொல்லி மிரட்டி வருகிறார்கள். இதற்கு ஆதரவாக விவசாய சங்கம் என்ற போர்வையை போர்த்தி உள்ளே ஒளிந்து கொள்கிறார்கள் இவர்கள் மூவரும் இது நாள் வரை ஒரு விவசாயிக்கு கூட எந்த ஒரு நன்மையும் செய்ததில்லை பெற்றுத் தரவும் இல்லை.
மேலும் மூன்று நபர்களும் விவசாயிகளுக்கு ஆதரவாக எந்த ஒரு பொது நல வழக்கையும் நீதிமன்றத்தில் சென்று வழக்காடியது இல்லை மேலும் தனியாக நின்று எந்த ஒரு போராட்டங்களும் மக்களின் நலனுக்காக செய்ததில்லை மேலும் ராஜா அவர்கள் தென்னை மரத்திலிருந்து கள் என்ற மதுபானத்தை இறக்கி அதனுடன் போதை தரும் வேதிப்பொருட்களை கலந்து தென்னிலை பகுதியில் விற்பனை செய்து பணம் ஈட்டி வருகிறார்.



இதற்கு ஆதரவாக விவசாய சங்க பெயரை பயன்படுத்தியிருக்கிறார். அப்பகுதியில் உள்ள ஏழை எளிய அடித்தட்டு தாழ்த்தப்பட்ட மக்கள் அருந்ததியர் மக்கள் தலித் மக்கள் ஆகியோரின் ஒட்டுமொத்த மக்களையும் போதைக்கு அடிமைப்படுத்தி மதுபானமான கள்ளை விற்று மாதந்தோறும் சுமார் 2 லட்சம் முதல் ஐந்து லட்சம் ரூபாய் வரை பணம் சம்பாதித்து வருகிறார்.
இதற்காக அரசு அதிகாரிகளான கிராம நிர்வாக அலுவலர் ,வருவாய் ஆய்வாளர், உதவி ஆய்வாளர் , ஆய்வாளர் மற்றும் தென்னிலை காவல் நிலையம் மற்றும் மதுவிலக்கு பிரிவு காவல் துறையினரை மிரட்டி அரசு ஊழியர்கள் தன் கடமையை செய்யக்கூடாது என்பதற்காக விவசாய சங்கத்தில் ஈடுபடுவது போல் நடித்து நாடகம் ஆடி வருகிறார்.
இதையும் மீறி காவல் துறையினர் சட்டப்படியான நடவடிக்கையை எடுத்தால் ராஜாவின் சட்ட விரோத செயளான கள்விற்கும் தொழிலை எதிர்த்து முதல் தகவல் அறிக்கை பதிவு செய்தால் அங்கு காவல் நிலையத்திற்கு விவசாய சங்கத்தினரை அழைத்து வந்து தென்னிலை காவல் நிலையத்தினை முற்றுகையிட்டு அச்சுறுத்தி போலீஸ் அதிகாரிகளை வேலை செய்ய விடாமல் தடுத்து தனக்கு எதிராக எந்த சட்ட நடவடிக்கையும் எடுக்காத படி சதி திட்டம் தீட்டி வருகிறார்.
அதிகாரிகள் அனைவரும் தன்னுடைய கண்ணசைவிற்கு கீழ்ப்படிந்து நடக்க வேண்டும் என நினைத்து தனி அரசாங்கத்தை நடத்துவதைப் போல சினிமாவில் வரும் ரவுடிகளை கொண்டு வந்து போலீஸ் அதிகாரிகளை மிரட்டி செயல்பட வைக்கிறார். மேலும் தென்னிலை காவல் நிலையத்திற்கு உட்பட்ட பகுதியில் இயங்கும் கல்குவாரி மற்றும் தனியார் நிறுவனங்களில் உள்ள வாகனங்களுக்கு பிரபுவுக்கு சொந்தமான பெட்ரோல் பங்கிற்கு பெட்ரோல் டீசல் நிரப்ப அனுப்ப வேண்டுமாய் தொழில் செய்யும் உரிமையாளர்களை மிரட்டி வருகிறார். அவ்வாறு பெட்ரோல் டீசல் நிரப்ப தனியார் நிறுவன வாகனங்கள் அனுப்பவில்லை என்றால் சம்பந்தப்பட்ட நிறுவனத்தின் மீது ஆர்.டி.ஐ விண்ணப்பங்களை பொய்யாக கொடுத்து தொந்தரவு செய்து வருகிறார்.
அதிகாரிகளை மிரட்டி மாதம் தனக்கு லஞ்சம் தர வேண்டும் என்று மிரட்டி வருகிறார். அவ்வாறு பணம் கொடுக்காத மற்றும் ராஜா, ரகுநாத், பிரபு ஆகியோர்களுக்கு கட்டுப்படாத அதிகாரிகள் மீதும் அவரது குடும்பப் பெண் உறுப்பினர்கள் மீதும் தகாத முறையில் சித்தரித்து அவரைக் குறிச்சி அசெம்பிளி என்ற whatsapp குழுவில் அதிகாரிகளை மிரட்டும் தொணியில் சைகை பாட்டு உடன் கூடிய போஸ்டர் விளம்பரம் அருவருக்கத் தக்க வார்த்தைகளை உபயோகித்து குடும்ப உறுப்பினர்களை திட்டுவது அவர்களது உயிருக்கு ஆபத்து ஏற்படும் தொனியில் பாட்டுக்களை வைத்து போஸ்டர் படியே வெளியிடுதல் என பட அவதூறு விஷயங்களை செய்து வருகிறார்.அதுமட்டுமல்லாமல் அந்தக் குழுவில் மாண்புமிகு தமிழக முதலமைச்சர் ஜோசப் விஜய் அவர்களது பெயரையும் மற்றும் அமைச்சர்கள் மற்றும் புகைப்படத்தை தவறாக பயன்படுத்தியும் தமிழக அரசு முத்திரையையும் பயன்படுத்தியும் போஸ்டர்கள் வெளியிடுகிறார்கள் மேலும் போஸ்டர்களை யார் வெளியிடுகிறார்களோ அவர்களுடைய பெயர் மற்றும் செல்போன் என்னை குறிப்பிடாமல் அரவக்குறிச்சி மக்கள் என பொதுவாக குறிப்பிட்டு ராஜா பிரபு மற்றும் ரகுநாத் இதுபோன்ற செய்திகளை வெளியிட்டு வருகிறார்கள்.
மேலும் பெண் அதிகாரிகளின் புகைப்படங்களை சட்ட விதிமுறைகளுக்கு முரணாக எவ்வித முன் அனுமதியும் இல்லாமல் வெளியிடுகிறார்கள் இதுகுறித்து பெண்கள் வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் காவல்துறையினர் உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என பணிவுடன் கேட்டுக்கொள்கிறேன் இதற்கான ஆதாரங்களும் சாட்சியங்களும் புகாரில் இணைக்கப்பட்டுள்ளது.

வழக்குகளை விரைவில் நடத்தி முடிக்க வேண்டும் என்று நீதிமன்றத்தின் மூலம் உரிய வழிமுறைகளை பெற்று வந்துள்ள நான் மேற்படி நபர்களுக்கு எதிராக யாரும் சாட்சி சொல்ல வரக்கூடாது என்று அவர்களை மிரட்டி கொலை செய்து விடுவதாக மிரட்டி வருகின்றனர். எனவே போலீஸ அதிகாரிகள் அவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுத்து அவருக்கு எதிராக சாட்சி சொல்ல வரும் பொது மக்களுக்கு உரிய பாதுகாப்பை வழங்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்.
கரூர் மாவட்ட வருவாய்துறை சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் மாவட்ட ஆட்சித் தலைவருக்கு ஒரு புகார் கடிதம் அனுப்பப்பட்டுள்ளது.
புகார் கடிதத்தில் கூறப்பட்டுள்ளதாவது கரூர் மாவட்டம் புகழூர் வட்டம் பரமத்தி மற்றும் தென்னிலை வட்டார பகுதியில் சமூக ஆர்வலர் என்ற பெயரில் இயங்கி வரும் சிலர் மேற்படி வட்டாரங்களில் பணிபுரிந்து வரும் வருவாய் துறை பெண் ஊழியர்களை whatsapp போன்ற சமூக வலைதளங்களில் ஊழியர்கள் ஒப்புதல் இல்லாமலும் அவர்களை மிரட்டியும் இணைத்து அநாகரிகமான வார்த்தைகளில் கொச்சையாக எழுதி அவர்களை காயப்படுத்தி சமூக வலைதளங்களில் அவதூறு பரப்பி மன உளைச்சல் ஏற்படுத்தி வருகிறார்கள். மேற்படி சமூக ஆர்வலர்கள் என்ற போர்வையில் இயங்கி வரும் கரூர் மாவட்டம் கார் உடையாம்பாளையத்தை சேர்ந்த மாரிமுத்து என்பவரின் மகன் பிரபு தென்னிலை கிராமம் ராசப்பன் என்பவரின் மகன் ராஜா மற்றும் தென்னிலை கிழக்கு கிராமம் பெரியசாமி என்பவரின் மகன் ரகுநாத் ஆகியோர் மீது சட்டபூர்வ நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று கூறப்பட்டுள்ளது.


பேராசிரியர் (Professor) ரகுநாத்.
மேலும் அந்தப் புகாரில் கரூர் மாவட்டம் புகலூர் வட்டம் தென்னிலை மற்றும் பரமத்தி வட்டாரங்களில் சமூக ஆர்வலர்கள் என்ற பெயரில் சிலர் மேற்படி வட்டாரங்களில் பணிபுரிந்து வரும் அரசு ஊழியர்கள் குறிப்பாக வருவாய்த்துறை ஊழியர்களான வட்டாட்சியர் துணை வட்டாட்சியர் குறுவட்ட வருவாய் அலுவலர் குறுவட்ட நில அளவர் கிராம நிர்வாக அலுவலர் கிராம உதவியாளர் ஆகியோரை whatsapp குழுவில் பரமத்தி வட்டாரம் என்ற whatsapp குழுவை உருவாக்கி அதில் பொதுமக்களை இணைத்தும் மேற்படி வட்டாரங்களில் பணிபுரிந்து வரும் அரசு ஊழியர்களின் ஒப்புதல் இன்றியும் கட்டாயமாக பணம் கேட்டு மிரட்டியும் மேற்படி whatsapp குழுவில் இணைத்து அதில் மேற்படி அரசு ஊழியர்களை குறித்து மிகவும் அநாகரீகமான வார்த்தைகளாலும் அவதூறுகளையும் நாளது தேதி வரை பரப்பி வருகின்றனர்.
இதனால் பொதுமக்களுக்கு அரசு ஊழியர்களுக்குமான இடைவெளி குறைந்தும் அரசு ஊழியர்களின் கண்ணியம் குறைக்கப்பட்டும் அரசின் நல திட்டங்களை பொதுமக்களின் ஒத்துழைப்போடு நிறைவேற்றுவதில் சுணக்கம் ஏற்படுவதற்கான சூழல் ஏற்பட்டுள்ளது.
பரமத்தி வட்டார அரசு ஊழியர்களுக்கும் குறிப்பாக பொதுமக்களோடு நேரடி தொடர்பில் உள்ள வருவாய் துறை ஊழியர்களுக்கும் ஏற்பட்டுள்ளது என்பதை கவனத்தில் கொண்டு இப்படியான சூழலை ஏற்படுவதை தவிர்க்க தென்னிலை குறுவட்ட வருவாய் ஆய்வாளர் தென்னிலை கிராம நிர்வாக அலுவலர் ஆகியோர் தென்னிலை காவல் நிலையத்தில் புகார் செய்ததை தொடர்ந்து தவறான பதிவு மேற்கொண்ட மா பிரபு என்பவர் கைது செய்யப்பட்டார்.
மேலும் இது போன்ற பதிவுகளை தொடர்ந்து மேற்கொண்டு வந்த மேலும் இரண்டு நபர்களான ராஜா மற்றும் ரகுநாத் என்பவர்கள் கைது செய்ய வலியுறுத்தியும் தொடர்ந்து இது போன்ற பதிவுகளை வருவாய்த்துறை அதிகாரிகளுக்கு எதிராக பதிவு செய்யக்கூடாது என வலியுறுத்தியும் தென்னிலை வருவாய் ஆய்வாளர் அலுவலகம் அருகே கடந்த 16ஆம் தேதி அன்று வருவாய் துறை சங்கங்களின் கூட்டமைப்பு சார்பாக ஆர்பாட்டத்தை நடத்தினோம் கடந்த 19/7/2026 அன்று மேற்படி கிராமத்தை சேர்ந்த சமூக ஆர்வலர் என்ற பெயரில் இயங்கி வந்த ராஜா என்பவர் தோட்டத்தில் கள் இறக்கியது தொடர்பாக மாவட்ட வருவாய் அலுவலர்கள் நேரடியாக கள ஆய்வு மேற்கொண்டு நடவடிக்கை எடுக்கும் போது ராஜா என்பவர் மேற்படி அதிகாரியை தகாத வார்த்தைகளை உபயோகித்து வாக்குவாதத்தில் ஈடுபட்டார் அதன் பிறகு காவல்துறையில் புகார் அளிக்கப்பட்டு ராஜா கைது செய்யப்பட்டார்.


இதில் பிரபு என்பவரை காவல்துறை மூலம் ஜாமினில் வெளியே வர முடியாத வகையில் நீதிமன்ற காவலில் இருந்தவர் மூன்றே நாளில் வெளியே வந்து விட்டார் அது மட்டும் அல்லாமல் மிரட்டும் விதமாக நாங்கள் மீண்டும் வருவோம் தலை சிதறும் என்று எனது வாட்ஸ் அப் ஸ்டேட்டஸ் இல் வைத்துள்ளார். இது இவர்களை வேகமாக மிரட்டும் துணியில் உள்ளது மேலும் அரவக்குறிச்சி அசெம்பிளி என்ற whatsapp குழுவிலும் கரூர் பரமத்தி யூனியன் என்ற whatsapp குழுவிலும் வருவாய்த்துறை அலுவலர்கள் மீது அவதூறு தெரிவிக்கும் வகையில் தொடர்ந்து பொய்யான தகவல்களை பகிர்ந்து வருவதாலும் மேலும் வருவாய்த்துறை அலுவலர்களுக்கு மன உளைச்சலை ஏற்படுத்தும் நோக்கத்தில் அவதூறான மனுக்களை தொடர்ந்து பல்வேறு அலுவலகங்களுக்கு அனுப்பியும் பெண் ஊழியர்களை அச்சுறுத்தும் வகையில் நடந்து கொண்டு வருகின்றனர்.
பிரபு, ராஜா, ரகுநாத் ஆகிய மூவரும் ஜாமினில் வெளியே வர முடியாத வகையில் குண்டத் தடுப்பு சட்டத்தின் கீழ் அவர்களை கைது செய்ய வேண்டும் வருவாய்த்துறை அலுவலர்கள் மற்றும் ஊழியர்களை காப்பாற்ற வேண்டும் என்று அன்புடன் கேட்டுக்கொள்கிறோம் என இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது. இந்தப் புகார் குறித்து நாம் சம்பந்தப்பட்ட பிரபுவை தொடர்பு கொண்டோம் அவரை தொடர்பு கொள்ள முடியவில்லை. அவர் பணியாற்றும் கல்லூரி முதல்வரிடம் விளக்கம் கேட்க பல முறை முயற்ச்சி செய்தோம் ஆனால் அவர்களையும் தொடர்பு கொள்ள முடியவில்லை,
பெண் ஊழியர்களை பாலியல் வன்முறை செய்யும் நோக்கத்துடன் அலையும் பேராசிரியர் போர்வையில் ஒளிந்து தெரியும் சைக்கோ பேராசிரியர் ரகுநாத் மீது ஏஞ்சல் பொறியியல் கல்லூரி நிர்வாகம் இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை. மாவட்ட நிர்வாகமும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.சமூக செயற்பாட்டாளர் என்ற போர்வையில் ஆர்.டி.ஐ. மூலம் பல பெண் அதிகாரிகளின் தகவல்களை சேகரித்து அவர்களுக்கு வாட்ஸ் அப் மூலம் ஆபாசமான செய்திகளை அனுப்பிவரும் ரகுநாத் மீது இதுவரை போலீசாரும் கடுமையான நடவடிக்கை எடுக்கவில்லை பெண்கள் வன்கொடுமை சட்டத்தின் கீழ் அவர் மீது குண்டச்சட்டத்தின் கீழ் அவரை கைது செய்ய வேண்டும் என்றும் உடனடியாக ஏஞ்சல் கல்லூரி நிர்வாகம் அவரை கல்லூரியில் இருந்து நீக்கி அவர் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கரூர் அரசு ஊழியர்கள் கூட்டமைப்பு சார்பில் வலியுறுத்தி வருகின்றனர்.
இந்த செய்தி குறித்து சம்பந்தப்பட்ட ஏஞ்சல் பொறியியல் கல்லூரியினுடைய முதல்வர் மற்றும் சைக்கோ பேராசிரியர் ரகுநாத் ஆகியோர் தமது விளக்கத்தை அளித்தால் நாம் அதை பதிவு செய்ய தயாராக இருக்கிறோம்.