chennireporters.com

விவசாயிகளை மிரட்டி பணம் பறிக்கும் விவசாய சங்க தலைவர்.

திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி வட்டம் , மோட்சவாடி என்ற கிராமத்தில் உள்ள தமிழக அரசின் நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் நெல் விற்பனை செய்ய வரும் விவசாயிக்களிடம் 1 கிலோக்கு 1 ரூபாய் வீதம் ஒரு மூட்டைக்கு 40 ரூபாய் _மிரட்டி லஞ்சம் கேட்கும் பிச்சைக்காரன்.

மோட்சவாடி கிராமத்தில் உள்ள தொடக்க வேளாண்மை கூட்டுரவு சங்க தலைவராக இருப்பவர்.இராமகிருஷ்ணன் என்பவர் விவசாயிகளை மிரட்டி வருகிறார்.

மேலும் லஞ்சம் தராத விவசாயிகளை ஆபாச வார்த்தைகளால் மிரட்டி லஞ்சம் கேட்கும் வீடியோ காட்சி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

எந்த தவறு நடந்தாலும் விட மாட்டேன் என்று சொன்ன முதல்வர் ஸ்டாலின் கவனத்திற்கு செல்லுமா வீடியோ பொறுத்திருந்து பார்ப்போம்.

இதையும் படிங்க.!