chennireporters.com

முதல்வரை கேள்வி கேட்ட மூதாட்டி.

கேரள முதல்வரின் சொந்த ஊரான பினராயில் நேற்று கட்சி நிகழ்ச்சி ஒன்று நடைபெற்றது.அதில் முதல்வர் பினராய் விஜயன் மேடையில் அமர்ந்திருந்தார்.

அப்போது திடீரென மேடையேறி வந்த அலியும்மா என்ற முஸ்லிம் மூதாட்டி ஒருவர் முதல்வர் பினராய் விஜயனுக்கு நேராக விரல் நீட்டி”மாதம் தோறும் அரசு தரும் 600 ரூபாய் பென்சன் தொகை எனக்கு போதாவில்லை.

முதல்வரை கேள்வி கேட்கும் மூதாட்டி

600 ரூபாயில் குடும்பம் நடத்துவது சிரமமாக உள்ளது.அதை கொஞ்சம் உயர்த்தி வழங்க வேண்டும்” என்று பேசிய போது, மேடையில் இருந்தவர்கள் அலியும்மா வை சமாதானப்படுத்த முயற்சிக்கஅலியும்மா கோபமாக,நான் எனது மகனிடம் கோரிக்கை வைக்கிறேன்.

நீங்கள் உங்கள் வேலையை பாருங்கள் என்று பதிலளித்து விட்டு மேடையை விட்டு கீழ் இறங்கி சென்றார்.மூதாட்டி செல்வதை பார்த்து, ரசித்தபடி முதல்வர் பினராய் விஜயன் சிரித்துக்கொண்டே இருந்தார்.இதனால் மேடை கொஞ்ச நேரத்தில் பரபரப்பு ஏற்பட்டது.

இதையும் படிங்க.!