chennireporters.com

லதா மங்கேஷ்கர் கடந்து வந்த பாதை:

1929ம் ஆண்டு, செப்டம்பர் 28ம் தேதி, மத்திய பிரதேசம் மாநிலம் இந்தூரில் பண்டிட் தீனாநாத் மங்ஷே்கர் – ஷெவந்தி மங்கேஷ்கர் ஆகியோரின் மகளாக பிறந்தார் லதா மங்கேஷ்கர்.

இவரது இயற்பெயர் ஹேமா மங்கேஷ்கர். பின்னணிப் பாடகி லதா மங்கேஷ்கர் தனது ஐந்தாவது வயதிலேயே இசையை தனது தந்தையிடமிருந்தே கற்க ஆரம்பித்தார்.

இவரது தந்தை தேர்ந்த பாடகராகவும், நாடக நடிகராகவும் இருந்ததால் அவரது இசை நாடகங்களில் நடிக்கவும் ஆரம்பித்தார்.

அமாநத் கான், பண்டிட் துளசிதாஸ் ஷர்மா மற்றும் அமான் அலி கான் சாஹிப் ஆகியோரிடமும் பாரம்பரிய இசையை முறைப்படி கற்றார்.

பள்ளிக்கு சென்று முறையான கல்வி பெறாத லதா மங்கேஷ்கர், சிறு வயதிலேயே பிரபல பாடகர் கே.எல்.சைகலிடம் இசையால் ஈர்க்கப்பட்டார்.

1942ல் இவரது தந்தை காலமான பிறகு, 13 வயதே நிரம்பிய இவருக்கு இவரது குடும்ப நண்பரான மாஸ்டர் வினாயக், தனது ‘நவ்யுக் சித்ரபட் மூவி கம்பெனி’ சார்பில் 1942ல் எடுக்கப்பட்ட “பஹிலி மங்கலா கர்” என்ற மராத்தி மொழித் திரைப்படத்தில் பாடவும், நடிக்கவும் வாய்ப்பளித்தார்.

இதன் பிறகு 1943ல் “கஜாபாவ்” என்ற மராத்தி மொழித் திரைப்படத்தில் மாதா ஏக் சபூத் கி துனியா பதல் தே து என்ற பாடல் தான் இவர் பாடிய முதல் ஹிந்தி பாடலாக அமைந்தது.

1948ல் குலாம் ஹைதர் இசையில் வெளிவந்த “மஜ்பூர்” திரைப்படமே அவரது திரையிசை வாழ்க்கையில் ஒரு திருப்புமனையை ஏற்படுத்தியது.

பின்னர் 1949ல் அசோக் குமார், மதுபாலா நடிப்பில் வெளிவந்து வெற்றி பெற்ற திரைப்படமான “மஹல்” திரைப்படத்தில் இவர் பாடிய “ஆயேகா ஆயேகா” என்ற பாடல் இவருக்கு மிகப் பெரிய வெற்றியை ஈட்டித் தந்தது.

இதனைத் தொடர்ந்து “பர்ஸாத்”, “தீதார்”, “பைஜு பாவ்ரா”, “அமர்”,உரன் கட்டோலா, “ஸ்ரீ 420”, “தேவ்தாஸ்”, “சோரி சோரி”, “மதர் இந்தியா” என 50களிலும், “முகல் ஏ ஆஸம்”, தில் அப்னா அவுர் ப்ரீத் பராய், “பீஸ் ஸால் பாத்”, “கைடு”, “ஜுவல் தீப்”, “வோ கோன் தி?” “மேரா சாயா” என 60களிலும் தொடர்ந்து.

இவரது வெற்றிப் பயணம் 77 ஆண்டுகள் கடந்தும் இன்றும் ரசிகர்களின் மனங்களில் சிம்மாசனமிட்டு அமர்ந்திருக்கிறார் லதா மங்கேஷ்கர் என்றால் அது மிகையன்று.

ஏறக்குறைய 20 இந்திய மொழிகளில் 30 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பாடல்களை பாடி உள்ளார்.தனிப்பாடல்களாக 25000 பாடல்கள் வரை பாடியிருக்கின்றார்.

அதிகமான பாடல்களைப் பாடிய பின்னணிப் பாடகர் என்று கின்னஸ் சாதனை புத்தகத்திலும் இடம் பிடித்திருக்கின்றார்.

இந்தியாவின் தலைசிறந்த இசையமைப்பாளர்கள் அனைவரிடமும் பணியாற்றிய பெருமை மிக்கவர்.

பின்னணி பாடுவதோடு ஒரு சில திரைப்படங்களை தயாரித்தும், இசையமைத்தும் இருக்கின்றார்.ராம் பாவ்னே, மராத்தா டிட்டுகா மெல்வாவா, மொஹித்யாஞ்சி மஞ்சுளா, ஸாதி மான்ஸா போன்ற படங்களுக்கு இசையமைத்துள்ளார்.வாடல், ஜாஞ்சார், காஞ்சன் கங்கா, லெகின் ஆகிய 4 படங்களை தயாரித்துள்ளார்

இதையும் படிங்க.!