மனிதர்களை படைக்கும் பிரம்மன் அல்ல இவர்.
சரித்திரம் படைத்த மனிதர்களையும் பல அரசியல் தலைவர்களையும் வடிக்கும் நிஜ பிரம்மன் சிலைகளை தன் விரல் நுனியில் செதுக்கும் கலியுக பிரம்மன் தான் இந்த இளைஞர்.
12 வயது முதல் எதையாவது வரைந்து கொண்டிருக்கும் பழக்கம் இயல்பாகவே ஏற்பட்டது இந்த கார்த்திக்கு அதன் பிறகு கொஞ்சம் கொஞ்சமாக தன் கலையின் மீது உள்ள ஆர்வத்தை அவராகவே செதுக்கி கொள்ளத் தொடங்கினார்.
செடி கொடிகள், பறவைகள், தலைவர்களின் புகைப்படங்கள் இப்படி எதையாவது ஒன்றை பேப்பரில் வரைந்து கொண்டே இருப்பார்.
தன்னுடைய திறமையை பார்த்த அவரது தாத்தா வீரபத்திரன் தனது சொந்த ஊரான கும்பகோணத்தில் இருந்து சென்னை கொசப்பேட்டை அழைத்து வந்து இங்கேயே தனது பேரனை படிக்க வைத்தார்.
படங்களை வரைவதில் ஆர்வம் கொண்டிருந்த தனது பேரனின் ஆர்வத்தை பார்த்த தாத்தா ஆர்ட் டைரக்டர் கலையின் அப்பா வேலூச்சாமியிடம் உதவியாளராக சேர்த்துவிட்டார்.
அப்போதிலிருந்தே கொஞ்சம் கொஞ்சமாக கலைகளின் நுணுக்கங்களை கற்றுக் கொள்ள ஆரம்பித்தார் கார்த்திக்.
93 ஆம் ஆண்டு அன்றைய முதலமைச்சராக இருந்த ஜெயலலிதா அறிவித்த தொட்டில் குழந்தை திட்டத்திற்காக முதன்முறையாக ஜெயலலிதாவின் சிலையை வடித்தார்.
அதுதான் அவர் முதலில் வடித்த சிலை அதன்பிறகு பல்வேறு தலைவர்களின் சிலைகளை வடித்த கார்த்தி திராவிட முன்னேற்றக் கழகத்தில் உள்ள எல்லா தலைவர்களுடைய சிலைகளையும் வடித்து விட்டேன் என்கிறார்.
பெரியார், அண்ணா,கலைஞர் உள்பட கலைஞர் குடும்பத்தில் கருணாநிதி, அவரது தந்தை முத்துவேலர், அஞ்சுகம் அம்மாள், ஸ்டாலின், உதயநிதி என ஒவ்வொருவருடைய சிலைகளையும் செய்து விட்டேன் என்கிறார்.
ஒவ்வொரு மனிதனின் வெற்றிக்குப் பின்னால் ஒரு பெண் இருக்கிறாள் என்பது எல்லோருக்கும் தெரிந்த ஒன்று தான்.
ஒரு பெரிய தலைவரின் மகனாக இருந்தாலும் தன்னுடைய முயற்சியால் பல்வேறு பதவிகளை வகித்து துணை முதலமைச்சராக இருந்த ஸ்டாலினுக்கு முதலமைச்சர் பதவி தள்ளிக்கொண்டே போனது.
தன் கணவர் முதலமைச்சராக வேண்டும் என்று வருடத்தின் 365 நாட்களிலும் வேண்டாத தெய்வம் இல்லை போகாத கோயிலும் இல்லை அவர் செய்த தியாகங்களும் யாகங்களும் சிறப்பு பூஜைகளும் இன்றைக்கு தமிழகத்தின் முதல்வராக மு.க. ஸ்டாலின் அவர்களை பதவி ஏற்க வைத்தது.
துர்கா அம்மாவின் வேண்டுதல் ஒரு காரணம் முதல்வரின் முதுகெலும்பாய் இருப்பவர் அகிலத்தை கட்டி ஆளும் சக்தி கொண்ட துர்கா அம்மாவின் சிலையை வடித்துவிட்டால் என் ஆத்மா திருப்தி அடைந்து விடும் என்கிறார்.
அது மட்டுமல்ல என் விரல்களுக்கு கொஞ்சம் ஓய்வு கொடுப்பேன் என்கிறார் இந்த கார்திக் தன்னுடைய வாழ்க்கையின் லட்சியமாக கருதுவது தமிழர்களின் மனதில் வீரத்தையும் போர் குணத்தையும் கொண்ட தலைவன் தன் இனத்திற்காக தன் குடும்பத்தை அர்ப்பணித்த தலைவன் மாவீரன் பிரபாகரனின் சிலையை செய்ய வேண்டும் என்பதே எனது ஆசை என்கிறார்.
இது தவிர தன்னுடைய சமூகம் பின்தங்கி இருக்கிறது அவர்களை தட்டி எழுப்ப வேண்டும் அவர்களுக்குள் புரையோடிக் கிடக்கும் மூடத்தனங்களுக்கு ஒரு முடிவு கட்ட வேண்டும், மதம் என்னும் மாயைக்குள் புதைந்து கிடக்கும் .
மூடத்தனம் கொண்ட மனிதர்களையும் அவர்களுடைய புத்தியையும் அறிவுக் கண்ணைத் திறக்க வேண்டுமென்று இந்த தேசத்தின் தலைசிறந்த வழக்கறிஞராக இந்திய அரசியல் சட்டத்தை வடித்த சட்டமேதை டாக்டர் அம்பேத்கரின் சிலையை வடிக்க வேண்டும் என்பதே இவரின் இலட்சிய ஆசை என்கிறார்.
அவர் அலுவலகத்தில் கம்பீரமாய் கால் மீது கால் போட்டு உட்கார்ந்து இருப்பதைப்போல ஒரு சிலை செய்ய வேண்டும் அதை இந்த உலகமே பார்த்து வியக்க வேண்டும் அந்த அளவிற்கு அவர் சிலையை வடிக்க வேண்டும் என்று சொல்கிறார்.
இந்த சிற்பி தன் பத்து விரல்களால் எத்தனையோ நிஜங்களின் உருவங்களை உயிரோட்டத்
துடன் தன் கைகளால் சிலையாய் வடித்தெடுக்கும் இந்த சிற்பி நிஜ பிரம்மன் தான்.

இதுவரை இவர் 44 ஆயிரம் சிலைகளை வடித்தெடுத்திருக்கிறார் இந்த சிற்பி கார்த்திக்.