பரபரப்பாக நடந்து முடிந்த சூப்பர் சிங்கர் 8 வது சீசனில் வெற்றியாளராக கோயம்புத்தூரை சேர்ந்த ஸ்ரீதர் சேனா தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். அவருக்கு 10 லட்சம் ரூபாய் பணமும் அனிருத் இசையில் பாட வாய்ப்பு வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டது.
கடந்த 2006ஆம் ஆண்டு முதல் இன்றுவரை சூப்பர் சிங்கர் இன்னும் புதிய பாடகருக்கான நிகழ்ச்சியை விஜய் டிவி வெற்றிகரமாக நடத்தி வருகிறது.
இதில் ஜூனியர் சீனியர் என இரு பிரிவுகள் இரு பிரிவுகளாக பிரிக்கப்பட்டு நிகழ்ச்சி நடத்தப்பட்டு வருகிறது.
அந்த வரிசையில் சீனியர் களுக்கான சூப்பர் சிங்கர் 8வது சீசனில் வெற்றியாளராக ஸ்ரீதர் சேனா தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
20 போட்டியாளர்களுடன் தொடங்கிய இந்த சீசனில் வெற்றி பெறும் அந்த போட்டியாளர் பிரபல இசையமைப்பாளர் அனிருத் இசையில் பாடுவார் என்று தெரிவிக்கப்பட்டது. அந்த வகையில் அனிருத் இசையில் விரைவில் ஸ்ரீதர் சேனா பாடுவார் என்று அறிவிக்கப்படும் எதிர்பார்க்கப்படுகிறது.
ஞாயிறு அன்று நடைபெற்ற அதன் இறுதி சுற்றில் முத்துசிற்பி, பரத், அணுஆனந்த், அபிலாஷ், ஸ்ரீதர் சேனா, மானசி ஆகிய 6 பேர் போட்டியிட்டனர்.
இசை அமைப்பாளர்கள் அனிருத், சந்தோஷ் நாராயணன், பாடகர்கள் மாணிக்கவிநாயகம், சித்தரா, பென்னி தயால், எஸ்பிபி சரண், உன்னிகிருஷ்ணன், அனுராதா ஆகியோர்களின் முன்னிலையில் நடைபெற்ற இந்தப் போட்டியில் நடுவர்களின் மதிப்பெண்களோடு மக்களின் வாக்குகளும் சேர்த்து வெற்றியாளரை தேர்ந்தெடுத்தனர்.
அதன்படி முதல் வெற்றியாளராக ஸ்ரீதர் சேனாவுக்கு ரூபாய் 10 லட்சம் பணமும், இரண்டாம் இடத்தைப் பிடித்த பரத்துக்கு ரூபாய் 3.50 லட்சமும், மூன்றாம் இடத்தை பிடித்த அபிலாஷ் ரூபாய் 2 லட்சமும், பரிசாக அறிவிக்கப்பட்டது.
தான் வெற்றி பெற்ற ரூபாய் 2 லட்சம் பணத்தை இசைக் கலைஞர்களுக்கு வழங்கப்படுவதாக மேடையிலேயே அபிலாஷ் அறிவித்துவிட்டார். மாற்றத்திற்கான போட்டியாளர் என்ற விருதை முத்துசிற்பி வழங்கப்பட்டது. அவருக்கே விஜய் டிவி ஒரு லட்சம் ரூபாய் வழங்கியது.
ஸ்ரீதர் அசத்தலான பாடகர் மட்டுமல்ல இவர் மிகவும் பிரபலமான மேடை கலைஞரும் கூட இவர் ஏற்கனவே ஜீ தமிழில் நடைபெற்ற சரிகமபதநிச நிகழ்ச்சியில் கலந்து கொண்டவர்.
வழக்கமாக கலந்துகொண்ட போட்டியாளர்களின் போட்டியாளர்களுக்கு இசை ரசிகர்கள் அளித்த வாக்குகள் என்ன என்பதை ஒவ்வொருவருக்கும் தனித்தனியாக தொகுப்பாளர்கள் பிரித்து சொல்லுவார்கள் இந்தமுறை ஸ்ரீதர் சேனாக்கு வழங்கப்பட்ட வாக்குகளும், பரத்துக்கு கொடுக்கப்பட்ட வாக்குகளும் மொத்தம் போடப்பட்ட வாக்குகள் மட்டுமே தொகுப்பாளர்கள் சொன்னார்கள்.
ஆனால் முத்து சிற்பி, அபிலாஷ், அணு, மானசி ஆகியோருக்கு வழங்கப்பட்ட வாக்குகள் என்ன என்பதை நிர்வாகம் வெளிப்படையாக சொல்லவில்லை.
8 வது சீசன் நிகழ்ச்சி 3 போட்டியாளர் களுக்காகவே நிகழ்ச்சி பார்த்த ரசிகர்கள் ஏராளம்.
நிகழ்ச்சியின் ரேட்டிங் இவர்களாலேயேஅதிக அளவில் உயர்ந்தது என்று ம் சொல்லலாம்.
ஒருவர் முத்து சிற்பி, இன்னொருவர் கானா சுதாகர், அய்யனார் இவர்கள் பாடிய பாடல்களால் தான் விஜய் டிவிக்கு ரேட்டிங் அதிக அளவிற்கு சென்றது .
இவர்களை டி.ஆர்.பி அதிகரிக்க பயன்படுத்திக்கொண்டு பின்னர் கழட்டி விட்டார்கள் என்ற குற்றச்சாட்டை முன் வைக்கிறார்கள் இசை ரசிகர்கள்.
கானா சுதாகர், புரட்சிமணி ஆகிய இருவரையும் ஃபைனல் நிகழ்ச்சியில் ஒரு பாடல் பாட வாய்ப்பு வழங்கி இருக்கலாம்.திட்டமிட்டு அவர்களை ஓரங்கட்டிவிட்டு உள் நோக்கத்தோடு ஒதுக்கி வைத்த தாகவே இசை ரசிகர்கள் குற்றச்சாட்டை முன் வைக்கிறார்கள்.
வெளிப்படைத் தன்மையோடு நடக்காத ஒரு நிகழ்ச்சியை பார்ப்பது பொதுமக்கள் முட்டாள்தனமாக தங்களது நேரத்தை வீணாக்கும் செயல்.
ஒருகுறிப்பிட்ட நிர்வாகம் கோடிக்கணக்கான பணத்தை சம்பாதிக்க விளம்பரதாரர்களின் உற்பத்தி யை பொது மக்களிடம் கொண்டு சென்று அதன் மூலம் பெரும் லாபம் அடையும் தனியார் நிறுவனங்கள் சம்பாதிக்க பாடகர்கள் உயிரை பணையம் வைத்து பாட வைத்து அவமதித்து அனுப்புகிறது விஜய் டிவி நிர்வாகம்.
மக்களையும் போட்டியாளர் களையும் விஜய் டிவி ஆசை வார்த்தை காட்டி ஏமாற்றுகிறது என்று சொன்னால் அது மிகையல்ல..இனிமேலாவது தன்னுடைய உண்மை முகத்தை சின்னத்திரையில் விஜய் டிவி வெளிப்படையாக காட்ட வேண்டும் என்பதே இசை ரசிகர்களின் விருப்பமாக இருக்கிறது.
இளம் பாடகர்களை யாரையும் ஏமாற்றாமல் நேர்மையுடன் இசை நிகழ்ச்சியை நடத்தினால் வளரும் சமுதாயத்திற்கு அது பயன் தரும்.