chennireporters.com

ஒரே துறையில் பல வருடம் குப்பை கொட்டி வரும்; கல்லா கட்டும் அதிகாரிகளை களையெடுப்பாரா டி.ஜி.பி.சைலேந்திரபாபு.

தமிழக காவல்துறையில் சட்டம் ஒழுங்கு, குற்றப்பிரிவு ,கியூ பிரிவு , நில மோசடி பிரிவு, சிலை கடத்தல் பிரிவு,மதுவிலக்கு பிரிவு,உணவு கடத்தல் பிரிவு, உளவுப்பிரிவு, சைபர் கிரைம் பிரிவு என பல பிரிவுகள் உள்ளன.

இந்த பிரிவுகளில் கடந்த 10 ஆண்டுகளில் தமிழ்நாடு முழுவதும் லாங் ஸ்டாண்டிங் எனப்படும் நீண்டகாலமாக ஒரு அதிகாரி ஒரே துறையில் ஒரே பிரிவில் 15 ஆண்டுகள் முதல் 20 ஆண்டுகள் வரையும் சிலர் பத்து ஆண்டுகள் என பலர் அதே துறையில் உட்கார்ந்து கொண்டு இருக்கின்றனர்.

சிறப்பாக பணிபுரிந்து வரும் அதிகாரிகள் கூட சட்டம் ஒழுங்கு பிரிவிற்கு வராமல் ஓ.பி அடித்து கொண்டு மக்கள் வரிப்பணத்தை வேலை பார்க்காமல் சம்பளமாக வாங்கி வருகின்றனர்.

குறிப்பாக சென்னை மதுரை கோவை நெல்லை திருப்பூர் போன்ற மாநகரங்களில் இந்த பிரிவுகளில் உள்ள அதிகாரிகள், குறிப்பாக பெண் அதிகாரிகள் டிஎஸ்பிக்கள், பெண் இன்ஸ்பெக்டர்கள், சப்-இன்ஸ்பெக்டர்கள்,தலைமை காவலர்கள் என பலர் நிரந்தரமாக ஒரே இடத்தில் வேலை செய்து வருகின்றனர்.

இதனால் நேர்மையாக விசாரணை நடக்காமல் லஞ்சம் அதிக அளவில் தலை விரித்தாடுகிறது.குறிப்பாக உணவு கடத்தல்,லஞ்ச ஒழிப்பு போலீசார்,

ஊழல்தடுப்பு பிரிவு,சிலை கடத்தல் சிசி டபிள்யூ ,கியூ பிரான்ச் ,எஸ்பிசிஐடி, சிபிசிஐடி போன்ற பிரிவுகளில் 20 ஆண்டுகாலம் வரை ஒரு மாவட்டத்தில் ஒரே காவல் நிலையத்தில்
வேலை செய்து வருபவர்களும் இருக்கத்தான் செய்கிறார்கள்.

இதனால் அந்த காவல் நிலையங்களில் தனிப்பிரிவு போலீசாருக்கு தெரியாமல் எந்தவிதமான வழக்குகளும் பஞ்சாயத்துகளும் நடக்காது.

இவர்களை அதாவது தனிப்பிரிவு காவல்துறையும் சிஐடி பிரிவிலுள்ள காவல்துறையும் இவர்கள் இருவரையும் சரி கட்டினால் தான் இன்ஸ்பெக்டரும், சப்- இன்ஸ்பெக்டரும் ஏதாவது காசு பார்க்க முடியும்.

அவர்களை கண்டு கொள்ளாமல் போனால் தனது உயரதிகாரிகளுக்கு ரகசிய தகவல்(note) போட்டு விடுவார்கள். அதாவது போட்டு கொடுத்து விடுவார்கள் இதனால் அந்த துறைகளில் லஞ்சம் ஊறித் திளைத்து இருக்கிறது.

எனவே புதிய சட்டம் ஒழுங்கு டிஜிபியாக பதவி ஏற்றிருக்கும் டாக்டர் சி. சைலேந்திரபாபு நீண்ட காலமாக ஒரே பிரிவில் உட்கார்ந்து கொண்டிருக்கும் சோம்பேறி அதிகாரிகளை பணிமாற்றம் செய்து உத்தரவிட வேண்டும்.

அதேபோல் அந்த துறையில் பணியாற்ற விருப்பமுள்ள புதியவர்களுக்கு வாய்ப்பு அளிக்க வேண்டும் என்கின்றனர் சில நேர்மையான காவல்துறை அதிகாரிகள்.

திருவள்ளூர், காஞ்சிபுரம், வேலூர் ஆகிய மாவட்டங்களில் உள்ள எஸ்.பி போலீசார், சிபிசிஐடி போலீசார் அதாவது அந்த பொறுப்பிலிருக்கும் இன்ஸ்பெக்டர், சப்-இன்ஸ்பெக்டர், சிறப்பு உதவி ஆய்வாளர், தலைமைக்காவலர் ஆகியோர்களின் ஒவ்வொருவரின் சொத்து மதிப்புகளை கணக்கிட்டால் பல கோடிகளை தாண்டும் என்கிறார்கள்.

இதையும் படிங்க.!