சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்கும் அண்ணாத்த படத்தின் இரண்டாவது சிங்கிள் பாடல் நாளை மாலை 6 மணிக்கு வெளியிடப்படும்என்று படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
இயக்குனர் சிவா இயக்கத்தில் நடிகர் ரஜினிகாந்த் நடித்துள்ள அண்ணாத்த படம் தீபாவளி அன்று திரைக்கு வர உள்ளது.
இதையொட்டி படத்தில் இசையமைப்பாளர் இமான் இசையில் மறைந்த பின்னணி பாடகர் பாடும் நிலா பாலு கடைசியாக பாடிய பாடல் நேற்று மாலை இணையதளத்தில் வெளியிடப்பட்டது.
இந்த பாடலில் அண்ணாத்த அண்ணாத்த வரேன் அதிரடி சரவெடி தெருவெங்கும் வீசு நடையில உடையில கொல கொல மாசு கூண்டிலே புயலுக்கு வேலை இல்லை என்ற வரிகள் தமிழ் ரசிகர்கள் மத்தியில் உற்சாகத்தை ஏற்படுத்தியது.
பாடல் வெளியானதை ஒட்டி நடிகர் ரஜினிகாந்த் டுவிட்டரில் தனது உருக்கமான பதிவை வெளியிட்டு உள்ளார்.
அதில் 45 வருடங்கள் என் குரலாக வாழ்ந்தவர் எஸ்.பி.பி. அண்ணாத்த படத்தில் எனக்காக பாடிய பாடலின் படப்பிடிப்பின்போது இதுதான் அவர் எனக்காக பாடும் கடைசிப் பாடலாக இருக்கும் என்று நான் கனவில் கூட நினைக்கவில்லை என்று தனது ட்விட்டர் பதிவில் குறிப்பிட்டுள்ளார்.
இந்த நிலையில் ரஜினி நடிக்கும் அண்ணாத்த படத்தின் இரண்டாவது சிங்கிள் பாடல் நாளை வெளியிடப்படுகிறது.