தலைவி படம் பார்த்த நடிகர் ரஜினிகாந்த் இயக்குனர் ஏ.எல். விஜயை தொடர்புகொண்டு படம் நன்றாக இருப்பதாக பாராட்டு தெரிவித்துள்ளார்.
முன்னாள் முதல்வரும் நடிகையுமான ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்றை அடிப்படையாகக் கொண்டு உருவானது தலைவி படம்.
இந்தப் படம் கடந்த வாரம் வெளியானது.இந்தப்படத்தில் ஜெயலலிதாவாக கங்கனா ரணவத் நடித்துள்ளார்.எம்ஜிஆர் ஆக நடிகர் அரவிந்தசாமி நடித்துள்ளார்.
விஜய் இயக்கிய இந்தப் படத்திற்கு ஜீ.வி பிரகாஷ் இசையமைத்துள்ளார்.பல விமர்சனங்களை பெற்றிருந்தாலும் இந்தப் படம் திரையரங்கு களில் சிறப்பாக ஓடிக்கொண்டிருக்கிறது.
இந்தப்படத்தில் சில சம்பவங்கள் தவறாக சித்தரிக்கப்பட்டு இருப்பதாக அதிமுக தரப்பில் ஜெயக்குமார் குற்றம்சாட்டியிருந்தார்.
இந்த நிலையில் தலைவி படம் பார்த்த நடிகர் ரஜினிகாந்த் இயக்குனர் விஜய்க்கு போன் மூலம் வாழ்த்து தெரிவித்துள்ளார்.படம் பார்த்தேன் நன்றாக இருக்கிறது என்று பாராட்டினாராம். இதனால் படக்குழுவினர் படு உற்சாகத்தில் இருக்கின்றார் களாம்.