chennireporters.com

இனி டோல்கேட்டில் கட்டணம் கொடுக்க தேவையில்லை தமிழக அரசு முடிவு.

சென்னை பெருநகரத்தை ஒட்டியிருக்கும் சுங்கச் சாவடிகளை அகற்றுவதற்கான முயற்சியில் தமிழக அரசு களமிறங்கியிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதுகுறித்த கூடுதல் தகவலைக் கீழே காணலாம்.

வாகன ஓட்டிகளுக்கு தலை வலி தரும் விஷயங்களில் டோல் கட்டணமும் ஒன்று. நாட்டில், பல டோல்கேட்டுகளில் பகல் கொள்ளை நடப்பதாக அவ்வப்போது வாகன ஓட்டிகளிடத்தில் இருந்து புகார்கள் எழும்பிய வண்ணம் இருக்கின்றன.

இதனால் சில நேரங்களில் டோல்கேட் ஊழியர் மற்றும் பொதுமக்கள் இடையே மோதல்கள்கூட ஏற்படுவது உண்டுஇந்த மாதிரியான சூழ்நிலையில் தமிழக அரசு குறிப்பிட்ட சில டோல்கேட்டுகளை நீக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இதுகுறித்த ஆய்விலேயே தற்போது தாங்கள் களமிறங்கியிருப்பதாக நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் எ.வ. வேலு தெரிவித்துள்ளார்.

சென்னை பெருநகத்தின் எல்லைக்கு உட்பட்ட பகுதியில் இருக்கும் சுங்கச் சாவடிகளை நீக்கும் பணியிலேயே தமிழக அரசு தற்போது களமிறங்கியிருக்கின்றது.

இதற்கான ஆய்வறிக்கையை ஏற்கனவே தயார் செய்து தலைமை செயலாளரிடம் ஒப்படைத்து இருப்பதாகவும், மேலும், முதலமைச்சர் முக ஸ்டாலினுடன் இதுகுறித்து ஆலோசித்து வருவதாகவும் அமைச்சர் எவ வேலு தெரிவித்துள்ளார்.

ஆகையால், விரைவில் சென்னை வாசிகள் மகிழ்ச்சியுற கூடிய தகவல் வெளியாகியும் என எதிர்பார்க்கப்படுகின்றது. பழைய திமுக ஆட்சியில் கொண்டுவரப்பட்டு, கடந்த அதிமுக ஆட்சியில் நிறைவேற்ற தவறிய திட்டங்களை மீண்டும் செயல்படுத்தும் பணியில் முதலமைச்சர் முக ஸ்டாலின் தலைமையிலான தமிழக அரசு களமிறங்கியிருக்கின்றது.

இந்த நிலையிலேயே சென்னை பெருநகர எல்லைக்கு உட்பட்ட நான்கு சுங்கச்சாவடிகளை களைக்கும் பணியில் தமிழக அரசு களமிறங்கியிருக்கின்றது.

நான்கு முக்கிய சுங்கச்சாவடிகள் நீக்கப்படுவதானால் ஏற்படும் நிதியிழப்பு மற்றும் பணியாளர்களின் பணியிழப்பு ஆகியவை குறித்து ஆய்வு செய்யப்பட்டு நல்ல முடிவு எடுக்கப்படும் என அமைச்சர் எவ வேலு தெரிவித்திருப்பது குறிப்பிடத்தகுந்தது.

ஆகையால், சென்னை பெருநகரத்தின் எல்லைக்கு உட்பட்ட சுங்கச் சாவடிகள் விரைவில் அகற்றப்படும் என்ற நம்பிக்கையில் சென்னை வாசிகளும், வாகன ஓட்டிகளும் மிகுந்த ஆர்வத்துடன் காத்திருக்கின்றனர்.

கடந்த காலங்களில் இந்த சுங்கச்சாவடிகளை அகற்றுமாறு மக்கள் கோரிக்கை மற்றும் போராட்டாங்களை முன்னெடுத்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த மாதிரியான சூழ்நிலையிலேயே திமுக அரசு சென்னையைச் சுற்றி வாகன ஓட்டிகளுக்கு தலை வலி கொடுக்கும் வகையில் அமைந்திருக்கும் சுங்கச் சாவடிகளை அகற்றும் முயற்சியில் இறங்கியிருக்கின்றது.

இத்துடன், சென்னையின் மத்திய கைலாஷ் பகுதியில் தொடங்கி சிறுசேரி வரையில் 5 புதிய மேம்பாலங்களை அமைத்திட மதிப்பீடு தயாரிக்கும் பணிகளும் மேற்பட்டு வருவதாக அமைச்சர் எவ வேலு கூறியிருக்கின்றார்.

இதையும் படிங்க.!