chennireporters.com

#river is a polluted riverbed; மாசுபடும் பாபநாசம் தாமிரபரணி ஆறு , பொது மக்கள் ஆற்றுப்படுகையை அசுத்தப்படுத்த கூடாது.

பாபநாசம் கோயிலுக்கு வரும் பொதுமக்கள், பக்தர்கள், நேர்த்திக்கடன் செலுத்துபவர்கள் அனைவரும் தாமிரபரணி ஆற்றை அசுத்தப்படுத்தக் கூடாது. நேர்த்திக்கடன் செலுத்த வருபவர்கள் தங்களுடைய பழைய துணிகளை அதற்கான ஒதுக்கப்பட்ட இடத்தில் வைக்க வேண்டும். இதனால் பாதுகாப்பு இல்லாமல் தூய்மையாக வைத்திருக்க வேண்டிய தாமிரபரணி ஆற்றை நாமே அசுத்தப்படுத்தி மனித சமூகத்தை பாழ்படுத்தி  கொள்கிறோம். அதை பொது மக்கள் தவிர்க வேண்டும் என்று பாபநாசம் தாமிரபரணி கோடைகால தூர்வாரும் பணியை மேற்கொண்டுள்ள பொதுநல அமைப்புகள் கோரிக்கை வைத்துள்ளனர்.2025பாபநாசம் தாமிரபரணி ஆற்றில் கோடை கால தூர் வாரும் தூய்மைப்பணி 19ம் நாள் 25.5.25 திருநெல்வேலிமாவட்ட ஆட்சித் தலைவர் அவர்களின் வழிகாட்டுதலின்படி, நெல்லை நீர்வளம், விக்கிரமசிங்கபுரம் நகராட்சி பாபநாசம் திருக்கோயில் துணையுடன் பாபநாசம் தாமிரபரணி ஆற்றில் கோடைகால தூர்வாரும் தூய்மைப் பணி கடந்த 25.5.25 ல்
19 வது நாளாக நடைபெற்றது. இப்பணியின் இலக்கு 21 நாட்கள் இன்னும் 2 நாட்கள் பணி நடை பெற இருக்கிறது. தூர்வாரும் தூய்மைப்பணியின் நோக்கம் துணிகள், கழிவுகளால் பாபநாசம் தாமிரபரணி ஆறு மாசுபட்டு வருகிறது. நீரில் வீசப்படும் துணிகள் 2 வகைப்படும்.

1. பக்தர்களால் தினசரி பரிகாரம் முடித்த கையோடு தம் பாவம் போவதாகக் கருதி
புதிய ஆடைகளையும், தாம் உடுத்திய ஆடைகளையும் நதியில் மற்றும் கூண்டு ,தொட்டியில் போடுவது. இவைகளை ஏலம் எடுத்தவர்கள் அப்படியே எடுத்து பலவகையில் உபயோகப்படுத்தி கொள்வார்கள்.

2 .பக்தர்கள், இறந்துபோன தம் உறவினர்கள் உபயோகித்த அனைத்து ஆடைகள்,
தலவாணி, பெட், கண்ணாடி போட்டோக்களை அப்படியே கரை யோரம், வைக்கப்பட்ட கூண்டு தொட்டிகளில் போடாமல், ஓடும் ஆற்றில் அள்ளி விடுவது. இப்படியான துணிகளே நீருக்குள் புதைந்து கிடந்து குடிக்கும் நீரை மாசுபடுத்துகிறது. இவ்வகை துணிகள் கல் இடை. பொந்து புடை, ஆழமான பகுதி, குடிநீர்உறைகிணறுகளை சுற்றி தேங்கிவிடுகிறது.

இந்த மாதிரி நீருக்குள் புதைந்து கிடைக்கும்துணிகளை ஏலதார் எடுப்பது இல்லை. காரணம் இவ்வகை நாத்தம் எடுக்கும் துணிகள் வேறு எந்த வகையிலும் உபயோகப்
படுத்த முடியாது. இதையாரிடமும் விற்க முடியாது. யாரும் வாங்க மாட்டார்கள். இந்த துணிகளில் தான் , வியாதிகளை உண்டு பண்ணும் இகோலி பாக்டீரியாக்கள் தங்கிவிடுகிறது. இவை குடிக்கும் நீரை மாசுபடுத்துகிறது. இப்படி நீரில் புதைந்து கிடக்கும் இந்த துணிகளை, ஆற்றில் நீர் வற்றிய கோடை காலத்தில் மட்டுமே
அள்ளி கரையேற்ற முடியும். ஆகவே ஆண்டுதோறும் கோடை காலத்தில் ஆற்றை தூர்வாரி தூய்மை செய்யும் பணியினை செய்துவருகிறோம்.

இன்றையப் பணிக்கு திருநெல்வேலி V.M.சத்திரம் டெவலப்மெண்ட்டிரஸ்ட்  முத்து அவர்
களும் Dr.சுரேஷ் , பேராசிரியர் அவர்களும் கலந்து கொண்டு எங்களோடு தூய்மைப் பணி
செய்தனர். பணி 1: இன்று பாபநாசம் சித்தர் சங்கம தீர்த்தபடித்துறையிலும் ஐயா கோயில் முன்பு ஆற்றுப்பகுதியிலும் துணிகள் மற்றும் இதரக்கழிவுகளை அள்ளும் பணி நடைபெற்றது. இன்று தண்ணீர் குறைவாக வந்ததால் அதிக துணிகள், கழிவுகளை எடுக்க முடிந்தது.

பணி 2: ஏற்கனவே சிறுசிறு மூட்டைகளாக கட்டிவைக் பட்ட துணிகள், கழிவுகளின் மூட்டை
களை சுமந்து நகராட்சி கிடங்கிற்கு எடுத்து செல்ல ஏதுவாக ஆற்றிலிருந்து ரோட்டிற்கு எடுத்து சென்று அப்பகுதியில் அடுக்கி வைக்கும் பணி நடை பெற்றது. இவை பின்னர் வாகனங்களில் ஏற்றி நகராட்சி கிடங்கிற்கு கொண்டு செல்ல திட்டமிடப்பட்டுள்ளது.

பணி 3: தலையணை ரோடு ஏற்றப் பகுதியின் கிழக்கு,சரிவுப்பகுதியில் அடர்ந்து வளர்ந்திருந்த முட்செடி கொடிகளை வெட்டி அகற்றுப் பணி நடந்தது.
இப்பகுதி செடிகளின் மறைவில் வழிபோக்கர்கள் மலம் ஜலம் கழித்து வந்ததால் இவை வெட்டபட்டன என்பது குறிப்பிடதக்கது.

இன்று அகற்றப்பட்ட கழிவுகள்எடை துணிகள் = 6.0 டன் பிளாஸ்டிக்கழிவுகள் = 400 kg
செருப்புகள் = 110 kg டைபர்&நாப்கின்ஸ் = 15 Kg வெட்டப்பட்ட கழிவு
செடிகள் எடை = 2.5 டன் பணிக்கு உதவி செய்தவர்கள்  ஜூலியன் ஆசிரியர்
அரசு மேல்நிலைப்பள்ளி வெள்ளாங்குளி PRC நண்பர்கள், குழு சிவந்திபுரம் முத்துராஜ், ராஜ், மீன்ஸ்டால், சந்தை பஜார்விக்கிரமசிங்கபுரம் கிரிக்கெட்மூர்த்தி புள்ளிஇயல்உதவி இயக்குநர் (ஓ) விக்கிரமசிங்கபுரம் நாளை ஐயா கோயில் கிழக்கு தாளை கசம் பகுதியில் தூய்மை பணி நடைபெற உள்ளது.

அனைவரையும் அன்புடன் அழைக்கிறோம். என்று பாபநாசம் தாமிரபரணி நதி தூர்வாரும் தூய்மைப் பணி ஒருங்கிணைப்பு கிரிக்கெட்மூர்த்தி என்பவர் அறிக்கை வெளியிட்டுள்ளார்.

இதையும் படிங்க.!