ஆந்திர மாநிலம் நெல்லூரில் உள்ள கன்னிகா பரமேஸ்வரி கோயி்லில் நவராத்திரி உற்சவம் நடைபெற்று வருகிறது.
இதனை முன்னிட்டு பத்து ரூபாய், ஐம்பது, நூறு ரூபாய் முதல் 2000 ரூபாய் நோட்டுகள் மூலம் அதாவது ரூபாய் 5 கோடியே 15 லட்ச ரூபாய் மதிப்புள்ள கரன்சி நோட்டுகளால் அம்மனை அலங்கரித்திருந்தனர்.
சாமி தரிசனம் செய்ய வந்த பக்தர்கள் ரூபாய் நோட்டுகளால் அலங்காரம் செய்யப்பட்டுள்ளதை பார்த்து பரவசம் அடைந்தனர்.