chennireporters.com

முதுமலை ஆட்டிப் படைத்த புலி சிக்கியது.

முதுமலை புலிகள் சரணாலயத்தில் புலி ஒன்று மக்கள் வசிக்கும் பகுதிகளுக்கு சென்று அச்சுறுத்தி வந்தது அதனைத் தொடர்ந்து தமிழக வனத்துறை அதிகாரிகள் தீவிரமாக புலியைப் பிடிக்க தனிப்படை அமைத்து தேடி வந்தனர்.

21 நாட்களாக போக்கு காட்டி வந்த புலி மசினகுடி, முதுமலை அதனை சுற்றியுள்ள மலை கிராமங்களில் சிசிடிவி வைத்து மயக்க ஊசி போட்டு பிடிக்க தனிப்படை தேடிவந்தனர்.

இந்நிலையில் இன்று அதிகாலையில் டி- 23 புலியை மயக்க ஊசி செலுத்தி வனத்துறையினர் பிடித்தனர்.மயங்கிய நிலையில் இருந்த புலியை வனத்துறையினர் மீட்டு மயங்கி இருந்த இடத்திலிருந்து புலியை வண்டிக்குள் ஏற்றி முதுமலைக்கு கொண்டு வந்தனர்.

மீண்டும் அங்கு ஒரு மயக்க ஊசி செலுத்தி அந்த புலி தற்போது மைசூருக்கு கொண்டு செல்லப்படுகிறது.இதுகுறித்து வனத்துறை அமைச்சர் ராமச்சந்திரன் பத்திரமாக புலியை பாதுகாக்க வண்டலூருக்கு அழைத்துவந்து பாதுகாக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று தெரிவித்தார்.

இருபத்தி ஒரு நாட்களாக பொதுமக்களை அச்சுறுத்தி வந்த புலி பிடிபட்டது.வனப்பகுதியில் உள்ள மக்களுக்கு பெரும் நிம்மதியை அளிக்கிறது.

இதையும் படிங்க.!