chennireporters.com

இரட்டை தலையுடன் பிறந்த கன்று குட்டி அதிசயமாய் பார்க்கும் கிராம மக்கள்.

இரட்டை தலையுடன் பிறந்த கன்று குட்டி.

திருவள்ளூர் மாவட்டம் ராமஞ்சேரி அடுத்த காஞ்சி பாடி கிராமத்தை சேர்ந்தவர் சுப்பிரமணி இவரது மனைவியின் பெயர் பங்கஜம் இவர்கள் கடந்த மூன்று வருடங்களாக ஜெர்சி வகையை சார்ந்த காபி கலர் பசு மாடு ஒன்றை வளர்த்து வருகின்றனர்.

அந்த மாடு இரண்டு தினங்களுக்கு முன்பு ஒரு கன்றை ஈன்றது பிறந்த கன்றுக்குட்டிக்கு இரண்டு தலையுடன் பிறந்தது.

அந்த கன்று குட்டி க்கு நான்கு கண்கள், இரண்டு காதுகள்,நான்கு கால்கள் மட்டும் உள்ளன. பிறந்து 2 நாள் ஆன நிலையில் இதுவரை கன்று குட்டி தானாக தன் தாய் பசுவிடம் பால் குடிக்காமல் படுத்த நிலையிலேயே கிடக்கிறது.

மாட்டின் உரிமையாளர் பாட்டிலில் பாலூற்றி வருகிறார் இரண்டு தலையுடன் பிறந்த இந்தக் கன்றுக்குட்டி பார்க்க கிராம பொதுமக்கள் பலர் சென்று அதிசயமாய் பார்த்து வருகின்றனர். கடவுளின் ஆசீர்வாதத்தால் கோமாதா பிறந்து இருப்பதாகவே அந்த கிராம மக்கள் நினைக்கிறார்கள்.

இதையும் படிங்க.!