கோயம்பேடு மகளிர் காவல் நிலையத்தில் புகார் கொடுக்க வந்த இளம் பெண்ணின் ஐபோனை விசாரணைக்காக வாங்கிய காவலர்கள் விசாரணை முடிந்தும் அந்த பெண்ணிடம் ஐபோனை திரும்பி ஒப்படைக்கவில்லையாம். திருடிய கோயம்பேடு அனைத்து மகளிர் காவல் நிலையத்தின் பெண் காவலர்கள் பற்றி சென்னை மாநகர காவல்துறையில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது. யார் என்ன நடந்தது என்பது குறித்து நேரடியாக சென்று நாம் விசாரணை நடத்தினோம்.
கடந்த சில வாரங்களுக்கு முன்பு தன் காதலன் தன்னை காதலித்து கர்ப்பம் ஆக்கிவிட்டார். அவருடன் என்னை சேர்த்து வைக்க வேண்டும் இல்லையென்றால் அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அனைத்து மகளிர் காவல் நிலைய இன்ஸ்பெக்டர் தாஹிராவிடம் அந்தப் பெண் புகார் கொடுக்க வந்தார். புகார் கொடுக்க வந்த பெண் நடந்தவற்றை எழுத்து மூலமாக கொடுத்துவிட்டு நடவடிக்கை எடுக்கும்படி கேட்டுக் கொண்டார்.
அதன் பிறகு போலீசார் எந்தவித நடவடிக்கையும் எடுக்காமல் காலம் தாழ்த்தி வந்ததாக கூறப்படுகிறது. அதன் பிறகு மீண்டும் பாதிக்கப்பட்ட பெண் இன்ஸ்பெக்டர் தாகிராவை சந்தித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டார் அதன் பெயரில் புகார் பதிவு செய்யப்பட்டு வழக்கு விசாரணை மேற்கொள்ளப்பட்டது.
அதன் பிறகும் வழக்கில் எந்தவித முன்னேற்றமும் இல்லாததால் இணை ஆணையர் திஷா மிட்டலிடம் பாதிக்கப்பட்ட பெண் நேரடியாக சென்று தன்னுடைய பிரச்சனைகளை புகாராக கொடுத்தார். அதன் பேரில் இணை ஆணையர் திஷாமிட்டல் அவரது அலுவலகத்திலேயே பாதிக்கப்பட்ட பெண்ணின் செல் நம்பரில் இருந்து சம்பந்தப்பட்ட பெண் இன்ஸ்பெக்டர் தாகிராவுக்கு போன் செய்ய சொல்லி பேசினார். அதில் மேடம் என்னுடைய புகார் மீது நடவடிக்கை எடுங்கள் நான் கொடுத்த 1600 ரூபாய் பணத்தையும் திருப்பிக் கொடுங்கள் என்று கேட்டதாக கூறப்படுகிறது. ஆனால் சம்பந்தப்பட்ட பெண்ணிடம் இன்ஸ்பெக்டர் தாஹிரா நீங்கள் எங்கிருந்தாலும் நேரடியாக காவல் நிலையம் வாருங்கள் நீதிபதியிடம் சென்று உங்கள் தரப்பு விளக்கத்தை சொல்லி நேரில் ஆஜராக வேண்டும் என்று கேட்டுக் கொண்டதாக கூறப்படுகிறது.
அதன் பிறகு இடைமறித்து பேசிய இணை ஆணையர் திஷாமிட்டல் இன்ஸ்பெக்டர் தாஹிராவை கண்டித்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில் இன்ஸ்பெக்டர் தாகிராவை காத்திருப்போர் பட்டியலில் வைக்க திஷாமிட்டல் உத்தரவிட்டார்.
இந்த நிலையில் பாதிக்கப்பட்ட பெண்ணின் ஐபோனை விசாரணைக்காக வாங்கிய போலீசார் அதை ஆய்வு செய்ததாக கூறப்படுகிறது. ஆனால் அந்தப் பெண்ணின் ஐபோன் மீண்டும் அவரிடம் ஒப்படைக்கப்படவில்லையாம். விசாரணைக்காக வாங்கிய காவலர்கள் அந்த போனை திருடி எடுத்து வைத்து கொண்டனர். ஐபோனை திருடிய பெண் காக்கிகள் யார் என்று புதிய பிரச்சனை எழுந்துள்ளது. 
காவல் நிலையத்தில் பணியாற்றும் பெண் காக்கிகள் ஒருவரை ஒருவர் மாற்றி மாற்றி குற்றம் சொல்லிக் கொள்ளுகிறார்களே தவிர அந்த ஐபோனை திருடு போனது எப்படி? எங்கே போனது! யார் எடுத்தார்கள் என்கிற விவரம் இதுவரை தெரியவில்லையாம். எனவே மேற்கு இணை ஆணையர் அங்கு உள்ள அனைத்து பெண் காவலர்கள் மீதும் ஒழுங்கு நடவடிக்கை எடுத்து கூண்டோடு வேறு இடத்திற்கு மாற்ற வேண்டும். 
திருடப்பட்ட ஐபோன் கண்டுபிடித்து உரியவர்களிடம் ஒப்படைக்கவேண்டும் திருடியவர்கள் மீது திருட்டு வழக்கு பதிவு செய்யவேண்டும். நேர்மையான திறமையாக வழக்கை விசாரிக்கும் திறமை கொண்ட அதிகாரிகளை அதாவது திருட்டு பழக்கம் இல்லாத நியமிக்க வேண்டும் என்கின்றனர் பாதிக்கப்பட்ட பெண் தரப்பினர்.
