திருவண்ணாமலை தீபத்திருவிழா தொடர்பாக தமிழக அரசு இந்து ஆன்மிக அன்பர்களுக்கு அதிகமான துன்பத்தையும் துயரத்தையும் தொடர்ந்து செய்து வருகிறது. இதை வன்மையாக கண்டிக்கிறேன்! வேண்டுமென்றே வன்மத்துடன் இந்து மத ஆன்மீக மக்கள் மீது அரசு கட்டுப்பாடுகளை திணிக்க முயல்வது!.
பக்தரகளின் பணத்தை பறிப்பது வன்மையாக கண்டிக்கத்தக்கச்செயல் என்று உலகத்தமிழ் தமிழர் வளர்ச்சி கரத்தின் நிறுவனத்தலைவர் நமச்சிவாயம் ராஜ்குமார் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
உலகத் தமிழ் தமிழர் வளர்ச்சிகரத்தின் நிறுவனத் தலைவர்.
நமச்சிவாயம் ராஜ்குமார்.
திருப்பரங்குன்றத்திற்கு ஒரு கூட்டம் கலவரம் ஏற்படுத்துகின்ற வகையிலே உயிர் பலியிடுகிறோம் என்று சொல்லி சைவத்தலத்திற்கு செல்லும் பொழுது அவந்களுக்கு அனுமதியும் பாதுகாப்பு தந்தது விடியல் காவல்துறையும் இந்த அரசும் தான்.
அண்ணாமலையார் பக்தர்கள் தீபத்திருநாளை முன்னிட்டு கிரிவலப் பாதையில் அன்னதானம் வழங்கி வருவது பல வருடமாக இருந்து வருகிறது.

இந்த நிலையில் அன்ன தானம் வழங்க மாவட்ட நிர்வாகம் பல கடும் கட்டுப்பாடுகளை விதிக்கிறது. இவர்களிடத்தில் வந்து அனுமதி வாங்கி வைத்துக்கொண்டு தான் அன்ன தானம் வழங்குபவர்கள் சமைக்க வேண்டும் என்கின்ற விதிமுறையை திணிக்கிறது இந்த அரசு!.
இங்கே செய் அங்கே செய் இப்படி செய் என்று சொல்லி டோக்கன் எண் கொடுக்கிறார்கள். அரசு அனுமதியும் இடத்தையும் வழங்குவதைத் தவிர மற்ற எந்த உதவியும் இவர்கள் செய்வதில்லை!ஆனால் குடும்ப படத்தை அந்த அனுமதி அறிவிப்பு விளம்பரத்தகவலில் இடம்பெற வேண்டும் வாய்மொழி உத்தரவு போடுகின்றனர் அதிகாரிகள். அதே போல கட்சிக்காரர்கள் அடம்பிடிக்கிறார்கள். இது போன்ற செயல் கடும் கண்டனத்துக்குறியது.

கடந்த ஆட்சியின் போது கிரிவலப் பாதையில் உள்ள அனைத்து கழிப்பிடங்களும், குளியல் அறைகளும் வருடம் முழுவதும் இலவசமாக இருந்தது. ஆனால் இந்த ஆட்சியில் இந்து பக்தர்களின் மலத்தில் கூட காசு பார்க்கும் ஆட்சியை வன்மையாக கண்டிக்கிறோம்.
கிரிவலம் வரும் பக்தர்களுக்கு உண்ண உணவு, குடிநீர் இலவசமாக பக்தர்கள் வழங்குகிறார்கள். ஆனால் பெண்களுக்கு அரசு பிங்க் கலர் பஸ்விடுகிறார்கள் ஆனால் அதே பக்தர்களுக்கு கக்கா போக உச்போக துட்டு கேக்குது?!.
அண்ணாமலையாரை தரிசனம் செய்யும் மக்கள் மிகவும் அவதியை அனுபவிப்பது வேதனை! அண்ணாமலையார் மீது ஆக்கிரமிப்பில் இருந்து உடனே மீட்டெடுக்காவிட்டால் அண்ணாமஸையாரை வெரும் மண் மலையாக மாற்றி வரும் ஆளும் விடியல் ஆட்சி முதல்வர், முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா அவர்கள் இந்து மக்களின் வழிபாட்டில் திருத்தம் செய்கிறேன் என்று சொல்லி ஆடு, கோழி பலியிடுவதை தடை செய்வதாக பேசி அறிவித்தார்.

அந்த உத்திரவை பக்தர்கள் கடுமையாக எதிர்த்தனர். அதனால் தனது அரசு அடைந்த தோல்வியை கண்டு தனது உத்தரவை திரும்ப பெற்றுக்கொண்டார் என்பதை இந்த அரசு நினைவில் வைத்து கொள்ளவேண்டும் என்று உலகத்தமிழ் தமிழர் வளர்ச்சி கரத்தின் நிறுவனத்தலைவர் நமச்சிவாயம் ராஜ்குமார் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
