chennireporters.com

#theft account and looted 7 crores; திருட்டுக் கணக்கு எழுதி 7 கோடி கொள்ளையடித்த திருவேற்காடு நகராட்சி சுகாதார பிரிவு அதிகாரிகள்.

#exclusive story; #special story;

திருவேற்காடு நகராட்சியில் டெங்கு பணியாளர்கள் சம்பளத்தில் திருட்டு கணக்கெழுதி பல கோடி ரூபாய் ஊழல் நடந்துள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Photo

சம்பந்தப்பட்ட சுகாதாரத்துறை அதிகாரிகள் மீது நகராட்சி நிர்வாக இயக்குனர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கை வைத்துள்ளனர் எதிர்க்கட்சியை சேர்ந்தவர்கள்.

திருவேற்காடு நகராட்சியில் கடந்த ஐந்து ஆண்டுகளாக டெங்கு மற்றும் கொசு ஒழிப்பு பணியாளர்கள் 105 பேர் பணியாற்றி வருகின்றனர். அதாவது விதைத்தாய் மகளிர் குழுவில் 30 உறுப்பினர்களும் ரைட் கேர் என்ற மகளிர் குழுவில் 25 உறுப்பினர்களும் ராணி அண்ணா நகர் பகுதி குழு என்கிற அமைப்பில் 25 பணியாளர்களும் பேபி ஸ்ரீ என்கிற குழுவில் 25 பணியாளர்களும் பணியாற்றி வருகின்றனர். ஆக மொத்தம் 105 பேர் டிபிசி பணியாளர்களாக பணியாற்றி வருகின்றனர்.

Tamil Nadu's Chief Minister Unveils Ambitious Women's Welfare Scheme

ஆனால் தற்போது தினமும் பணிக்கு வருகிறவர்கள் வெறும் 40 பேர் மட்டும். 65 பேர் பணிக்கு வருவதில்லை ஆனால் திருவேற்காடு நகராட்சி சுகாதார பிரிவு அதிகாரிகள் 105 பேர் பணிக்கு வருவதாக திருட்டு கணக்கு எழுதுகிறார்கள். தொடர்ந்து எழுதியும் வருகிறார்கள்.

குருசாமி சுகாதார ஆய்வாளர் திருவேற்காடு

அதாவது அரசு நாள் ஒன்றுக்கு ஒரு பணியாளருக்கு வழங்கும் சம்பளம் 490 ரூபாய் ஆனால் சுகாதாரத்துறை அதிகாரிகள் வழங்கும் சம்பளம் பணியாளர் ஒருவருக்கு 270 ரூபாய் மட்டும் தான் வழங்குகிறது.

கணேசன் சுகாதார அலுவலர்

அதுவும் 40பது பணியாளர்களுக்கு மட்டும் தான். அதாவது ஒரு ஊழியருக்கு வழங்கப்படும் 490 தின கூலியில் ஒருவர் சம்பளத்தில் 220 ரூபாய் கொள்ளை அடிக்கப்படுகிறது.

E.கிருஷ்ணமூர்த்தி திருவேற்காடு நகர மன்ற தலைவர்

ஏற்கனவே தினமும் திருவேற்காடு நகராட்சிக்கு பணிக்கு வரும் டெங்கு கொசு பணியாளர்கள் 105 என்று கணக்கு எழுதப்பட்டுவருகிறது .ஆனால் வேலைக்கு வருபவர்கள் வெறும் 40 நபர்கள் மட்டும்தான். மீது உள்ள 65 நபர்கள் வேலைக்கு வருவதே இல்லை அவர்களுக்கு வழங்கப்படும் 490 ரூபாய் சம்பளம் முழுவதுமாக கொள்ளையடிக்கப்படுகிறது.

சுகாதார ஆய்வாளர் பிரகாஷ் திருவேற்காடு

அதாவது 65 பணியாளர்கள் வேலைக்கு தினமும் வருவதாக  கணக்கு எழுதி அவர்களுக்கு வழங்கப்படும் சம்பளத்தை அதாவது ஒரு நாள் ஒன்றுக்கு  65 பணியாளர்களுக்கான சம்பளம் 31850 ரூபாயை அதிகாரிகளும் திமுக சேர்மனும் கொள்ளையடிப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

நகராட்சி ஆணையர் என்.தஷ்ணமூர்த்தி

65 பணியாளர்களுக்குஒரு நாள் ஒன்றுக்கு சம்பளம் 31,850 என்றால் ஒரு மாத சம்பளம் 8 லட்சத்து 28 ஆயிரத்து 100 ரூபாய்.  இந்த முழு பணமும் வேலைக்கு வந்ததைப் போல கடந்த ஐந்து ஆண்டுகளாக திருவேற்காடு நகராட்சி சுகாதாரத்துறை அதிகாரிகள் திருட்டு கணக்கெழுதி இதுவரை 5 கோடியே 82 லட்சத்து  85 ஆயிரத்து 500 ரூபாய் கொள்ளை அடித்து உள்ளனர். என்ற தகவல் வெளியாகி உள்ளது. இது வேலைக்கு வராதாவர்கள் கணக்கில் அடித்த கொள்ளை. 

இது இப்படி இருக்க நகராட்சிக்கு வேலைக்கு வந்து கொண்டிருக்கும் ஊழியர்கள்  40 பணியாளர்களுக்கு நபர் ஒருவருக்கு  நாள் ஒன்றுக்கு அரசு வழங்கும் சம்பளம் 490 ரூபாய். அந்த வகையில் மொத்தம் 19600 ரூபாய் ஆகும் ஆனால் அதில்  அவர்களுக்கு அதிகாரிகள் தினமும் வழங்கும் சம்பளம் நபர் ஒன்றுக்கு 270 ரூபாய் மட்டும் தான்.  நபர் ஒருவருக்கு ஒரு நாளில் 220 ரூபாய் கொள்ளையடிக்கப்படுகிறது.

அந்த வகையில்  நாள் வன்றுக்கு 40 ஊழியர்களிடம் 8800 ரூபாய் கொள்ளயடிக்கப்படுகிறது. அந்த அடிப்படையில் கடந்த ஐந்து ஆண்டில் மட்டும் ஒரு கோடியே 61 லட்சத்து 4 ஆயிரம் ரூபாய் கொள்ளையடித்துள்ளனர்.  ஆக மொத்தம் இதுவரை அதிகாரிகள் அடித்த கொள்ளை பணம் 7கோடியே 41 லட்சத்து 89500 ரூபாய் கொள்ளையடிக்கப்பட்டுள்ளது. 

ஆல்பர்ட் ராஜ் திருவேற்காடு சுகாதாரத்துறை அலுவலர்

இந்த ஊழலில் முக்கிய பங்கு வகிக்கும் திருவேற்காடு நகராட்சி ஆணையர் தட்சணாமூர்த்தி மற்றும்  சுகாதாரப்பிரிவு அதிகாரிகளான பிரகாஸ் மற்றும் குருசாமி  மற்றும் திமுக சேர்மன் கிருஷ்ணமூர்த்தி ஆகியோர் விளக்கமளிக்கவேண்டும் அவர்கள் அளிக்கும் விளக்கத்தையும் நாம் பதிவு செய்ய தயாராக ஒருக்கிறோம். 

 

Quality of Chennai waterways will improve substantially by 2025, says K.N. Nehru - The Hindu

அமைச்சர் கே.என். நேரு

இந்த மேகா ஊழல் மோசடி குறித்து அமைச்சர் கே.என். நேரு விசாரணை நடத்தி அதிகாரிகள் மூது ஒழுங்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று என்கின்றனர் எதிர்கட்சியினர். 

தமிழக நகராட்சிகளின் நிர்வாக இயக்குனர் ஷேக் அப்துல் ரஹமான் நேரடியாக திருவேற்காடு நகராட்சி அலுவலகத்திற்கு வந்து விசாரணை நடத்தி வேண்டும் அப்பொது தான் ஊழல் அதிகாரிகளின் திருட்டு தனம் வெளிச்சத்திற்கு வரும் என்கின்றனர். 

இதையும் படிங்க.!