முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மரணத்தில் தனக்கு எந்த வித சந்தேகமும் இல்லை என்று ஆறுமுகசாமி ஆணையத்தில் ஓ. பன்னீர்செல்வம் சாட்சியம் அளித்துள்ளார்.
பன்னீர்செல்வம் இப்படி வாக்குமூலம் அளித்தது தமிழக அரசியலில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது .
எடப்பாடி முதலமைச்சராக இருந்தபோது ஒருமுறை கூட ஆறுமுகசாமி ஆணையத்தில் ஆஜராகாத பன்னீர்செல்வம் திமுக ஆட்சிப் பதவி ஏற்றதும் முதல் முறையாக ஆறுமுகசாமி ஆணையத்தில் ஆஜராகி சாட்சியம் அளித்துள்ளார்.
இந்த சாட்சியத்தில் தனக்கு எந்தவித சந்தேகமும் இல்லை என்று வாக்குமூலம் அளித்து இருப்பது அரசியல் வட்டாரத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
video credits nakkheeran பொதுமக்களின் சந்தேகம் வலுத்ததநாள் தான் நான் கோரிக்கை வைத்தேன்.என்று ஆறுமுகசாமி ஆணையத்தில் ஓ பன்னீர்செல்வம் கூறியுள்ளார்.
ஜெயலலிதா மரணத்தில் எனக்கு தனிப்பட்ட முறையில் எந்த சந்தேகமும் இல்லை என்று ஓ.பி.எஸ். சாட்சியம் அளித்தார்.
பின்னர் பத்திரிகையாளர்களிடம் பேசிய பன்னீர்செல்வம்சசிகலா மீது எனக்கு மரியாதையும் அபிமானமும் இன்று வரை உள்ளது என்று தெரிவித்தார் மீண்டும் ஓ.பி.எஸ். சசிகலா விடம் தஞ்சம் அடைவார் என்று அரசியல் வல்லுனர்கள் தெரிவிக்கின்றனர்.