மதுரை இன்ஸ்பெக்டர் வீட்டில் இரண்டு கோடி ரூபாய் மதிப்புள்ள தங்கம் மற்றும் பணம் கொள்ளையடிக்கப்பட்டுள்ளது. ஒரே ஒரு ஆதாரம் இல்லாமல் திருடர்கள் கொள்ளையடித்த்தால் போலிசாருக்கு எந்த வித எவிடேன்ஸ்சும் கிடைக்காமல் தவித்து வருகின்றனர்.
திண்டுக்கல் மாவட்டம், விளாம்பட்டி காவல் நிலையத்தில் இன்ஸ்பெக்டராகப் பணியாற்றி வருபவர் ஷர்மிளா இவர் மதுரை அருகே பாசிங்காபுரம், மீனாட்சி நகரில் தனது குடும்பத்துடன் வசித்து வருகிறார்.
இன்ஸ்பெக்டர் ஷர்மிளா
இவரது வீட்டில் 450 பவுன் நகைகள் திருடப்பட்ட சம்பவம் நடந்து 110 நாட்களை கடந்துவிட்ட நிலையில், இதுவரை யார் திருடினார்கள், எப்படி திருட்டு நடந்து என்பது குறித்து எந்த துப்பு கிடைக்கவில்லை. இதனால் போலீசாருக்கு சவாலாக உள்ளதாம். திண்டுக்கல் மாவட்டம், விளாம்பட்டி காவல் நிலையத்தில் இன்ஸ்பெக்டராகப் பணியாற்றி வரும் 42 வயதாகும் ஷர்மிளா, மதுரை அருகே பாசிங்காபுரம், மீனாட்சிநகரில் வசித்து வருகிறார்.
இவர் கணவர் உதய கண்ணன் வெளிநாட்டில் வேலை செய்து வருகிறார். இதனால் ஷர்மிளா தன் தாயாருடன் மீனாட்சி நகர் வீட்டிலேயே வசித்து வருகிறார். இந்நிலையில், கடந்த மே மாதம் வீட்டில் மராமத்துப் பணிகள் நடந்து வந்தது. பணிகள் முடிந்த நிலையில், ஷர்மிளாவின் தாயார் வெளியூர் சென்றுவிட்டார். காவல் ஆய்வாளர் ஷர்மிளாவின் வீடு பூட்டப்பட்டிருந்தது. “”இது” மட்டும் நடந்தால் போதும்..
தங்கம் விலை பட்டுனு சரியும்.. போட்டு உடைத்த ஆனந்த் சீனிவாசன்” இந்த நிலையில் வேலை முடிந்து காவல் ஆய்வாளர் வீடு திரும்பிய போது, 400 பவுன் நகைகள், ரூ.5 லட்சம் ரொக்கம் திருடப்பட்டதாக கூறப்பட்டது. இது தொடர்பாக செய்திகள் வெளியாகி பெரும் பரபரப்பு ஏற்பட்டது. திருட்டு சம்பவத்தை விட, காவல் ஆய்வாளர் வீட்டில் 400 பவுன் நகையா என்று விவாதப் பொருளாக மாறியது.
இதனிடையே விளாம்பட்டி காவல் ஆய்வாளர் ஷர்மிளா அளித்த புகாரின்படி 250 பவுன் நகைகள், ரூ.5 லட்சம் ரொக்கம் திருடப்பட்டதாக வழக்கு பதிவு செய்யப்பட்டது. இது தொடர்பாக மதுரை மாவட்ட எஸ்.பி. அரவிந்த் உத்தரவின்பேரில், 3 தனிப் படைகள் அமைக்கப்பட்டு, தீவிர விசாரணை நடந்து வருகிறது. இதனிடையே வழக்கை விசாரணை நடத்தி வந்த டிஎஸ்பி, இன்ஸ்பெக்டர்கள் பணியிட மாறுதலால் வேறு இடங்களில் பணிபுரிகிறார்கள்.
தற்போது புதிதாக டிஎஸ்பி, ஆய்வாளர்கள் பொறுப்பேற்றுள்ளனர். சம்பவம் நடந்து 110 நாட்களை கடந்துவிட்ட நிலையில், இதுவரை எப்படி குற்றவாளிகள் திருடினார்கள், எப்படி தப்பிச்சென்றார்கள், அவர்கள் யார் என்பது குறித்து எந்த துப்பும் கிடைக்கவில்லை. திருட்டு நடந்து 4 மாதங்களை நெருங்கியும், எந்த தடையமும் இதுவரை கிடைக்காதது போலீஸாருக்கு சவாலை ஏற்படுத்தி உள்ளது. இதற்கு முக்கிய காரணம் என்னவென்றால், காவல் ஆய்வாளர் ஷர்மிளா வீட்டில் இருந்த சிசிடிவி கேமரா செயல்பாட்டில் இல்லை. அந்த பகுதிகளிலும் சிசிடிவி கேமராக்கள் இல்லை. இதனால் கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டவர்களை அடையாளம் காண முடியாத நிலை இருக்கிறது. இதனால் வீட்டுக்கு பக்கத்து ஏரியாக்கள், வீட்டை சுற்றியுள்ள பகுதிகளில் உள்ள சிசிடிவி பதிவுகளைப் பார்த்து அதிகாரிகள் ஆய்வு செய்து வருகிறார்கள்.
இதுதவிர வீட்டுக்கு அருகே இயங்கும் டாஸ்மாக் பார்களில் உள்ள சிசிடிவிகளின் பதிவுகளையும் கண்காணித்து வருகிறார்கள். இதுவரை எந்த துப்பும் கிடைக்காதது போலீசாருக்கு சவாலை ஏற்பத்தி உள்ளது. திருடர்களின் செல்போன் பயன்பாடு, திருடர்களின் வாகனங்கள், திருடர்கள் எப்படி திட்டமிட்டார்கள் என்பதற்கான தடயங்கள் இல்லாத நிலையில், தொடர்ந்து போலீசார் விசாரித்து வருகிறார்கள்.