chennireporters.com

திருப்பதி மலையருகே புதையல் இருப்பதாக சுரங்கம் அமைத்த 6 பேர் கைது.

tpt
வைர நகைகள் எடுக்க தோண்டப்பட்ட சுரங்கம்.

ஆந்திர மாநிலம் திருப்பதி எம். ஆர். பள்ளியி பகுதியை சேர்ந்தவர் கட்டிட மேஸ்திரி மக்கு நாயுடு உலக பிரசித்தி பெற்ற திருப்பதி ஏழுமலையான் கோவில் உள்ள திருமலை சேஷாசலம் வனப்பகுதியில் புதையல் இருப்பதாக நெல்லூரை சேர்ந்த ராமையா என்கிற சாமியார் மக்கு நாயுடுவிடம் தெரிவித்துள்ளார்.

120 அடி ஆழம் வரை சுரங்கப்பாதை தோன்றினால் இரண்டு அறைகளில் வைரம், வைடூரியங்கள் தங்கம், பணம் கிடைக்கும் என்று கூறியுள்ளார்.

இதனை நம்பிய மக்கு நாயுடு தமிழ்நாடு கர்நாடகா ஆகிய மாநிலங்களை சேர்ந்த கூலி ஆட்களை வைத்து சேஷாசலம் வனப் பகுதியில் சுரங்கப் பாதை தோண்டும் பணியை ஒரு மாதத்திற்கு முன்பு தொடங்கியிருக்கிறார்.

tpt
வைர நகைகள் எடுக்க தோண்டப்பட்ட சுரங்கம்.

ஒரே ஆட்களை வைத்து வேலை செய்யாமல் புதிது புதிதாக ஆட்களை மாற்றி கடந்த ஒரு ஆண்டாக சுரங்கம் தோண்டும் பணியை செய்து வந்துள்ளார்.

சுமார் 80 அடி ஆழம் வரை பள்ளம் தோண்டிய பிறகு பெரிய பாறை ஒன்று இருந்துள்ளது.

அதை அப்புறப்படுத்தி விட்டு மீண்டும் சுரங்கம் அமைத்தவுடன் நகைகள் இருக்கும் இடம் தெரிந்து விடும் என்றனர்.

பாறையை அகற்ற முடியாததால் கர்நாடகாவிலிருந்து வெடி வைத்து பாறை தகர்க்கும் 5 கூலி ஆட்களை அழைத்து வந்து கடந்த 2 தினங்களுக்கு முன்பு சேஷாசல வனப்பகுதிக்கு சென்றுள்ளார்.

இதைப் பார்த்த பொதுமக்கள் திருமலையில் உள்ள போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

அதன் பேரில் வழக்குப் பதிந்த திருமலை போலீசார் மக்கு நாயுடு மற்றும் கர்நாடகாவை சேர்ந்த கூலித் தொழிலாளிகள் 5 பேரை கைது செய்தனர்.

சம்பவ இடத்திற்கு அவர்களை அழைத்துச் சென்று ஆய்வு செய்த போலீசார் அங்கு 80 அடி தூரத்திற்கு சுரங்கப் பாதை அமைக்கப்பட்டு இருப்பது தெரியவந்தது.

ap police
குற்றவாளி களுடன் போலீஸ் அதிகாரிகள்.

இதையடுத்து போலீசார் 6 பேரையும் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

வனத்துறை, தேவஸ்தான விஜிலென்ஸ், மற்றும் போலீசார் என மூன்று துறையினரும் 24 மணி நேரமும் கண்காணித்து வர கூடிய நிலையில் இவர்களையும் தாண்டி மக்கு நாயுடு மற்றும் கூலி ஆட்கள் எப்படி கடந்த ஒரு ஆண்டாக அந்தப் பகுதிக்குச் சென்று சுரங்கம் அமைக்கும் பணியை எப்படி செய்தார்கள் என்று தெரியவில்லை.

மேலும் இதுதொடர்பாக
போலீசார் சிறப்பு விசாரணைக் குழு ஒன்றை அமைத்து தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் நீதிமன்ற காவலில் உள்ள மக்கு நாயுடுவை போலீசார் காவல் விசாரணை எடுத்து விசாரிக்க இருப்பதாக தெரிகிறது.

அந்தப் பகுதியில் சுரங்கம் அமைத்த செய்தி பெரும் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.

இதையும் படிங்க.!