chennireporters.com

#Thirumala Milk Manager Naveen’s mysterious death; திருமலா பால் மேனேஜர் நவீன் மர்ம மரணம். காரணம் யார் எடப்பாடி கேள்வி?

சென்னை “திருமலா” பால் நிறுவனத்தில் மேலாளராக பணிபுரிந்து வந்த நவீன் பொலினேனி என்பவர், 45 கோடி ரூபாய் நிறுவனப் பணத்தை கையாடல் செய்ததாக ஏற்பட்ட புகாரின் அடிப்படையில், வழக்கு பதியாமல் அவர் விசாரிக்கப்பட்டதாகவும், அதன் பின்னர் அவர் மர்மமான முறையில் தூக்கிட்டு இறந்ததாகவும் செய்திகள் வருகின்றன. நவீன் தூக்கில் இருந்த குடிசையில் எந்த Chair-ம் இல்லை; அவரின் கைகள் பின்புறமாக கட்டப்பட்டு இருந்தன என்று செய்திகள் வருகின்றன. கைகள் கட்டப்பட்ட ஒருவர், Chair இல்லாமல் எப்படி தூக்கில் தொங்க முடியும்?

இந்த வழக்கின் அடிப்படையான கேள்வி- காவல்துறை வழக்கு பதியாமல், எதன் அடிப்படையில் விசாரணை மேற்கொண்டது? அதுவும், கொளத்தூர் துணை ஆணையரே நேரடியாக விசாரித்ததாக சொல்லப்படுகிறது. இன்னும் அஜித்குமார் மரணத்தின் ஈரம் கூட காயவில்லை. அதற்குள் மீண்டும் ஒரு மரணம் சந்தேகத்தை ஏற்படுத்தும் வகையில் அமைந்துள்ளது.

காவல்துறை விசாரணைகள் சந்தேகத்திற்கு உரியதாக மாறி வருவதற்கு என்ன பதில் வைத்துள்ளார். http://@mkstalin?

நிதி மேலாண்மை பற்றி நான் கேட்ட ஒரு கேள்வியை, கண், காது, மூக்கு வைத்து திசைதிருப்பி சித்தரிப்பதில் இருந்த முனைப்பு, ஸ்டாலினுக்கோ, அவரின் திமுக அரசுக்கோ, ஒரு முறையாவது சட்டம் ஒழுங்கைப் பற்றிய கேள்விகளுக்கு பதில் சொல்வதற்கு இருந்ததா?

திருமலா பால் நிறுவன மேலாளர் மர்ம மரணம்: குறுக்கீடு இல்லாத நேர்மையான விசாரணை  - வலியுறுத்தும் இபிஎஸ்! - mysterious death of tirumala milk treasury  manager eps insists on ...

காவல்துறை நிர்வாகம் செய்யத் தெரியாத பொம்மை முதல்வர், தன் தொகுதி உள்ளடக்கிய காவல் மாவட்டத்தில் நடந்துள்ள இச்சம்பவத்திற்கு என்ன விளக்கம் தரப் போகிறார்? நவீன் மர்ம மரணம் குறித்து எந்தவித குறுக்கீடும் இல்லாமல் நேர்மையான விசாரணை நடத்தப்பட வேண்டும்; குறிப்பாக காவல்துறை வழக்கு பதியாமல் விசாரணை நடத்தியது குறித்து தீர விசாரித்து உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என ஸ்டாலின் மாடல் திமுக அரசை வலியுறுத்துகிறேன் என்று அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி அறிக்கை வெளியிட்டுள்ளார்.

சென்னையில் உள்ள திருமலா பால் நிறுவனத்தில் கடந்த 3 ஆண்டுகளாக மேலாளராக வேலை செய்து வந்த நவீன் பஞ்சலால் என்பவர் 45 கோடி ரூபாய் கையாடல் செய்ததாக புகார் எழுந்தது. இதை கண்டுபிடித்த திருமலா பால் நிறுவன தலைமை அதிகாரிகள் போலீசில் புகார் அளித்தனர். புகாரை தொடர்ந்து எந்த நேரமும் கைது செய்யப்படலாம் என்கிற நிலையில் மேலாளர் நவீன், வாழ்க்கையை முடித்துக் கொண்டதாக கூறப்படுகிறது. ஆனால் கைகள் கட்டப்பட்ட நிலையில் உடல் மீட்கப்பட்டதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

திருமலா பால் நிறுவனத்தின் மேலாளர் நவீன் பொல்லினேனி தற்கொலை | Tirumala Milk  Company Manager Naveen Pollineni commits suicide - Tamil Oneindia

தமிழ்நாடு மற்றும் ஆந்திராவில் மிகவும் பிரபலமான தனியார் பால் நிறுவனமான திருமலா பால் நிறுவனம் சென்னை மாதவரம் பொன்னியம்மன் மேடு பகுதியில் செயல்படுகிறது.இந்த நிறுவனத்தில் புழல் பிரிட்டானியா நகர் முதல் தெருவில் குடும்பத்துடன் வசித்து வந்த 37 வயதாகும் நவீன் பஞ்சலால் என்பவர் கடந்த 3 ஆண்டுகளாக மேலாளராக வேலை செய்து வந்தார். இவரது சொந்த ஊர் ஆந்திர மாநிலம் கிருஷ்ணா மாவட்டம் ஆகும்.  திருமலா பால் நிறுவனத்தின் வருடாந்திர வரவு-செலவு கணக்குகளை அந்த நிறுவன அதிகாரிகள் சரி பார்த்தனர். அப்போது ரூ.45 கோடி கையாடல் செய்யப்பட்டு இருப்பதை கண்டுபிடித்திருக்கிறார்கள்.

திருமலா பால் நிறுவன மேலாளர் தற்கொலை சம்பவம்; காவல்துறை விளக்கம்!

இது தொடர்பாக திருமலா பால் நிறுவனத்தின் சட்ட ஆலோசகர்கள் கொளத்தூர் துணை கமிஷனர் பாண்டியராஜனிடம் புகார் அளித்தனர். இது குறித்து தனிப்படை அமைக்கப்பட்டதாக கூறப்படுகிறது. பணத்தை தருவதாக ஒப்புதல் தனிப்படை போலீசார், பால் நிறுவனத்தின் மேலாளரான நவீன் பஞ்சலாலை தொடர்பு கொண்டு விசாரித்தனர். அப்போது அவர், ரூ.45 கோடி கையாடல் செய்ததை ஒப்புக்கொண்டதுடன், அந்த பணத்தை திருப்பி செலுத்தி விடுவதாக கூறியிருந்தாராம். இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு வீட்டில் உள்ள தனது அறையில் நவீன் பஞ்சலால் வாழ்க்கையை முடித்துக் கொண்டார். நேற்று காலையில் அவரது அறை கதவு நீண்டநேரமாக திறக்கப்படவிலலை. நவீன் இருந்த நிலை இதனால் சந்தேகம் அடைந்த குடும்பத்தினர் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்துள்ளனர்.

45 கோடி எங்கே? சென்னையில் திருமலா பால் மேலாளர்.. கைகள் கட்டப்பட்ட நிலையில்  உடல் மீட்பு | Who is the police officer involved in the Tirumala Milk  Manager case in Chennai? - Tamil Oneindia

அவர் அங்கு துணியால் தொங்கிய நிலையில் உயிரிழந்து கிடந்தார். இதுபற்றி உடனே போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். இந்த சம்பவத்தை அறிந்து வந்த புழல் போலீஸ் இன்ஸ்பெக்டர் ரஜினிகாந்த் மற்றும் போலீசார் நவீன் பஞ்சலால் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக சென்னை அரசு ஸ்டான்லி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். நவீன் முடிவு ஏன் பணம் கையாடல் செய்த விவகாரம் பால் நிறுவனத்துக்கு தெரிந்து விட்ட நிலையில், போலீசில் புகார் செய்துவிட்டனர். தன்னை போலீசார் கைது செய்து விடுவார்களோ என பயந்து போன நவீன் பஞ்சலால் உயிரை விட்டு இருக்கலாம் என்று போலீசார் நடத்திய விசாரணையில் தெரியவந்துள்ளது. மேலும் இதுபற்றி போலீசார் வழக்குப்பதிவு செய்து, பணம் கையாடலில் வேறு யாருக்காவது தொடர்பு உள்ளதா? என விசாரித்து வருகிறார்கள். இது ஒருபுறம் எனில் உடல் கைகள் கட்டப்பட்ட நிலையில் மீட்கப்பட்டுள்ளதாக கூறப்படுவதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. அவர் மரணம் சந்தேக மரணம் என்று வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

தனியார் பால் நிறுவன மேலாளரிடம் விசாரணை நடத்தப்பட்டதா? காவல் ஆணையர்  அடுக்கடுக்கான கேள்வி!

போலீஸ் துணை கமிஷனருக்கு தொடர்பு? தனியார் பால் நிறுவன மேலாளர் விவகாரத்தில், சென்னையில் உள்ள ஒரு போலீஸ் துணை கமிஷனர் ஒருவருக்கு தொடர்புபடுத்தி சமூக வலைதளங்களில் பல்வேறு தகவல்கள் உலா வருகிறது. விசாரணை என்ற பெயரில் தாக்கப்பட்டதாக கூறப்படுகிறது. இந்த விவகாரம் சென்னை மாநகர போலீ்ஸ் கமிஷனர் அருணுக்கு சென்ற நிலையில், அவர் உடனே விசாரிக்க உத்தரவிட்டுள்ளார். மேற்கு மண்டல இணை கமிஷனர் முழுமையாக விசாரணை நடத்தி அறிக்கை தாக்கல் செய்யும்படி உத்தரவிட்டிருக்கிறார்.விசாரணையின் முடிவில் தான் யாருக்கு என்ன தொடர்பு என்பது தெரியவரும். அதேநேரம் அந்த 45 கோடி பணம் எங்கே என்ற கேள்வியும் எழுகிறது. அதுபற்றியும் விசாரணை நடந்து வருகிறது.

இதையும் படிங்க.!