chennireporters.com

திருவள்ளூர் அருகே நடந்த சாதி ஆணவப் படுகொலையை உயர் நீதிமன்ற நீதிபதி முன்பாக விசாரணை நடத்த வேண்டும் திருமாவளவன் எம்.பி. கோரிக்கை.

தமிழகத்தில் சாதி ஆணவ படுகொலைக்கு எதிராக சட்டம் கொண்டு வர வேண்டும் என்று திருமாவளவன் எம்.பி. முதல்வர் ஸ்டாலினுக்கு கோரிக்கை வைத்தார்.

திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி அடுத்த ஆவூர் கிராமத்தை சேர்ந்தவர் அமுலு இவரும் ஆரணி அருகே உள்ள காரணி என்கிற கிராமத்தை சேர்ந்த கௌதமன் என்பவரும் காதலித்து 7 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் செய்து கொண்டனர்.

அந்த திருமணத்தை பதிவு திருமணமாக பதிவு செய்தனர்.அமுலு தலித் சமூகத்தைச் சேர்ந்தவர் நர்சிங் படித்துள்ளார்.கௌதமன் வன்னியர் சமூகத்தை சார்ந்தவர்.

திருமணமான முதலே தலித் பெண்ணான அமுலுவை கௌதமன் குடும்பத்தினர் ஏற்றுக் கொள்ள விரும்பவில்லை.அதனால் தனியாக வாடகை வீடு எடுத்து வசித்து வந்தனர்.

அமுலுவிற்கு 45 தினங்களுக்கு முன்பாக ஒரு பெண் குழந்தை பிறந்தது.இந்நிலையில் கடந்த செப்டம்பர் 17ம் தேதி தனது தாத்தா இறப்பு க்கு சொந்த ஊருக்கு சென்ற கௌதமன் வீட்டிற்கு வரவில்லை .

இதுகுறித்து என்ன நடந்தது என்று தனது மாமனார் வீட்டிற்கு தனது சகோதரனை அனுப்பி வைத்தார் அமுலு.தன் சகோதரன் காரணி கிராமத்திற்கு சென்றவுடன் அங்கு கௌதமனுக்கு கண்ணீர் அஞ்சலி போஸ்டர் ஒட்டப்பட்டுள்ளது.

இதுகுறித்து உடனடியாக தனது தங்கைக்கு செல்போன் மூலம் தகவல் தெரிவித்தார் அமுலுவின் அண்ணன்.அதிர்ச்சியடைந்த அமுலு அழுது புரண்டு என்ன நடந்தது என்று யூகிக்க முடியாமலேயே போனது.

பிறகு அந்த கிராமத்தை சேர்ந்த சிலரை விசாரித்தபோது ஒரு சில தகவல்கள் கிடைத்தன.

அதனைத் தொடர்ந்து திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள ஆரணி காவல் நிலையத்தில் அமுலு புகார் அளித்தார்.அந்த புகாரில் போலீசார் 4 நாட்களாக எந்த விதமான நடவடிக்கையும் எடுக்கவில்லை.

இதுதொடர்பாக தீண்டாமை ஒழிப்பு முன்னணியினர் டி.எஸ்.பி. க்கு தகவல் தெரிவித்து உடனடியாக வழக்குப்பதிவு செய்யவில்லை என்றால் ஆர்ப்பாட்டம் நடத்துவோம் என்று சொன்னதின் பேரில் புகார் மனு பெறப்பட்டது.

அதன் பிறகு இந்த செய்தி விடுதலை சிறுத்தைகளின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டது.

திருவள்ளூர் வடக்கு மாவட்ட செயலாளர் அறம் பட இயக்குனர் கோபி நடந்தது என்ன என்பதை கேட்டு அறிந்து கொண்டு திருவள்ளூர் மாவட்ட எஸ்.பி. வருண் குமாரிடம் புகார் அளித்திருந்தார்.அந்தப் புகாரின் அடிப்படையில் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

இதுதொடர்பாக பாதிக்கப்பட்ட அமுலு குடும்பத்தினரையும் கோபியும் நேரடியாக விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் சந்தித்து நடந்தவற்றை தெரிவித்தனர்.

அதன்பிறகு அவர் சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் பேசினார்.அதன் பிறகு (174) விபத்து வழக்காக பதிவு செய்யப்பட்டது.பின்னர் 306 ஐபிசி வழக்காக மாற்றப்பட்டது என்று திருமாவளவன் பேசும்போது கூறினார்.

இதனை தொடர்ந்து காவல்துறைக்கு எதிராக கண்டன ஆர்ப்பாட்டத்தை நடத்துமாறு கட்சியினருக்கு உத்தரவிட்ட திருமாவளவன் இன்று திருவள்ளூர் மீரா திரையரங்கம் அருகில் அமுலுவின் காதல் கணவர் கௌதமன் ஆணவ படுகொலைக்கு எதிராக கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

அதில் நூற்றுக்கணக்கான வி.சி.க கட்சியினர் கலந்து கொண்டனர்.ஆந்திர மாநிலத்தில் இருந்து தெலுங்கில் எழுதப்பட்ட கண்டனம் கோஷங்களுடன் பலர் கலந்து கொண்டனர்.

ஒரு மணி நேரம் பத்து நிமிடங்கள் பேசிய திருமாவளவன்.தமிழக போலீசின் அணுகுமுறைகள் பற்றியும் அவர்களுடைய நடவடிக்கைகள் அவர்கள் எப்படி தலித் மக்களையும் விளிம்புநிலை மக்களையும் உயர் சாதி மக்களையும் அணுகுவார்கள் எப்படி வழக்கு பதிவு செய்வார்கள் என்பதை விரிவாகப் பேசினார்.

போலீசின் முகமுடியை கிழித்தார். அப்போது கூட்டத்தில் கை தட்டவும் விசில் சத்தமும் வின்னை முட்டியது.தமிழக போலீஸ் மட்டுமல்ல இந்திய போலீசின் பொது புத்தி இது தான்.

தலித் மக்களையும் எளிய மக்களையும் நசுக்கி தனது அதிகாரத்தை காட்டும் புத்திசாலிகளாகத்தான் போலீஸ் இருப்பார்கள்.ரவுடிகளை போலீஸார் தான் உருவாக்குகிறார் கள்.

சாதாரண குற்றம் செய்தவன் மீது தொடர்ந்து வழக்குப்பதிவு புட் அப் கேஸ் போட்டு அவர்களை பெரிய ஆளாக மாற்றி விடுவதே போலீஸ்தான் என்று குற்றம் சாட்டினார்.

தமிழகத்தில் இயற்கையாக ஒருவர் இறந்து போனார் இயற்கையான மரணம் என்று சொல்வார்களே தவிர போஸ்டரில் பேனரில் இது இயற்கை மரணம் என்று எழுத மாட்டார்கள்.

இறைவனடி சேர்ந்தார் இல்லையென்றால் காலமானார் என்றுதான் குறிப்பிடுவார்கள்.
ஆனால் கௌதமன் இறப்பில் வைக்கப்பட்டிருந்த பேனரில் இது இயற்கை மரணம் என்று குறிப்பிட்டிருக்கிறார்கள்.

அப்படி என்றால் அங்கு நடந்தது என்ன என்பதை அவர்களே காட்டிக் கொடுத்துவிட்டார்கள் அடித்து துன்புறுத்தப்பட்டு தான் கௌதமனை தூக்கில் மாட்டி கொலை செய்திருக்க வேண்டும்.

எனது நேரடியான குற்றச்சாட்டு கௌதமனை அடித்து அவர் இறந்த பிறகுதான் அவரை தூக்கில் மாற்றி இருக்கிறார்கள்.என்று நான் கருதுகிறேன் என்று குற்றம் சாட்டினார்.

எனவே உள்ளூர் போலீசார் இந்த வழக்கை விசாரிக்காமல் உயர்நீதிமன்ற நீதிபதியின் நேரடி கட்டுப்பாட்டில் சிறப்பு விசாரணைக் குழு அமைத்து கௌதமன் ஆணவப்படு
கொலை விசாரித்து சிறப்பு நீதிமன்றத்தின் மூலம் வழக்கை நடத்தி தீர்ப்பு வழங்க வேண்டும்.

அது தவிர வண்கொடுமை தடுப்பு சட்டம் உள்ளதைப்போல தமிழகத்தில் முதலமைச்சர் ஸ்டாலின் அவர்கள் சாதிய ஆணவ படுகொலைக்கு எதிராக ஒரு சட்டத்தை கொண்டு வர வேண்டும் என்று கூறினார்.

விடுதலை சிறுத்தைகள் என்கிற கட்சி கொடுமையை எதிர்த்து குரல் கொடுக்கிற இயக்கமாக இருக்கும். அநீதிக்கு எதிராக திருமாவளவன் குரல் கொடுப்பான்.

கௌதமன் கொலை வழக்கை வண்கொடுமை வழக்காக மாற்ற வேண்டும், இழப்பீடு வழங்க வேண்டும், குற்றவாளிகள் அனைவரையும் கைது செய்ய வேண்டும் என்று அரசுக்கு கோரிக்கை வைத்தார்.

கூட்டம் முடிந்ததும் பிறந்து 45 நாட்கள் ஆன பெண் குழந்தைக்கு தன்னுடைய தந்தையின் நினைவாக கௌதமி என்று பெயரிட்டார்.

அதன்பிறகு கூட்டத்தின் மேடையிலேயே நிராயுதபாணியாக நிற்கிற தங்கை அமுலுக்கு நிதி தருபவர்கள் தரலாம் என்கிற ஒரு கருத்தை முன் வைத்தார்.

அதன் பிறகு மடமடவென அந்த கட்சி தொண்டர்கள் தங்களால் முடிந்ததை நிதியாக அளித்தனர்.70 ஆயிரம் ரூபாய் நிதி திரட்டப்பட்டது.அந்த தொகை அமுலு விடும் வழங்கப்பட்டது.

கண்டன கூட்டத்தில் தொடர்ச்சியாக முதலிலேயே அந்த கட்சியின் மூத்த தலைவர்களும் சாதி ஆணவப் படுகொலைக்கு எதிராக கண்டன கோஷம் எழுப்பினார் திருமாவளவன்.

அவர் பேசுவதற்கு முன்பாகவே பத்திரிகையாளர்களின் கேள்விக்கு பதிலளித்து விட்டு பேசத் தொடங்கினார்.கொஞ்சம் மெல்ல மெல்லமாக பேசத் தொடங்கிய திருமாவளவன் ஒரு கட்டத்தில் ஆவேசம் அடைந்தார்.

தமிழகத்தில் எங்கெல்லாம் ஆணவப்படுகொலை நடக்கிறதோ அல்லது அத்துமீறல்கள் நடக்கிறதோ அங்கெல்லாம் திருமாவளவன் நிற்பான் ஆபத்து குரல்கள் கேட்கும் போது அங்கே ஓடிச்சென்று நிற்பான்.யாருக்கும் அடிபணியாமல் எளிய மக்களுக்காக உழைக்கின்ற இயக்கம்.

முப்பது ஆண்டுகள் நெருப்பாற்றில் நீந்தி வந்த இயக்கம் ஜெய்பீம் என்று சொல்லிவிட்டுப் போகிற இயக்கமல்ல (பருப்பை கழற்றி) விடுவோம் என்று லோக்கல் பாணியில் பேசியபோது ஐந்து நிமிடங்கள் ஆனது விசில் சத்தமும் கைத்தட்டலும் நிற்க…..

இதையும் படிங்க.!