திருப்புவனத்தில் காவல்துறை விசாரணையில் அஜித் குமார் எனும் இளைஞர் உயிரிழந்தார். இந்த சம்பவத்தில் விளக்கம் கேட்டு தமிழக டிஜிபிக்கு மாநில மனித உரிமைகள் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
அதிமுக மற்றும் பாஜக தலைவர்கள் மனித உரிமைகள் ஆணையத்தின் விசாரணை வேண்டும் என்று கோரியிருந்த நிலையில் தற்போது நோட்டீஸ் அனுப்பப்பட்டிருக்கிறது. அதில், நாளிதழில் வெளியான செய்தியின் அடிப்படையில் தாமாக முன்வந்து வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொண்டிருப்பதாக மனித உரிமைகள் ஆணையம் தெரிவித்திருக்கிறது.அஜித் குமார்.
கடந்த ஜூன்.26ம் தேதியன்று சிவகங்கை மாவட்டம் திருப்புவனத்தில் உள்ள பிரசித்திப்பெற்ற கோயிலான பத்ரகாளியம்மன் கோயிலுக்கு நிகிதா எனும் பெண், தனது வயதான தாய் சிவகாமியை அழைத்து வந்திருக்கிறார்.
ஃபிராடு நிகிதா.
நிகிதா தனது காரை பார்க் செய்ய சொல்லி, கோயில் செக்யூரிட்டியாக இருந்த இளைஞர் அஜித் குமாரிடம் கூறியுள்ளார். ஆனால் தரிசனம் முடிந்து வந்து பார்த்தபோது காரில் இருந்த நகையை காணவில்லையாம். இது தொடர்பாக புகார் அளித்திருக்கிறார்.
டிஜிபி சங்கர் ஜிவால்.
புகாரின் அடிப்படையில் தனிப்படை காவல்துறையினர் செக்யூரிட்டி அஜித் குமாரிடம் தங்கள் பாணியில் விசாரணை மேற்கொண்டனர். இதில் அஜித் குமாரின் உடல்நிலை மோசமடையவே மருத்துவமனைக்கு கொண்டு சென்றிருக்கிறார்கள். ஆனால் அவர் ஏற்கெனவே உயிரிழந்துவிட்டார் என்று மருத்துவர்கள் கூறியுள்ளனர். இதனையடுத்து உடல் மதுரை அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டிருக்கிறது.