#thiruvallur collector disrespects ; உயர்நீதிமன்ற உத்தரவை மதிக்காத திருவள்ளூர் கலெக்டர்.

March 4, 2026

By இரா. தேவேந்திரன்.

உயர் நீதிமன்ற உத்தரவு புறக்கணிப்பா?
153 சட்டவிரோத கட்டிடங்களில் இதுவரை ஒன்று கூட இடிக்கப்படவில்லை.

திருவள்ளூர் மாவட்டம், புழல் ஊராட்சி ஒன்றியம், விளாங்காடுபாக்கம் மற்றும் சென்றம்பாக்கம் ஊராட்சிகளுக்குட்பட்ட பகுதிகளில் அமைந்துள்ள அனுமதி பெறாத மற்றும் விதிமீறலுடன் கட்டப்பட்ட 153 சட்டவிரோத கட்டிடங்களை ஆறு மாதங்களுக்குள் இடித்து அகற்ற வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம் தெளிவான உத்தரவை வழங்கியிருந்தது.Madras High Court to be rechristened as Chennai High Court : Union Law  Ministerஇந்த உத்தரவின் அடிப்படையில், வருவாய் துறை, CMDA, மாவட்ட ஆட்சியர், திட்ட இயக்குனர், ஊரக வளர்ச்சி உதவி இயக்குனர், வட்டார வளர்ச்சி அலுவலர், சம்பந்தப்பட்ட ஊராட்சி செயலாளர் மற்றும் மாசுக்கட்டுப்பாடு வாரியம் ஆகிய அனைத்து துறைகளும் இணைந்து ஆய்வு மேற்கொண்டு, சட்டத்திற்கு விரோதமாக கட்டப்பட்ட கட்டிடங்களை முழுமையாக இடித்து அகற்ற வேண்டும் என நீதிமன்றம் தெளிவாக அறிவுறுத்தியிருந்தது.

ஆனால், நீதிமன்றம் நிர்ணயித்த காலக்கெடு முடிவடைந்த பின்னரும் இதுவரை ஒரு கட்டிடம் கூட இடிக்கப்படவில்லை என்பது அதிர்ச்சியை ஏற்படுத்துகிறது. மேலும், உயர்நீதிமன்ற உத்தரவின்படி துறைசார் கூட்டாய்வு ஆய்வு மேற்கொள்ளப்படாமல், புழல் ஊராட்சி ஒன்றிய வட்டார வளர்ச்சி அலுவலர் வேதநாயகி தன்னிச்சையாக செயல்பட்டதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.வழக்கிற்கு நேரடியாக தொடர்புடைய சென்றம்பாக்கம் ஊராட்சிக்குட்பட்ட பகுதியில் செயல்பட்டு வந்த சில கட்டிடங்களுக்கு மட்டும் சீல் வைக்கப்பட்டு, பின்னர் அதே அதிகாரியால் அந்த சீல் அகற்றப்பட்டதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

அதே நேரத்தில், 153 சட்டவிரோத கட்டிடங்களில் 120க்கும் மேற்பட்டவை இயங்கி வரும் விளாங்காடுபாக்கம் ஊராட்சிக்குட்பட்ட பகுதியில், ஒரு சில கட்டிடங்களுக்கு மட்டும் சீல் வைக்கப்பட்டுள்ளதே தவிர, பெரும்பாலான கட்டிடங்கள் எந்த நடவடிக்கையும் இன்றி தொடர்ந்து இயங்கி வருவது கடும் சந்தேகங்களை எழுப்புகிறது.puzhal bdo office; அதிகாரிகள் பெயர் சொல்லி கல்லா கட்டிய பெண் ஊழியர். -  chennireporters.com

மேலும், வேதநாயகி புழல் ஊராட்சி ஒன்றிய வட்டார வளர்ச்சி அலுவலராக பதவி ஏற்ற நாளிலிருந்து, அந்தப் பகுதிகளில் பத்துக்கு மேற்பட்ட புதிய அனுமதி பெறாத கட்டிடங்கள் கட்டப்பட்டு வருவதாகவும் குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டுள்ளன.
இந்த பின்னணியில்,

உயர்நீதிமன்ற உத்தரவு முழுமையாக அமல்படுத்தப்படாததா?

சட்டவிரோத கட்டிட உரிமையாளர்களை பாதுகாக்கும் நோக்கில் அதிகாரிகள் செயல்படுகிறார்களா?

துறைசார் கூட்டாய்வு ஆய்வு என்ற உயர்நீதிமன்றத்தின் நேரடி ஆணை திட்டமிட்டு புறக்கணிக்கப்படுகிறதா?  என்ற கடுமையான மற்றும் தவிர்க்க முடியாத கேள்விகள் பொதுமக்கள் மத்தியில் எழுந்துள்ளன.

இந்த விவகாரம் தொடர்பாக விரைவில் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடரப்படும் என மனுதாரர்கள் தெரிவித்துள்ள நிலையில், உயர் நீதிமன்றம் எடுக்கும் அடுத்தகட்ட நடவடிக்கையே உண்மையை வெளிச்சத்திற்குக் கொண்டு வரும் என்ற எதிர்பார்ப்பு நிலவி வருகிறது.ஏற்கனவே திருவள்ளூர் ஆட்சியராக பணியாற்றிய ஆல்ஃபி ஜான் வர்கீஸ், பிரபு சங்கர். தற்போது உள்ள ஆட்சியர் பிரதாப் இதுவரை யாரும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்பதுதான் தற்போதைய நிலைசென்னை உயர்நீதிமன்ற உத்தரவை மதிக்காமலும் அதை நிறைவேற்றாமலும் விசாரணை நடைபெற்றுக் கொண்டிருக்கிறது என்ற தகவலை மட்டும் நீதிமன்றத்திற்கு கலெக்டரின் கீழ் பணியாற்றும் அதிகாரிகளை அனுப்பி ஒரு மன்னிப்பு கோருவது ஏன் வழக்கமாக வைத்துள்ளனர்.  ஐஏஎஸ் அதிகாரிகள் நீதிமன்றங்களும் மனிதாபிமானத்துடன் மன்னிக்கும் பெருந்தன்மையுடன் வழக்கின் தேதியை ஒத்திவைத்து உத்தரவிடுகிறார்கள்.

ஆனால் மாவட்ட ஆட்சியரின் கீழ் பணியாற்றும் அதிகாரிகள் எந்த நடவடிக்கையும் எடுக்காமல் புதிதாக கட்டும் கம்பெனிகளுக்கு அனுமதியும் வழங்குகிறார்கள்.  நீதிமன்றம் நடவடிக்கை எடுக்க சொல்லி உத்தரவிட்ட கம்பெனி உரிமையாளர்களிடம் லஞ்சமும் வாங்குகிறார்கள்.  சில கம்பெனி உரிமையாளர்களிடம் சீல் வைக்காமல் இருப்பதற்கும் லஞ்சம் வாங்குகிறார்கள். காரணம் தங்களை யாரும் ஒன்றும் செய்து விட முடியாது இது தேர்தல் நேரம் என்பதால் நீதிமன்றமும் எந்தவித நடவடிக்கையும் எடுக்காது என்கிற தைரியத்தில் அதிகாரிகள் தங்களுடைய வசூல் வேட்டையை தொடர்ந்து நடத்தி வருகின்றனர் என்கிறார்கள் புழல் வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் உள்ள அதிகாரிகளும் அந்தப் பகுதி பொது மக்களும்.

புழல் பிடிஓ வேதநாயகி.

இதுகுறித்து புழல் பி டி ஓ வேதநாயகி இடம் அவர் தரப்பு விளக்கத்தை கேட்டோம் அவர் நாங்கள் நடவடிக்கை எடுத்து தான் வருகிறோம். இந்த நிர்வாகத்திற்கும் என் கணவர் கோகுல கிருஷ்ணனுக்கும் எந்தவித தொடர்பும் இல்லை என்று மறுத்தார். ஆனால் அந்தப் பகுதியில் உள்ள சில நிறுவனத்தின் உரிமையாளர்கள், மேலாளர்கள், ஹெச்ஆர் ஆகியோர் பிடிஓ வேதநாயகியிடம் தனியாக சந்தித்து பணமும் கொடுத்து இருக்கிறார்கள் வியபாரமும் பேசி வருகின்றனர். அதே நேரம் ஆசிரியராக பணியாற்றி வரும் வேதநாயகியின் கணவர் கோகுல கிருஷ்ணனையும் சில கம்பெனி உரிமையாளர்கள் ரகசிய இடத்தில் சந்தித்து பேசி வருகின்றனர் என்று உறுதிபட சொல்கிறார்கள் புழல் பிடிஒ அலுவலகத்தில் பணியாற்றும் சில நேர்மையான அதிகாரிகள்.

உண்மை நிலவரம் என்ன ஏன் உடனடியாக அரசு அனுமதியில்லாமல் கட்டப்பட்ட கம்பெனிகளை இடிக்கவில்லை ஏன் அந்த கம்பெனிகளுக்கு சீல் வைக்கவில்லை என்ற கேள்வி பொதுமக்கள் மத்தியில் எழத்தான் செய்கிறது. ஒரு மணி நேரத்தில் நீதிமன்ற உத்தரவை அமல்படுத்தி விடலாம் முறைகேடாக கட்டப்பட்டுள்ள கட்டிடங்களை புல்டோசர் கொண்டு இடித்து விடலாம் சில கம்பெனிகளுக்கு சீல் வைத்தும் விடலாம் ஆனால் அதிகாரிகள் ஆமை வேகத்தில் செயல்படுவது வெளிப்படையாகவே தெரிகிறது. காரணம் ரிசர்வ் வங்கி அடித்த நோட்டில் காந்தி கட்டுக்கட்டாக சிரித்துக் கொண்டிருக்கிறார் என்பது தான் உண்மை.

கலெக்டர் நடவடிக்கை எடுப்பாரா இல்லை காந்தி சிரிப்பதை அவரும் பார்த்துக் கொண்டு ரசிப்பாரா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

Share:

இரா. தேவேந்திரன்.

March 4, 2026

Leave a Comment