chennireporters.com

#thiruvallur collector who stuck his finger PDO; கண்ணில் விரலை விட்டு ஆட்டிய திருவள்ளூர் கலெக்டர். மயக்கம் போட்டு விழுந்த பிடிஒ சித்ரா..

ஊழல் குற்றச்சாட்டுக்கு ஆளான புழல் பிடிஒ சித்ரா இரவோடு இரவாக அதிரடியாக பணி மாற்றம் செய்யப்பட்டுள்ளார் ஆனால் அவருக்கு இதுவரை பதவி எதுவும் வழங்கப்படாமல் காத்திருப்போர் பட்டியலில் வைக்கப்பட்டுள்ளார்.நிர்வாக திறன் இல்லாமல் நிர்வாகத்தை சீர்கேடு ஆக்கி கம்பெனி முதலாளிகளுக்கும் தொழிலதிபர்களுக்கும் ஆதரவாக செயல்பட்ட சித்ராவை புதிதாக பொறுப்பேற்ற திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் பிரதாப் அதிரடியாக அவர் மீது நடவடிக்கை எடுத்திருப்பது அதிகாரிகள் மத்தியில் பெரும் பதட்டத்தையும் பரபரப்பையும் ஏற்படுத்தி உள்ளது

மாவட்ட ஆட்சியர் பிரதாப்.

திருவள்ளூர் மாவட்டம், புழல் ஊராட்சி ஒன்றியம், அடுத்த விளங்காடுபாக்கம் மற்றும் சென்றம்பாக்கம் பஞ்சாயத்துக்கு உட்பட்ட பகுதிகளில் 154 கம்பெனிகள் அரசு அனுமதி இல்லாமல் இயங்கி வருகிறது என்று அந்த பகுதியை சேர்ந்த முன்னால் ஒன்றிய கவுன்சிலர் மல்லிகா மீரான் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.அந்த வழக்கை விசாரணைக்கு எடுத்துக் கொண்ட சென்னை உயர்நீதிமன்றம் அட்வகேட் கமிஷனை அமைத்து உத்தரவிட்டது. வழக்கறிஞர்கள் அந்த கம்பெனிகளை ஆய்வு செய்து நீதிமன்றத்திற்கு அறிக்கை சமர்ப்பிக்கும் படி உத்தரவிட்டிருந்தது.

தற்போது வழக்கறிஞர்கள் அந்த கம்பெனிகளை ஆய்வு செய்து வருகின்றனர். இந்த நிலையில் அதே பகுதியில் அரசு அனுமதி இல்லாமல் சில நிறுவனங்கள் கம்பெனிகளை கட்டி வருகிறது என்று மீண்டும் ஒரு புகாரை மல்லிகாமீரான் புழல் பி.டி. ஓ சித்ரா பெர்ணாண்டோ விற்கு பதிவு தபால் மூலம் தெரிவித்துள்ளார். 40நாட்களுக்கு மேலாகியும் அனுமதி பெறாமல் கட்டப்பட்டு வரும் அந்த கட்டிடங்கள் மீது எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்காமல் கட்டிட உரிமையாளர்களிடம் நேரடி தொடர்பில் உள்ளதாக கூறப்படுகிறது. இது நேற்றைய தினம் மல்லிகா மீரான் கலெக்டருக்கு மீண்டும் ஒரு புகார் அளித்ததாக கூறப்படுகிறது, அந்தப் புகாரை விசாரித்த கலெக்டர் நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்திருந்தார். இந்த நிலையில் கும்மிடிப்பூண்டியில் ஆய்வுக்குச் சென்ற கலெக்டர் புழல் பி.டி.ஓ சித்ரா அவர்களை அந்த கோப்புகள் அனைத்தையும் எடுத்து வரச் சொல்லி ஆய்வுக்கு வர சொல்லி உத்தரவிட்டிருந்தார்.

மாவட்ட ஆட்சியர் பிரதாப்.

கலெக்டரிடம் விசாரணைக்கு சென்ற சித்ரா பெர்ணாண்டோ உடல் நிலை சரி இல்லை என மயக்கம் போட்டு விழுந்தார். உடனடியாக அங்கிருந்து அதிகாரிகள் அவரை அருகில் இருந்த மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர்.  அப்போது அவருக்கு சிகிச்சை அளித்தனர். பின்னர் அவரது கணவருக்கு தகவல் சொல்லி சித்ரா அவர்களை வீட்டிற்கு அனுப்பி வைத்தனர். இந்த நிலையில் திடீரென்று இரவோடு இரவாக பி.டி.ஓ. சித்ரா புழல் அலுவலகத்தில் இருந்து உடனடியாக பணி மாற்றம் செய்யப்பட்டார்.அரசுக்கு எதிராக அரசு அனுமதி இல்லாமல் தனியார் நிறுவனங்களின் உரிமையாளர்களின் லஞ்சப் பணத்திற்கு ஆசைப்பட்ட பி டி ஓ சித்ரா அவர்கள் அரசு அனுமதி இல்லாமல் பல நிறுவனங்கள் கட்டிடங்கள் கட்ட அனுமதி கொடுத்தது சட்டத்திற்கு எதிரானது என்று புகார் அளித்த மல்லிகா மீரான் என்பவர் மாவட்ட நிர்வாகத்திற்கு தெளிவாக புகார் கடிதம் அனுப்பி இருக்கிறார் அதன் அடிப்படையில் இந்த அதிரடி பணி மாற்றம் செய்யப்பட்டது என்கின்றனர் மாவட்ட ஆட்சியர் அலுவலக அதிகாரிகள்.

இது குறித்து சம்பந்தப்பட்ட மல்லிகா மீரான் அவர்களை கேட்டபோது, அரசு அனுமதி இல்லாமல் புழல் வட்டார வளர்ச்சி அலுவலகத்திற்கு எல்லைக்குட்பட்ட பல பகுதிகளில் தொழிற்சாலைகள், தொழிற்கூடங்கள், வணிக கட்டிடங்கள் இயங்கி வருவதாகவும், பல ரியல் எஸ்டேட் நிறுவனங்களுக்கு ஆதரவாக பி.டி.ஓ சித்ரா அவர்கள் அவர்களுக்கு ஆதரவாக பணியாற்றியிருக்கிறார்.154 கம்பெனிகள் அனுமதி இல்லாமல் இயங்குவதாக நேரடியாக புகார் கொடுத்தும் கூட அவர் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை. இருப்பினும் அதனை தொடர்ந்து நான் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு பதிவு செய்தேன், அந்த அடிப்படையில் நீதிமன்றம் விசாரணைக்கு உத்தரவிட்டு அட்வகேட் கமிஷனை அமைத்திருக்கிறது. அந்த வழக்கு நிலுவையில் இருக்கிறது. விசாரணை நடைபெற்றுக் கொண்டிருக்கிறது அதிகாரத்தை தவறாக துஷ்பிரயோகம் செய்த பி.டி.ஓ சித்ரா அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மாவட்ட ஆட்சியருக்கு புகார் அளித்திருந்தேன். அதன் அடிப்படையில் அவர் அதை தீர விசாரித்து அவர் மீது நடவடிக்கை எடுத்திருக்கிறார் என்கிறார் மல்லிகா மீரான்.Madras High Court judge disputes home loan repayment; SBI seeks transfer |  India News - Business Standardஇந்த பிரச்சனைகளுக்கு காரணமான பி.டி.ஓ சித்ரா அவர்களை நிரந்தர பணி நீக்கம் செய்ய வேண்டும் என்றும் அவர் மீது உரிய நடவடிக்கை எடுத்து அவரை கைது செய்ய வேண்டும் என்கின்றார் மல்லிகா மீரான். இந்த புகார் குறித்து ஏற்கனவே நாம் நமது இணையதளத்தில் பல செய்திகள் வெளியிட்டு இருக்கிறோம் . ஆனால் அப்போதைய மாவட்ட ஆட்சியர் டாக்டர் பிரபு சங்கர் ஊரக வளர்ச்சித்துறை இயக்குனர் ஜெயக்குமார் யாரும் எந்தவித நடவடிக்கை எடுக்காமல் அவருக்கு ஆதரவாகவே செயல்பட்டார்கள் இருப்பினும் தற்போது நீதிமன்றம் தலையீட்டின் அடிப்படையில் புதிய மாவட்ட ஆட்சியர் பிரதாப் ஐ.ஏ.எஸ் அவர்கள் கடும் நடவடிக்கை எடுத்திருப்பது பாராட்டுக்குரியது என்கிறார் புகார் அளித்த மல்லிகா மீரான்.ஊழல் குற்றச்சாட்டுக்கு ஆளாகி துணை ரீதியாக அவர்கள் மீது புகார்கள் இருந்தால் அதன் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அனைத்து அதிகாரிகளுக்கும் மாவட்ட ஆட்சியர் பிரதாப் உத்தரவிட்டு இருப்பதாக சொல்லுகிறார்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலக அதிகாரிகள்.

இன்னும் எத்தனை லஞ்சப் பேர்வழிகள் பதவி பதிவாகப் போகிறதோ என்கிற அச்சத்தில் உள்ளனர் திருவள்ளூர் மாவட்ட ஊரக வளர்ச்சி மற்றும் வருவாய் துறை அதிகாரிகள்.

இதையும் படிங்க.!