துளிருமா இலை?
உதிக்குமா சூரியன்?
நீடிக்கும் இழுபறி
குணசேகரன்.வே
திருவள்ளூர் தொகுதியில் யாருக்கு வெற்றி என்று கனிக்க முடியாமல் தினறி வருகிறார்கள் உடன் பிறப்புக்களும் ரத்தத்தின் ரத்தங்களும் திருவள்ளூர் தொகுதி அ.இ.அ.தி.மு.க வினர் உற்சாகத்துடன் இருக்கிறார்கள்காரணம் அ.தி.மு.க சார்பில் போட்டியிடும் பி.வி.ரமணா ஏற்கனவே இந்த தொகுதியில் வெற்றி பெற்று அமைச்சராக இருந்தவர் தொகுதியில் செல்வாக்கும் பண பலமும் மிக்கவர் இந்த முறை இவருக்கு சீட் வழங்கபட்டுள்ளது.
இந்த முறை இவர் வெற்றி பெற வேண்டும் என்று பல உத்திகளை கையாண்டு வருகிறார் கடந்த முறை அ.தி.மு.க வேட்பாளராக நிறுத்தப்பட்ட கமாண்டோ பாஸ்கரை ரமணா உள்ளடி வேலை செய்து தோற்கடித்தார் காரணம் காமாண்டோ பாஸ்கருக்கும் ரமணாவுக்கும் உட் கட்சி பகையும் தனிப்பட்ட விரோதமும் இருந்ததே காரணம்.
அது தவிர ரமனாவின் இரண்டாவது மனைவி லதாவும் தற்போதைய தி.மு.க வேட்பாளர் வி. ஜி .ராஜேந்திரனின் மனைவி இந்திராவும் உறவினர்கள் என்று கூறப்படுகிறது அதன் காரணமாக தன்னுடைய உறவினர் இந்திராவின் கணவரை வெற்றி பெற செய்ய வேண்டும் என்று இந்திரா லதாவிடம் கோரிக்கை வைத்ததினால் ரமணா தன் வீட்டிற்கு நாயுடு சமூகத்தினரை அழைத்து விருந்து வைத்து விளக்கின் மீது சத்தியம் வைத்து இரட்டை இலைக்கு ஓட்டு போடக்கூடாது என்றும் உதயசூரியன் சின்னத்தில் வாக்களிக்க வேண்டும் என்று சத்திய வாக்கு பெற்றார் வி.ஜி.ராஜேந்திரனை வெற்றி பெற செய்யவும் வைத்தார் ரமணா என்று சொல்கிறார்கள் கமாண்டோ பாஸ்கரின் ஆதரவாளர்கள் ஆனால் இந்த முறை ரமணாவும் வி.ஜி.யாரும் நேருக்கு நேர் மோதுவதால் யார் வெற்றி பெறுவார்கள் என்று தெரியவில்லை.
கடந்த முறை வி.ஜி.ராஜேந்திரனுக்கு மறைமுகமாக ஆதரவளித்த ரமணா இந்த முறை தானே கள மிறங்குவதால் போட்டி பலமாக இருக்கும் என்கிறார்கள் நடுநிலையாளர்கள் கடந்த ஐந்து ஆண்டுகளாக எம்.எல்.ஏ வாக இருந்த தி.மு.க. எம்.எல்.ஏ ராஜேந்திரன் தொகுதிக்கு சொல்லும் படியாக எந்த மக்கள் பணியும் செய்யவில்லை அதே போல ரமணா தொகுதிக்கு சிறப்பான திட்டங்களையும் கொண்டு வரவில்லை மாறாக தனது நாயுடு சமூகத்தினருக்கும், தனது ஆதாரவாளர்களுக்கும் பதவி, பணம் சம்பாதிப்பதற்கு வழி வகை செய்து கொடுத்தாரே தவிர இவரும் தொகுதிக்கு எதுவும் செய்து விடவில்லை இது தவிற ரமணா மீது குட்கா ஊழல் வழக்கில் குற்றப்பத் திரிகை தாக்கல் செய்ய ப்பட்டுள்ளது.
கடந்த 2016 ம் ஆண்டு தேர்தலில் தி.மு.க வேட்பாளராக வி.ஜி. ராஜேந்திரன் போட்டியிட்டு வெற்றி பெற்றதற்க்கு பிறகு தொகுதியில் எந்தவித மக்கள் பணிகளை செய்யாமல் 5 ஆண்டு காலத்தை முடித்தார் அதையே அ.தி.மு.வினர் சாதகமாக பயன்படுத்தி மக்களிடத்தில் பிரச்சாரம் செய்து வருகின்றனர்.
திருவள்ளூரில் நீண்டநாள் பிரச்சனையான பைபாஸ் சாலை திருவள்ளூர் ரயில் நிலையத்தில் நிற்காத கோவை எக்ஸ்பிரஸ், பிருந்தாவன் எக்ஸ்பிரஸ், டபுள் டக்கர் மற்றும் பல ரயில்கள் நிற்காமல் செல்கின்றன அந்த ரயில்களை நின்று செல்ல எந்த நடவடிக்கையும் எம். எல் .ஏ வி. ஜி. ராஜேந்திரன் எடுக்கவில்லை என்ற குற்றச்சாட்டையும் அ.தி.மு.கவினர் முன் வைக்கின்றனர் மின்சார வாரியத்தின் தலைமை பொறியாளர் அலுவலகம் அமைக்க நடவடிக்கை எடுக்கவில்லை பாதுகாக்கப்பட்ட குடி நீரும் தொகுதி மக்களுக்கு வழங்க வில்லை நாற்ற மெடுத்த பஸ் நிலையம் மாற்றப்படவில்லை
திருவள்ளுர் நகரத்தை ஸ்மார்ட் சிட்டியாக மாற்ற ரமணா தீ விரமாக செயல்பட இத்தேர்தலில் தயாராகிவிட்டாராம் முந்தைய எம்.எல்.ஏ எப்படியோ நான் உங்கள் தொண்டன் உங்களுக்காக உழைக்கத் தயாராகி விட்டேன் தேர்தல் களத்தில் வேட்பாளர் ரமணாவின் வேகத்தை கண்டு தி.மு.க.வினருக்கு கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளதாம்..!
பணத்திற்கும், உழைப்புக்கும் அஞ்சாத வேட்பாளர் ரமணா மொத்தத்தில் தொகுதியில் பாஸ் மார்க் வாங்கி விடுவார் என்று கலக்கத்தில் உள்ளனராம் தி.மு.க.வினர்..!
ரமணா பற்றியும் தி.மு.க. வினரும் அடுக்கடுக்கான புகார்களை தெரிவிக்கின்றனர் சொந்த அம்மாவுக்கே கொள்ளி போடாமல் ஊரை விட்டு ஓடியவர் மனைவி மற்றும் மக்களை தவிக்கவிட்டு யோக்கிய சிகாமணி என்கிறார்கள் இருவருக்கும் டப் ஃபைட் டுதான் இதனால் திருவள்ளூர் தொகுதியை பொறுத்த வரை யார் வெற்றி பெறுவார்கள் என்று கனிக்க முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.
திருவள்ளூர் தொகுதி
இழுபறி நிலைக்கு தள்ளப்பட்டுட்டுள்ளது மே 2ம் தேதி தான் இலை துளிருமா? இல்லை சூரியன் உதிக்குமா என் தெரியும்.