திருவேற்காடு நகராட்சியில் 14 ஆண்டுகளாக பில் கணக்கு பணியாற்றும் கணேசன் என்பவர் அந்தப் பகுதியில் உள்ள ஒரு அழகிய இளம் பெண்ணிடம் கள்ளத்தொடர்பு வைத்துக் கொண்டு ஏற்பட்ட பிரச்சனையில் அந்தப் பெண்ணுக்கு 9 லட்ச ரூபாய் பணம் கொடுப்பதாக ஒப்புக்கொண்டு ஏழு லட்சம் ரூபாய் முன்பணமாக கொடுத்த செய்தி திருவேற்காடு நகராட்சி பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.
திருவேற்காடு நகராட்சியில் பில் கலெக்டராக பணியாற்றி வருபவர் கணேசன். அந்த பகுதியில் உள்ள ஒரு அழகிய இளம் பெண்ணுடன் கள்ளத்தொடர்பு வைத்துக்கொண்டு ஊர் சுற்றி வந்தாராம் இந்த செய்தி அந்த பெண்ணின் வீட்டிற்கு தெரிந்து அவரது கணவர் அந்த பெண்ணை அடித்து வீட்டை விட்டு துரத்தி விட்டாராம்.
இதனால் பாதிக்கப்பட்ட அந்த பெண் பில் கலெக்டர் கணேசன் தனிமையில் சந்தித்து உன்னுடனே நான் வந்து விடுகிறேன் என்று அழுது அடம்பிடித்தாராம் அந்த அழகிய இளம் பெண். அய்யய்யோ ஏற்கனவே எனக்கு திருமணம் ஆகிவிட்டது என் வீட்டில் பிரச்சனையாகிவிடும். என் மனைவி பிச்சி பேன் பார்த்து விடுவாள் உனக்கு ஏதாவது செட்டில்மெண்ட் தருகிறேன் அது வரை நீ அமைதியாக இரு என்று சமாதானம் பேசி சாந்தப்படுத்தினாராம் கனேசன்.
திருவேற்காடு நகராட்சி பில் கலெக்டர் கனேசன்
அதன் பிறகு ஒரு நாள் தனிமையில் சந்தித்த அந்த பெண்ணிடம் கொஞ்சி பேசி ஒரு ஒன்பது லட்சம் செட்டில்மெண்ட் கொடுப்பதாக முடிவு செய்து முதல் தவனையாக ரூபாய் 7 லட்சம் அட்வான்ஸ் கொடுத்து விட்டாராம் கனேசன் இன்னும் பாக்கி 2 லட்சம் ரூபாய் தராமல் இழுத்தடித்து வருகிறாராம் கனேசன். இந்த நிலையில் இந்த அழகு மன்மதன் வேறு ஒரு பெண்ணின் பாச வலையில் விழுந்து விட்டாராம்.
இந்த விஷயம் பழைய கள்ள காதலிக்கு தெரிந்து பேயாட்டம் ஆடிவிட்டாராம். அந்த பெண்ணின் நட்பை துண்டித்துக் கொள்ள முடியாமல் அடிக்கடி தனிமையில் சந்தித்து பேசி வரும் கணேசன் இரண்டு லட்ச ரூபாய்க்கு தவணை தராமல் வைத்திருக்கிறாராம் பில் கலெக்டர் கணேசன்.
திருவேற்காடு நகராட்சி பகுதியில் பல்வேறு முறைகேடுகள் செய்து மாதம் ஒன்றிற்கு பத்து லட்ச ரூபாய்க்கு மேல் கல்லா கட்டி வருகிறாராம் கணேசன் இளம் பெண்களின் வாழ்கையை சீரழித்து வருகறார். கணேசன் இதே போல திருவேற்காடு நகராட்சியில் டெங்கு பணியாளர் பணிக்கு வரும் அழகிய இளம் பெண்களை தேர்ந்தெடுத்து அவர்களிடம் ஜாலியாக இருப்பது அவரின் பொழுதுபோக்காம்.
இப்படி பல பெண்களின் வாழ்க்கையை’யும் கெடுத்தது மட்டுமல்லாமல் அவர்களின் கற்பையும் சூறையாடி இருக்கிறாராம் அழகு மன்மதன் பில் கலெக்டர் கணேசன். இந்த செய்தி குறித்து பில் கலெக்டர் கனேசனை தொடர்பு கொண்டோம் அவர் நமது அழைப்பை ஏற்க வில்லை. இந்த செய்தி தொடர்பாக பில் கலெக்டர் கனேசன் அவரது தரப்பு விளக்கத்தை அளித்தால் நாம் அதை பதிவு செய்ய தயாராக இருக்கிறோம். கடந்த 14 வருடங்களாக திருவேற்காடு நகராட்சியில் பில் கலெக்டராக பணியாற்றி வருகிறார்.
தமிழ்நாட்டிலேயே ஒரு நகராட்சியில் ஒரு பில் கலெக்டர் 14 வருடங்களாக பணியாற்றி வருவது இந்த பில் கலெக்டர் கணேசன் மட்டும்தான். ஆயிரக்கணக்கில் லட்சக்கணக்கில் வரி போடும் வீடு மற்றும் கம்பெனி முதலாளிகளிடம் குறைந்த வரி போட்டு தருவதாக லட்சக்கணக்கில் கல்லா கட்டுவார் கணேசன் அதுமட்டுமில்லாமல் தற்போது 20 கோடி ரூபாய் மதிப்புள்ள இடத்திற்கு குறைந்த அளவில் வரி போட்டு தருவதாக சுமார் 6 கோடி ரூபாய் வரை கணேசன் மற்றும் அவரது சகாக்கள் ஆல்பர்ட் ஜான் உள்ளிட்டோர் லஞ்சம் பெற்றதாக கூறப்படுகிறது. இதுகுறித்து உயர் அதிகாரிகள் விசாரணை நடத்தி வருவதாக கூறப்படுகிறது.
அழகு மன்மதன் பில் கலெக்டர் கணேசன்
மேலும் இந்த இளம் பெண் சர்ச்சை குறித்து சம்பந்தப்பட்ட கணேசனை ஒரு விஐபி அழைத்து லெப்ட் அண்ட் ரைட் வாங்கி இரண்டு முறை அடித்து உதைத்து இருக்கிறாராம். இன்னும் பல தகவல்களை சொல்கிறார்கள் திருவேற்காடு நகராட்சி ஊழியர்கள். கணேசன் பற்றிய தகவல்களும் ஊழல்களும் மெல்ல மெல்ல புற்றிசல் போல கிளம்பி வருகிறது. கிணறு வெட்ட பூதம் கிளம்பிய கதையாக உருவெடுத்துள்ளது கனேசன் செய்தி.