chennireporters.com

ஒரு கோடி ரூபாய் மதிப்புள்ள செம்மரக்கட்டை பறிமுதல் மூன்று பேர் கைது.

திருத்தணி அருகேபூணிமாங்காடு என்ற கிராமத்தில் இன்று காலை திருவள்ளூர் மாவட்ட காவல்துறையினர் தனிப்படை போலீசார் வாகன சோதனை செய்து கொண்டி
ருந்தனர்.

அப்போது அந்த வழியாக வேகமாக வந்த காரை நிறுத்த சொன்னார்கள் அவர்கள் காரை நிறுத்தாமல் வேகமாக செல்ல முயன்றனர் போலீஸ் வேகத்தடை வைத்து சாலையை மறைத்தனர்.

இனிமேல் தப்பிக்க முடியாது என்று கருதிய கார் ஓட்டுநர் காரிலிருந்து இறங்கி தப்பி ஓடினார் அவருடன் இருந்த இரண்டு பேரும் தம்பி ஓடினார்கள்.

அவர்களைதனிப்படை போலீசார் சுற்றி வளைத்து பிடித்தனர் காரை பறிமுதல் செய்த போலீசார் மூவரையும் கைது செய்து நடத்தினர்.

விசாரணையில் காரில் 50 செம்மரக்கட்டைகள் மறைத்து வைக்கப்பட்டிருந்தது கண்டு பிடிக்கப்பட்டது இதன் சர்வதேச மதிப்பு ஒரு கோடி ரூபாய் ஆகும்.

இந்த செம்மரக்கட்டை கடத்தி வர பயன்படுத்தப்பட்ட காரை ஓட்டிவந்த சென்னை தாம்பரம் பகுதியை சேர்ந்த கனிமாதுல்லா (30) இவருடன் அதே பகுதியை சேர்ந்த இவரது நண்பர் முருகன் (31) செம்மரக்கட்டை கடத்தல் கூட்டாளி ஆந்திர மாநிலம் கே.வி.புரம், அப்பகுதியை சேர்ந்த சின்னப்பா (48) என்ற மூவரையும் பிடித்து கனகம்மாசத்திரம் காவல்நிலையத்தில் வைத்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

கனகம்மாசத்திரம் போலீசார் வழக்கு பதிவு செய்து திருத்தணி வனத்துறை அதிகாரிகளிடம் கார், பிடிபட்ட 3 பேர் பிடிபட்ட செம்மரக்கட்டை, ஆகியவற்றை வனத்துறை அதிகாரிகளிடம் ஒப்படைத்தனர்.

இதையும் படிங்க.!