chennireporters.com

பாஜக மாநில இளைஞரணி தலைவர் வினோஜ்.பி.செல்வம் மீது மூன்று பிரிவுகளின் வழக்கு பதிவு.

வினோஜ்.

சென்னை, கீழ்ப்பாக்கத்தை சேர்ந்தவர் இளங்கோவன்.இவர் சென்னை காவல் ஆணையரகத்தில் புகார் ஒன்றை அளித்துள்ளார்.

அதில் வினோஜ் P.செல்வம் என்பவர் தன்னுடைய டிவிட்டர் ஹேண்டிலில், பொய்யான தகவலை, மக்களிடையே பரப்பும் நோக்கில் பதிவிட்டுள்ளார்.

அந்த பதிவு மதத்தின் அடிப்படையில் மக்களிடையே வெறுப்பையும், பகைமையையும் உருவாக்கி பொது அமைதியை சீர்குலைக்கும் வகையில் உள்ளது.

அதனால் அந்த நபர் மீது நடவடிக்கை எடுக்குமாறு தெரிவித்திருந்தார்.மேற்கண்ட புகாரின் அடிப்படையில் சென்னை மத்திய குற்றப்பிரிவு சைபர் கிரைம் பிரிவில் முதல் தகவலறிக்கை பதிவு செய்யப்பட்டுள்ளது.

அவர் மீது இந்திய தண்டனைச் சட்டம் பிரிவு153,501B,505(2) ஆகிய மூன்று பிரிவுகளின் கீழ் வினோஜ்.பி.செல்வன் மீது மத்தியக்குற்றப் பிரிவு போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

மதத்தின் அடிப்படையில் பகைமையை வளர்க்கும் வகையிலோ அல்லது பொது அமைதியை சீர்குலைக்கும் குலைக்கும் வகையிலோ, பொய்யான செய்திகளை உண்மை.

காவல் ஆணையர் சங்கர் ஜிவால்

செய்திகளை திரித்தும் சமூக வலைதளங்களான பேஸ்புக், டிவிட்டர், வாட்ஸ் அப் போன்றவற்றில் வெளியிடுவோர் மீது கடுமையான சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று சென்னை பெருநகர காவல் ஆணையாளர் திரு.சங்கர் ஜிவால், இ.கா.ப அவர்கள் எச்சரித்துள்ளார்…

இதையும் படிங்க.!