chennireporters.com

அரக்கோணம் அருகே ரயிலில் அடிபட்டு மூன்று புள்ளி மான்கள் மரணம்.

ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் ரயில் நிலையத்தின் அருகில் ரயில்வே ஒர்க் ஷாப் இருக்கிறது.இந்த பகுதியில் வனத்துறைக்கு சொந்தமான காடு உள்ளது.

இதனருகே ரயில்வே பாதை அமைக்கப்பட்டுள்ளது.காட்டுக்குள் மான்கள் மற்றும் வன விலங்குகள் இருக்கின்றன இந்நிலையில் நேற்று அதிகாலையில் 3 பெண் புள்ளி மான்கள் ரயிலில் அடிபட்டு உயிரிழந்ததது.

இது குறித்து அரக்கோணம் ரயில்வே போலீசார் சம்பவ இடத்திற்கு சென்றனர். இறந்த பெண் புள்ளி மான்களின்  உடல்களை கைப்பற்றிய ரயில்வே பாதுகாப்பு படையினர் அவற்றை  வனத்துறையிடம்  ஒப்படைத்தனர்.

ஒர்க் ஷாப் காட்டு பகுதியில் தண்ணீர் வசதி இல்லாததால் தண்ணீரைத் தேடி 3  மான்கள் வெளியே வந்த போது இரயிலில் அடி பட்டு இறந்திக்கலாம் என்று கூறப்படுகிறது.

எனவே வனத்துறையினர் இந்த அடர்ந்த காட்டுக்கு இடையே செல்லும் ரயில் பாதையின் இரு புறமும் வேலி அமைத்து வனவிலங்குகளை பாதுகாக்க வேண்டுமென்றும் மேலும் தண்ணீர் தொட்டிகளை வைத்து வனவிலங்குகளுக்கு  தேவையான தண்ணீரை ஏற்பாடு செய்யவேண்டும் என்பதே சமூக ஆர்வலர்களின் கோரிக்கையாக உள்ளது.

இதையும் படிங்க.!