chennireporters.com

கொரோனா நோய் தொற்று நெல்லை மாவட்ட நீதிபதி மரணம்.

JUDGE
நீதிபதி நீஷ்

கொரோனா நோய் தொற்றுக்கு சிகிச்சை பெற்றுவந்த நெல்லை மாவட்ட தலைமை குற்றவியல் நடுவர் நீதிமன்ற நீதிபதி நீஷ் உயிரிழந்தார்.

திருநெல்வேலி மாவட்ட தலைமை குற்றவியல் நீதித்துறை நடுவராக ( மாஜிஸ்திரேட்) இருந்து வந்தவர் நீதிபதி நீஷ் (வயது-42) இவர் தூத்துக்குடி மாவட்டம் சாயர்புரம் பகுதியைச் சேர்ந்தவர்.COURT TIRU

கடந்த ஏப்ரல் 26-ம் தேதி தான் நெல்லை மாவட்ட குற்றவியல் தலைமை நடுவர் மன்ற நீதிபதியாக பதவியேற்றார்.ஏப்ரல் 28-ம் தேதி அவருக்கு திடீரென உடல்நிலைக் குறைவு ஏற்பட்டதால், விடுப்பில் சென்றார்.மருத்துவ பரிசோதனை செய்து கொண்டதில் அவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதையடுத்துநீதிபதி நீஷ் தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவ மனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டிருந்தார்.

அங்கு சிகிச்சை பெற்று வந்த நிலையில், கடந்த ஞாயிறு அன்று நள்ளிரவு உயிரிழந்தார்.42 வயதாகும் நீதிபதி நீஷ்க்கு மனைவியும் 2 பெண் குழந்தைகளும் உள்ளனர்.சிதம்பரத்தில் இருந்து பணி மாறுதல் பெற்று கடந்த ஏப்ரல் மாதம் தான் நெல்லைக்கு வந்திருந்தார்.

இதையும் படிங்க.!