chennireporters.com

திருவள்ளூர் கன மழையால் தத்தளிக்கும் கிராமங்கள்.

திருவள்ளூர் மாவட்டத்தில் பெய்து வரும் கனமழையால் திருவள்ளூர் பூங்கா நகர் காக்களூர் அம்சா நகர் மற்றும் புட்ளூர், வேப்பம்பட்டு போன்ற பகுதிகளில் தண்ணீர் தேங்கியுள்ளது.

அதே போல் ஆவடி திருநின்றவூர் ஊத்துக்கோட்டை பெரியபாளையம் மீஞ்சூர் பொன்னேரி பழவேற்காடு போன்ற பகுதிகளில் குடிநீர் பகுதிகளில் தண்ணீர் சூழ்ந்துள்ளது.இதனால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது.

ஆவடியில் குடிசை மாற்று வாரிய பகுதி காந்தி நகர் மேற்கு கவர பாளையம் தென்றல் தெரு போன்ற பகுதிகளில் 5 அடி வரை தண்ணீர் தேங்கியுள்ளது.

ஊத்துக்கோட்டை ஆரணி போன்ற பகுதியில் உள்ள தரை பாலங்கள் உடைந்து உள்ளது.இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.கடந்த ஐந்து ஆண்டுகளாக ஊத்துக்கோட்டை மேம்பால பணி இன்னும் கட்டி முடிக்கப்படாமல் உள்ளது.

பொன்னேரி மீஞ்சூர் அடுத்த அரியன்வாயில் என்ற பகுதியில் உள்ள தங்கவேல் நகர் என்ற எக்ஸ்டென்ஷன் பகுதி உள்ளது.இந்த பகுதியில் தற்போது 70 வீடுகள் வரை உள்ளன.

அதே நேரம் இந்த பகுதியில் நரிக்குறவர்கள் 19 குடும்பத்தினர் வசித்து வருகின்றனர்.அவர்கள் வீடுகள் அனைத்தும் முற்றிலுமாக தண்ணீரில் மூழ்கிவிட்டன.

இந்தப் பகுதியில் இருந்து தண்ணீர் வெளியேறுவதற்கு வழியே இல்லாத அளவுக்கு நீர் வரத்து வாய்க்கால்களை சிலர் அடைத்து வீடு கட்டி உள்ளதால் தண்ணீர் வெளியேறாமல் அதே நிலப்பகுதியில் முழுமையாக தேங்கி இடுப்பளவு தண்ணீர் தற்போது நிற்கிறது.

இன்று காலையில் இருந்து தண்ணீர் நின்று வருவதால்அந்த பகுதி மக்கள் பெரிதும் சிரமம் அடைந்து உள்ளனர். போர்க்கால மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பாதிக்கப்பட்ட மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதையும் படிங்க.!