#tn26 #tamilnadu2026 election result
தமிழக சட்டமன்ற தேர்தல் முடிவுகள் இன்று தெரியும். இன்று காலை 8மணிக்கு தபால் வாக்குகள் எண்ணப்படுகின்றன. அதில் பெரும்பாலும் முன்னிலை வகிக்கும் கட்சிகளே வெற்றி பெரும் . தமிழகத்தின் ஆட்சி கட்டிலில் அமரப்போவது யார்? மகுடம் சுடப்போவது யார் விசிலா, சூரியனா அல்லது இலையா? ஆட்சி பீடத்தில் அமரும் வாய்ப்பு யாருக்கு கிடைக்கும் இந்தக் கேள்விகளுக்கான விடை இன்று காலை 10 மணியளவில் முதல் கட்ட வாக்கு எண்ணிக்கையில் தெரியும்.
கடந்த ஏப்ரல் 23ஆம் தேதி தமிழ்நாடு, பாண்டிச்சேரி, கேரளா, மேற்குவங்கம் போன்ற மாநிலங்களில் சட்டப்பேரவை தேர்தல் நடைபெற்றது. தமிழகத்தில் புதிய வரவாக தமிழக வெற்றிக் கழகம் சார்பில் நடிகர் விஜய் தலைமையிலான கட்சி முதல் முறையாக சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட்டது.

ஏற்கனவே ஆளும் கட்சியான திமுக அவர்களது கூட்டணியில் காங்கிரஸ், இடதுசாரிகள், விடுதலை சிறுத்தைகள், தேமுதிக மற்றும் சிறிய கட்சிகள் தலைமையில் ஒரு அணியாகவும் அதிமுக தரப்பில் பாஜக, புரட்சி பாரதம், அன்பு மணி பாமக மற்றும் சில கட்சிகள் ஒரு கூட்டணியாகவும், சசிகலா மற்றும் ராமதாஸ் தலைமையிலான ஒரு அணியினர் ஒரு கட்சியாகவும், சீமான் தனியாகவும் மற்றும் திமுக கூட்டணியில் இருந்து பிரிந்து வந்த வேல்முருகன் தனி அணியாகவும் களத்தில் நின்றனர். இந்த வாக்குகள் போடப்பட்ட மின்ன்னு இயந்திரங்கள் பத்திரமாக 63 இடங்களில் பத்திரமாக வைக்கப்பட்டது. அந்த வக்கு பெட்டிகளுக்கு ஆயுதமேந்திய மூன்று அடுக்கு பாதுகாப்பு அளிக்கப்பட்டு 24 மணி நேரமும் பாதுகாப்பு வழங்கப்பட்டிருந்தது.

பெட்டிகளை பாதுகாக்க அந்தந்த கட்சிகளின் பிரதிநிதிகள் ஓட்டு பெட்டி வைக்கப்பட்டிருந்த இடத்தில் பாதுகாப்பு பணியில் இருந்தனர். இந்த நிலையில் மே 4ம் தேதி இன்று காலை 8 மணியிலிருந்து தபால் வாக்குகளும் அதன் பிறகு மின்னணு வாக்குகளும் எண்ணப்படும் என்று தலைமை தேர்தல் அதிகாரி அர்ச்சனா தெரிவித்தார் தெரிவித்திருந்தார்.
அதன் அடிப்படையில் இன்று காலை தமிழகத்தின் ஆட்சி அதிகாரத்தை பிடிக்கப் போவது யார்? மகுடம் சூடப் போவது யார்? ஆட்சி அதிகாரத்தில் அமரப் போவது யார்? ஏற்கனவே அதிகாரத்தில் இருந்தவர் திராவிட முன்னேற்றக் கழகமா அல்லது அதிமுக தலைமையிலான கூட்டணியா அல்லது புதிய வரவாக தேர்தலில் கால் பதித்திருக்கும் தமிழக வெற்றிக்கழகமா? என புதிய கேள்விகள் எழத் தொடங்கியுள்ளன தமிழ்நாட்டில் ஐந்து முனை போட்டி நிலவி வருகிறது.

இந்த நிலையில் நாளை இன்று காலை தபால் ஓட்டுகள் எண்ணப்பட்ட பிறகு மின்னணு வாக்குகள் எண்ணப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இன்று காலை தமிழகத்தின் ஆட்சி அதிகாரத்தை கைப்பற்ற போவது யார் என்கிற ஆவல் ஏற்பட்டுள்து. தமிழகம் பெரும் பரபரப்பாக இருந்து வருகிறது. அரசியல் கட்சியினரும் பொதுமக்களும் தேர்தல் திருவிழா கோலத்தைக் காண ஆவலுடன் காத்துக் கொண்டிருக்கின்றனர்.
வாக்கு எண்ணிக்கையில் உதயசூரியன் உதிக்குமா? அல்லது இலை துளிருமா? அல்லது விசில் சத்தத்தில் தாமரை மலருமா என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும். தற்போதைக்கு திமுக கூட்டணி வெற்றி பெறுவதற்கான வாய்ப்பு அதிகம் என்றும் விஜய் கட்சியினர் எதிர்க்கட்சியாக அமையும் வாய்ப்பு ஏற்பட கூடும் என்று சில அரசியல் வல்லுனர்களும், மூத்த பத்திரிகையாளர்களும் கருத்து தெரிவித்துள்ளனர்.
விஜய்க்கு கூடிய கூட்டம் வாக்காக மாறி இருந்தால் அது தமிழகத்தின் தலையெழுத்தை மாற்றும் சக்தியாக மாறும். அந்தக் கூட்டம் ஓட்டாக மாறாத பட்சத்தில் அது வெறும் காற்றில் கரையும் விசில் சத்தமாகவே போய்விடும் என்கின்றனர். எனவே அதிகாரத்தை கைப்பற்ற போவது யார் என்பது இன்னும் சில மணி நேரங்களில் தெரிந்து விடும்.