chennireporters.com

ஆவடி 37-வது வார்டில் உதிக்காத சூரியன்!துளிராத இலை!”வெளிச்சத்தில்”டார்ச்.

ஆவடி மாநகராட்சி தேர்தல் வரும் சனிக்கிழமை அன்று நடைபெற உள்ளது.இங்கே மொத்தம் 48 வார்டுகள் உள்ளன.அதில் குறிப்பாக சேக்காடு 37வது வார்டில் போட்டியிடும் மக்கள் நீதி மையத்தின் வேட்பாளர் கே.ஜே. குணசீலன் வெற்றி வாய்ப்பு பிரகாசமாக இருக்கிறது.

இந்த தொகுதியில் இது வரை சூரியன் உதிக்காமலும் இலை துளிராமலும் இருக்கிறது.

இலை துளிராமல் இருப்பதற்கு காரணம் உள்ளூர் கட்சி பிரமுகருக்கு சீட்டுவழங்கப்படாமல் அம்பத்தூர் பகுதியை சேர்ந்த முன்னாள் நகர செயலாளர் காத்தலிங்கம் மகனுக்கு சுதாகர் என்பவருக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

அதனால் உள்ளூர் அதிமுகவினர் அவருக்கு வேலை செய்யவில்லை.திமுகவை சேர்ந்த ரமேஷ் என்பவருக்கு கூட்டணி கட்சியினர் சரிவர வேலை பார்க்கவில்லை.

குணசீலன் 2019 ஆண்டு காலகட்டத்தில் வெங்காயம் 200 ரூபாய் விற்ற போது ஒரு கிலோ 50 ரூபாய்க்கு ஒவ்வொரு குடும்பத்திற்கும் கொடுத்தவர்.

2020ஆம் ஆண்டு மகளிர் தினத்தை முன்னிட்டு 1500 குடும்பங்களுக்கு தரமான அரிசி மற்றும் மளிகை பொருட்களை வழங்கியவர்.

சேக்காடு முதல் கோபாலபுரம் வரை 67 சி.சி.டிவி கேமராக்களை 7 லட்சம் ரூபாய் மதிப்பில் தன் சொந்த பணத்தில் சி.சி.டிவி அமைத்துக் கொடுத்தவர்.

இதனால் அந்த பகுதியில் மோட்டார் பைக் மற்றும் திருட்டு சம்பவங்கள் குறைந்துள்ளது.

தொகுதியில் மகளிர் அமைப்புகள், தொண்டு நிறுவனங்கள், குடியிருப்பு சங்கங்களிடம் நல்ல அணுகுமுறை கொண்டவர்.பொங்கல் திருநாளில் கரும்பு ஒன்றை பத்து ரூபாய்க்கு விற்றவர்.

தீபாவளிக்கு 1500 குடும்பங்களுக்கு தரமான புடவை, பட்டாசு, இனிப்பு ஆகியவற்றை இலவசமாக வழங்கியவர்.

இதனால் இவருக்கு அந்த வார்டில் பொதுமக்களிடம் நல்ல செல்வாக்கு பெற்றவர்.இதுவே இவரது வெற்றிக்கு பெரும் காரணமாக துணை நிற்கிறது.

இதையும் படிங்க.!