தமிழகத்தில் உள்துறை மற்றும் சுகாதாரத்துறை செயலாளர்கள் உள்பட பல ஐ.ஏ.எஸ்., அதிகாரிகள் இடமாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவி ட்டுள்ளது.
உள்துறை செயலாளராக இருந்த எஸ்.கே.பிரபாகர் – வருவாய் நிர்வாகத்துறை ஆணையராகவும்,வணிக வரித்துறை கமிஷனராக இருந்த பணீந்திர ரெட்டி- உள்துறை செயலாளராகவும் கூட்டுறவு, உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்துறை செயலாளர் நசீமுதீன்- தொழிலாளர் நலன் மற்றும் தனித்திறன் மேம்பாடு துறை செயலாளராகவும்.
சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை முதன்மை செயலாளர் ராதாகிருஷ்ணன்- கூட்டுறவு,உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு துறை முதன்மை செயலாளராகவும்,
சென்னை மெட்ரோ ரயில் வாரிய மேலான் இயக்குநர் மற்றும் முதன்மை செயலாளர்இயக்குநர் பிரதீப் யாதவ்- நெடுஞ்சாலை மற்றும் சிறு துறைமுகங்கள் துறை முதன்மை செயலாளராகவும்.
நெடுஞ்சாலை மற்றும் சிறுதுறைமுகங்கள் துறை முதன்மை செயலாளர் தீரஜ் குமார்- வணிகவரித்துறை கமிஷனர் முதன்மை செயலாளராகவும்.
சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறையில், சிறப்பு அதிகாரி/ முதன்மை செயலாளராக பணியாற்றிய செந்தில்குமார்- தமிழக சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை முதன்மை செயலாளராகவும்.
தமிழக விளையாட்டு ஆணைய முன்னாள் உறுப்பினர் செயலாளர் ஆனந்தகுமார்- மாற்றுத்திறனாளிகள் நலத்துறை செயலாளராகவும்,தேசிய சுகாதார இயக்கத்தின் இயக்குநர் தாரேஷ் அகமது -ஊரக வளர்ச்சி மற்றும் பஞ்சாயத்து ராஜ் கமிஷனராகவும்.
மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை கமிஷனர் ஜெயகாந்தன்- புவியியல் மற்றும் கனிம வளத்துறை கமிஷனராகவும்புவியியல் மற்றும் கனிம வளத்துறை இயக்குநர் நிர்மல் ராஜ் – போக்குவரத்து துறை கமிஷனராகவும்.
வெளிநாடு வாழ் தமிழர் நலத்துறை மற்றும் மறுகுடியமர்த்தல் துறை செயலாளர் ஜெசிந்தா லசாரஸ்- மாற்றுத்திறனாளிகள் நலத்துறை கமிஷனராகவும் தென்காசி மாவட்ட கலெக்டர் கோபால சுந்தர ராஜ்-வணிகவரித்துறை இணை கமிஷனராகவும்.
தமிழக சிவில் சப்ளை கார்பரேசன் இணை மேலாண் இயக்குநர் சங்கீதா- வணிக வரித்துறை நிர்வாக கூடுதல் கமிஷனராகவும்,திருச்சி கலெக்டர் சிவராசு-கோவை, வணிகவரித்துறை இணை கமிஷனராகவும்.
மிகவும் பிற்படுத்தப்பட்டோர்த்துறை கமிஷனர் மதிவாணன்-மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை துறை கமிஷனராகவும் மரியம் பல்லவி பல்தேவ்- தொழிற்சாலைகள் துறை கூடுதல் செயலாளராகவும்.
மின்னணு நிர்வாகத்துறை இயக்குநர் விஜயேந்திர பாண்டியன்- கருவூலம் மற்றும் அக்கவுண்ட் துறை கமிஷனராகவும் மாற்றுத்திறனாளிகள் நலத்துறை செயலாளர் லாவ்லீனா- உணவுபாதுகாப்பு துறை கமிஷனராகவும்.
ராமநாதபுரம் முன்னாள் கலெக்டர் சந்திரகலா- தொழில் முதலீடு கழக இயக்குநராகவும் நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் விநியோகத்துறை இணை செயலர் ஜான் லூயிஸ்- வருவாய் நிர்வாகம் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை இணை கமிஷனராகவும்.
அருங்காட்சியக துறை இயக்குநர் ராமன்- வருவாய் நிர்வாகம் மற்றும் பேரிடர் மேலாண்மை ஆணையரக அலுவலகத்தில் பேரிடர் மேலாண்மை இயக்குநராகவும் தட்கோ மேலாண் இயக்குநர் விவேகானந்தன்- மாநில தேர்தல் ஆணைய செயலாளராகவும்.
சென்னை முன்னாள் கலெக்டர் விஜயராணி- சேலம் பட்டுநூல் வளர்ப்பு கழக இயக்குநராகவும் பால் உற்பத்தி மற்றும் பால் வளர்ச்சி கழக கமிஷனர் பிரகாஷ்- வரலாறு மற்றும் காப்பகங்கள் கமிஷனராகவும்.
ஊரக வளர்ச்சி மற்றும் பஞ்சாயத்து ராஜ் துறை சிறப்பு செயலாளர் பிங்கி ஜோயல்- பொருளாதாரம் மற்றும் புள்ளியியல் துறை கமிஷனராகவும் பொருளாதாரம் மற்றும் புள்ளியியல் துறை கமிஷனர் கருணாகரன்- ஊரக வளர்ச்சி மற்றும் பஞ்சாயத்து ராஜ் துறை சிறப்பு செயலாளராகவும்.
கருவூலத்துறை கமிஷனர் வெங்கடேஷ்- போக்குவரத்து துறை சிறப்பு செயலாளராகவும் வருவாய் நிர்வாகம் மற்றும் பேரிடர் மேலாண்மை இணை கமிஷனர் சீதா லெட்சுமி- சமூக நலன் மற்றும் பெண்கள் முன்னேற்றத்துறை இணை செயலாளராகவும்.
ஊரக வளர்ச்சி மற்றும் பஞ்சாயத்து ராஜ் துறை இயக்குநர் பிரவீன் நாயர்- மின்னணு நிர்வாகத்துறை இயக்குநராகவும் தமிழக பாட புத்தகம் மற்றும் கல்வி சேவை கழக மேலாண் இயக்குநர் மணிகண்டன்- பள்ளிகல்வித்துறை இணை செயலாளராகவும்.
வரலாறு மற்றும் காப்பகங்கள் துறை முதன்மை கமிஷனர் ஹர்சகாய் மீனா – திட்டம் மற்றும் வளர்ச்சித்துறை சிறப்பு செலயாளராகவும் சென்னை மாநகராட்சி சுகாதாரத்துறை துணை கமிஷனர் நரனவாரே மணிஷ் ஷங்கர்ராவ்- ஊரக வளர்ச்சி மற்றும் பஞ்சாயத்து ராஜ் கூடுதல் இயக்குநராகவும்.
தமிழக குடிநர் சப்ளை மற்றும் கழிவுநீர்வாரிய இணை மேலாண் இயக்குநர் பிரதீப்குமார்- திருச்சி கலெக்டராகவும் சேலம், பட்டுநூல் வளர்ச்சித்துறை இயக்குநர் சாந்தி- தர்மபுரி கலெக்டராகவும்.
மாற்றுத்திறனாளிகள் நலத்துறை இயக்குநர் ஜானி டாம் வர்கீஸ்- ராமநாதபுரம் கலெக்டராகவும் வருவாய் நிர்வாகம் மற்றும் பேரிடர் மேலாண்மை ஆணைய கமிஷனர் சித்திக்- சென்னை மெட்ரோ ரயில் கழக முதன்மை செயலாளர் மற்றும் மேலாண் இயக்குநராகவும்.
சென்னை குடிநீர் மற்றும் கழிவுநீர் வாரிய முன்னாள் நிர்வாக இயக்குநர் ஆகாஷ்- தென்காசி மாவட்ட கலெக்டராகவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.