திருவள்ளூர் மாவட்டத்தில் கொரோனா தொற்று பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.நேற்று 1,551 பேருக்கு தொற்று பாதிப்பு உறுதியானது.இது வரை மொத்தம் 79 ஆயிரத்து 022 நபர்களுக்கு தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.நேற்று ஒரே நாளில் 1,752 நபர்கள் குணமடைந்து சென்றனர்.
அதே நேரத்தில், திருவள்ளூர் மாவட்டம் முழுவதும் அரசு மருத்துவமனைகள், தனியார் மருத்துவமனைகள் மற்றும் சிகிச்சை மையங்களில் தங்க வைக்கப்பட்டவர்கள், வீடுகளில் தனிமைப்படுத்த ப் பட்டவர்கள் என 7,730 பேர் இருப்பதாகவும் சுகாதார துறையினர் தெரிவிக்கின்றனர்.
இந்நிலையில், திருவள்ளூர் மாவட்ட தலைமை அரசு மருத்துவமனையில் நேற்று இரவு போதிய ஆக்சிஜன் இல்லாததால், 7 பேர் வரை உயரிழந்ததாகவும், மருத்துவமனை நிர்வாகம் அலட்சியமாக பதில் அளிப்பதாகவும் ஒரு பெண் பேசிய ஆடியோ வைரலாகியுள்ளது.
தலைமை அரசு மருத்துவமனையில் ஆக்சிஜன் வசதி இல்லாததால், டேபிள் பேன் வைத்திருக்கும் வீடியோவும் வைரலாகிறது.