திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி தொகுதிக்குட்பட்ட தரணி வரதபுரம் கிராமத்தை சேர்ந்தவர் கணபதி .இவர் சென்னையில் உள்ள தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார்.இவருடைய மனைவி ஆனந்தி நிறைமாத கர்ப்பிணியான ஆனந்திக்கு நேற்று பிரசவ வலி ஏற்பட்டது.
உடனடியாக அந்தப் பெண்ணை திருத்தணி அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர் அங்கு ஆனந்தியை பரிசோதித்த டாக்டர்கள் இரண்டு நாட்களுக்குள் பிரசவம் ஆகிவிடும் ஆனால் அந்த பெண்ணுக்கு உடலில் ரத்தம் குறைவாக இருக்கிறது.உடனே ஏற்பாடு செய்யுங்கள் என்று டாக்டர்கள் தெரிவித்தனர்
.மருத்துவமனையிலும் ரத்தம் இல்லாததால் பதற்றமடைந்த கணபதி தனது மனைவிக்கு இரத்தம் தேவைப்படுகிறது வாட்ஸ் அப் குரூப்பில் தகவல் அனுப்பினார்.அதைப் பார்த்த திருத்தணி தி.மு.க எம்.எல்.ஏ சந்திரன் உடனடியாக அவரை தொடர்பு கொண்டு உங்கள் மனைவிக்கு தேவையான ரத்தத்தை நான் ஏற்பாடு செய்கிறேன் உறுதியளித்தார்.
பின்னர் தனது உதவியாளர் மூலம் அரை மணி நேரத்தில் அனிதாவிற்கு தேவையான ரத்தத்தை ஏற்பாடு செய்து கொடுத்தார் ஆனந்திக்கு தேவையான ரத்தம் கொடுக்கப்பட்டு உடனடியாக அவருக்கு செலுத்தப்பட்டது சரியான நேரத்தில் ரத்தம் கொடுத்து உதவி செய் தி.மு.க எம்.எல்.அவர்களுக்கு கணபதிக்கு அவரது குடும்பத்தினர் நன்றி தெரிவித்தனர்.
அரை மணி நேரத்தில் ரத்த ஏற்பாடு செய்து தந்த தி.மு.க எம்.எல்.ஏ வின் செயல் பாராட்டத்தக்கது இந்த செய்தி சமூக வலைத்தளத்தில் வைரலாக பரவி வருகிறது.