chennireporters.com

தென் பசுபிக்கில் உள்ள டங்கோ தீவுகளில் சுனாமி. அதிர்ச்சியில் மக்கள்.

கடலுக்கு அடியில் எரிமலை வெடிப்பு காரணமாக அந்த தீவுகளை சுனாமி தாக்க தொடங்கியுள்ளன.2.5 அடிக்குமேல் டோங்கா நாட்டில் ஆழிப்பேரலை தாக்கம் ஏற்பட்டுள்ளது.

அமெரிக்காவின் சாமோ தீவிலும் இரண்டு அடிக்கு மேல் ஆழிப்பேரலை தாக்கி வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.அந்த பகுதியில் உள்ள தீவுகள் முழுவதிற்கும் தற்போது சுனாமி எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.

சற்றுமுன்:வெடித்தது எரிமலை, வந்தது சுனாமிநியூசிலாந்தில் இருந்து 2300 கிலோமீட்டர் தொலைவில் பசிபிக் பெருங்கடலில் அமைந்துள்ள தீவு நாடு டோங்கா.

இந்த தீவில் இருந்து 65 கி.மீ தொலைவில் கடலில் உள்ள எரிமலை வெடிக்க தொடங்கியதால் சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.இதன் சாட்டிலைட் வீடியோ தற்போது அதிகமாக பகிரப்பட்டு வருகிறது.

இந்த நிலையில் டோங்கா, பிஜி தீவு, சமோவா உள்ளிட்ட நாடுகளில் சுனாமி அலைகள் எழுந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இதையும் படிங்க.!