நடிகர் விஜியின் த,வெ,க, கட்சியின் முதல் மாநில மாநாடு விக்கிரவாண்டியில் நேற்று சிறப்பாக நடந்து முடிந்தது. இது கிறித்து தமிழக தேசிய விவசாயிகள் சங்கத்தின் தலைமை ஒருங்கிணைப்பாளர் கே.ஆர். எஸ் மணி அவர்கள் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
நடக்கும் நடக்கும் என்ற விஜய்யின் அரசியல் மாநாடு நடந்தேறி விட்டது. அரசாங்க புள்ளி விவரப்படியே எட்டு லட்சம் தொண்டர்கள் கலந்து கொண்டார்கள் என்று சொல்லப்படுகிறது. 8 லட்சம் தொண்டர்கள் எட்டு கோடி மக்களுக்கு இந்த உணர்வுகளை எடுத்துச் செல்வார்கள் என்பதில் எந்தவித சந்தேகமும் இல்லை.
ஏனென்றால் விஜய்யின் பேச்சு, உணர்வுள்ள இதயங்களை சரியாக தொட்டால் முன்பு கேட்டிராத ஆயிரம் கிண்கிணி நாதங்கள் கேட்கும் என்பது போல ஒவ்வொரு இளைஞனையும் சுண்டி இழுத்தது. அந்த பேச்சில் ஒரு ஆடம்பரமோ, ஒரு இலக்கிய வளமோ, அடுக்குமொழியோ ஆவேச பேச்சு எதுவுமே இல்லாத ஒரு எதார்த்தமான பேச்சு இந்த பேச்சு பொதுமக்களுக்கு பிடித்துப்போன பேச்சு வழக்கமான ஆங்கிலம் தமிழில் கலந்து தன்னுடைய உணர்வுகளை இளைஞர்கள் மத்தியில் ஊட்டி வளர்த்து விட்டீர்கள்.
மாற்றம் வேண்டும் என்று சொல்லுகிறார் மதச்சார்பின்மை வேண்டும் என்று சொல்லுகிறார். பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் என்று சொல்லுகிறார். அவர் சொல்லுவதெல்லாம் மக்களுக்கான தேவை; அந்தத் தேவையை அவரே சொல்வது போல எந்த கருவியை எந்த நிர்வாக இயந்திரத்தை வைத்துக்கொண்டு செய்யப் போகிறார் என்பது தான் நமது கேள்வி?
இந்த ஷீனித்துப்போன நைந்து போன உழுத்துப் போன நிர்வாக இயந்திரத்தை வைத்துக்கொண்டு இவ்வளவு பெரிய மாற்றங்களை இவர் செய்ய முடியும் என்று நம்புகிறாரா அல்லது அந்த நிர்வாக இயந்திரத்தின் மீது கை வைத்து அதன் பலனை அனுபவிக்க போகிறாரா? இவர் களமாட வேண்டியது மக்கள் மத்தியில் தான் அதில் எள்ளளவும் சந்தேகம் இல்லை.
ஆனால் அந்த களம் ஏற்கனவே தீர்மானிக்கப்பட்ட ஒரு களம் ஏற்கனவே ஒரு வேலி போட்ட களம் எவ்வளவு இவர்கள் விளையாடினாலும் அந்த வேலிக்குள் தான் விளையாட வேண்டும். ஏனென்றால் அந்த களம் இந்திய அரசியலமைப்பு என்ற கம்பியால் கட்டப்பட்டிருக்கிறது. அரசியல் அமைப்பு சட்டம் என்ற ஒரு வேலிக்குள் இவர் விளையாடித்தான் தீர வேண்டும்.
கே.ஆர். எஸ். மணி தலைமை ஒருங்கிணைப்பாளர் தமிழக தேசிய விவசாயிகள் சங்கம்
அந்த அரசியல் அமைப்பு சட்டம் என்று வேலிக்குள். இவர் ஆடுகின்ற ஆட்டத்தில் மக்களுடைய வாழ்நிலை மாறும் என்று நம்பினால் நாமும் நம்புவோம். ஆனால் அது அவ்வளவு சாத்தியமில்லை. அது உங்களை மாற்றத்திற்காக களமாட சுந்தரமாக களம் ஆட விடாது. ஏற்கனவே கட்டி வைத்த சிலந்தி வலைக்குள் நீங்களும் ஒருவிட்டில் பூச்சி போல மாட்டிக் கொண்டு இந்திய அரசியலில் ஒரு மாற்றத்தை கொண்டு வர விரும்புகிறீர்கள் என்றால் அது சாத்தியம் இல்லை என்பது தான் எங்களுடைய கடந்த கால அனுபவங்கள் அதற்கு நீங்கள் முயற்சிக்கிறீர்கள்.
இந்த இளைஞர்களை இந்த இளைஞர்களின் சிந்தனைகளை மாற்றத்துக்காக கூர்மையடைய செய்யுங்கள் அரசியல் செய்யுங்கள் நீங்களும் வழக்கும் போல வருகின்ற தலைவர்களைப் போல இந்த இளைஞர்களை மழுங்கடித்து விடாதீர்கள் உங்களை அதிகமாக எதிர்பார்க்கின்ற இளைஞர்கள் மத்தியில் எதார்த்தமாக நீங்க பேசிய பேச்சு அருமையாக இருந்தது. ஆனால் நீங்கள் களமாட வேண்டிய அந்தக் களம் எதார்த்தமானது அல்ல அது உங்களுக்குள்ள நீங்கள் இப்படித்தான் நடக்க வேண்டும் என்று ஏற்கனவே கட்டி வைக்கப்பட்டு இருக்கின்ற இந்த களத்துக்குள் நீங்கள் போராட வேண்டும்.
அப்படி போராடி ஒரு மாற்றத்தை உங்களால் நடைமுறைப்படுத்த முடியும் என்று நீங்கள் நம்பினால் அது அந்த இளைஞர்களும் நம்புவார்கள் ஆனால் கடைசியில் இது ஏமாற்றத்தில் கொண்டு போய்விடாமல், இந்த ஓட்டு அரசியல் உங்களுக்கு கொடுத்திருக்கின்ற குறைந்தபட்ச அதிகாரத்தை வைத்துக்கொண்டு நீங்கள் என்ன சாதிக்கப் போகிறீர்கள் என்று எங்களைப் போன்ற அரசியல் நோக்கர்கள் கருதுகிறார்கள்.
கே.ஆர்.எஸ். மணி தலைமை ஒருங்கிணைப்பாளர் தமிழக தேசிய விவசாயிகள் சங்கம்.
எது எப்படி ஆனாலும் லட்சக்கணக்கான இளைஞர்களை வசப்படுத்தி விட்டீர்கள் அதில் வெற்றியும் கண்டீர்கள் என்று இந்த கூட்டத்தின் மூலமாக நிரூபித்து விட்டீர்கள்.
அந்த இளைஞர்களை சரியாக வழி நடத்துங்கள் இறுதியில் உங்களுக்கு வெற்றி கிடைக்கட்டும் ஆனால் அந்த வெற்றி மக்களுக்கான மாற்றத்திற்கான வெற்றியாக மாற வேண்டும் என்று சொல்லி இந்த ஒரு புதிய முயற்சிக்கு மக்களை சந்திக்கின்ற முயற்சிக்கு மக்களை பற்றி சிந்திக்கின்ற முயற்சிக்கு எங்கள் தமிழக தேசிய விவசாயிகள் சங்கத்தின் சார்பாக வாழ்த்துக்களையும் பாராட்டையும் தெரிவித்து கொள்கிறோம். அன்புடன் கே ஆர் எஸ் மணி தலைமை ஒருங்கிணைப்பாளர் தமிழக தேசிய விவசாயிகள் சங்கம். இவ்வாறு அந்த அறிக்கையில் அவர் கூறியுள்ளார்.