chennireporters.com

திருவள்ளூர் அருகே இரண்டு பீரங்கி குண்டுகள் கண்டெடுப்பு : இரண்டாம் உலகப்போரில் பயன்படுத்தப்பட்ட தா?

திருவள்ளூர் மாவட்டம் பூண்டி அடுத்த சீத்தஞ்சேரி அருகே இரண்டு பீரங்கி குண்டுகள் கண்டெடுக்கப்பட்டுள்ளது இதனால் அந்த பகுதியில் குண்டு வெடித்து விடுமோ என்ற அச்சம் நிலவி வருகிறது.

பூண்டி அடுத்த சீத்தஞ்சேரி அருகே உள்ள ராமநாதபுரம் கிராமத்தில் ஏரிக்கரை ஓரத்தில் உள்ள வெங்கட்டராமன் என்பவருக்கு சொந்தமான நிலத்தில் உலகப் போரின்போது பிரிட்டிஷ்காரர்கள் வீசப்பட்ட இரண்டு பீரங்கி குண்டுகள் கண்டெடுக்கப்பட்டுள்ளது.

ஒரு குண்டு இரண்டடி நீளமும் பதினைந்து கிலோ எடை இருக்கும் என்று போலீஸ் தரப்பில் கூறப்படுகிறது.

திருவள்ளூர் மாவட்டம்,பூண்டி அடுத்த சீத்தஞ்சேரி அருகே உள்ள ராமாநாதபுரம் கிராமத்தில் வெங்கடரமணா என்பவருக்கு சொந்தமான நிலத்தில் பிரிட்டிஷ்காரர்கள் ஆட்சி காலத்தில் உலகப்போரின் போது வீசப்பட்ட இரண்டு பீரங்கி குண்டுகளை அப்பகுதியில் இருந்ததைக் விறகு வெட்டிக் கொண்டிருந்த நபர்கள் பார்த்தனர்.

பின்னர் காவல்துறைக்கும், வருவாய்த் துறையினருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு ஊத்துக்கோட்டை இன்ஸ்பெக்டர் குமார் தலைமையிலான போலீசார் மற்றும் வருவாய் துறையினர் சென்று பீரங்கி குண்டுகளை மீட்டு நிபுணர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.

இந்த பகுதியில் உலகப்போரின் போது பிரிட்டிஷ்காரர்கள் பயிற்சி செய்ததாகவும், அப்போது கிராமத்தில் இருக்கும் நபர்களை வெளியேற்றி பயிற்சி செய்து போது ஒரு சில குண்டுகள் இப்பகுதியில் பறந்து விழுந்து இருக்கலாம் என்றும் அப்பகுதியை சேர்ந்த ஒரு பெரியவர் கூறிவருகிறார்.

ராமாபுரம் பகுதியில் இதேபோன்று பீரங்கி குண்டுகள் பல இருக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது ஏற்கனவே இந்த கிராமத்தில் 1996 ம் ஆண்டு ஒரு பீரங்கி குண்டு
கண்டுபிடிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க.!