ஆவடி 18 வது வார்டில் விடியல் தரும் உதயசூரியன்

February 18, 2022

By இரா. தேவேந்திரன்.

நடைபெறவுள்ள ஆவடி மாநகராட்சி தேர்தலில் 18-வது வார்டில் போட்டியிடும் வேட்பாளர் சுகன்யா சதீஷ்.

சூறாவளி பிரச்சாரம் செய்து வருவதுதான் வீடு வீடாக சென்று மக்களுக்கு தேவையான எல்லாப் பணிகளையும் செய்து தருவதாக உறுதி அளித்து வருகிறான்.

18-வது வார்டில் உள்ள அம்பேத்கார் நகர், பாபுநகர், சார்லஸ் நகர், காந்தி நகர், நேரு நகர், சோழன் நகர் என உள்ளடங்கியது.

18-வது வார்டில் பல வருடங்களாக சாக்கடை கால்வாய் இல்லாத அனைத்து பகுதிகளுக்கும் சாக்கடை கால்வாய் கட்டப்பட்டு கால்வாய் மூடப்படும்.

18-வது வார்டில் உள்ள அனைத்து பள்ளிகளின் தரத்தை உயர்த்துவோம்.அம்பேத்கார் நகர், சோழன் நகரில் உள்ள ஏரியில் போட்ஹவுஸ் அமைத்து அதை சுற்றுலாத்தலமாக நடவடிக்கை எடுப்பேன்.

அந்த இடத்திலேயே இரண்டு பக்கங்களிலும் பூச்செடிகள் அமைத்து சிறந்த முறையில் நடை பாதை அமைக்கப்படும்.*

*சோழன் நகரில் மழைக்காலத்தில் ஊருக்குள் வரும் மழைத்தண்ணீரை ஏரிக்குள் கொண்டுசெல்ல அதிகாரிகளுடன் கலந்து பேசி பாதாள சாக்கடை அமைத்து மழைநீரை ஏரிக்குள் கொண்டு செல்ல திட்டம் வகுக்கப்படும்.*

*24 மணி நேரமும் இயங்கும் வகையில் ஆரம்ப சுகாதார நிலையம் அமைத்து தரப்படும்.*

இளம்பெண்கள், மாணவர்கள் என அனைவருக்கும் தற்காப்பு கலையை கற்று தர சொந்த செலவில் பயிற்சி நிலையம் அமைத்து சிலம்பம், தேக்வாண்டோ, கராத்தே, குங்பூ, புட்பால், கிரிக்கெட் என அனைத்து விளையாட்டுகளுக்கும் பயிற்சியாளரை நியமித்து பயிற்சி அளிக்கப்படும்.

அனைத்து தெருக்களிலும் சி.சி.டி.வி கேமராக்கள் அமைத்து தரப்படும்.

18-வது வார்டில் உள்ள அம்பேத்கார் நகர் பகுதியில் ஏழை மாணவர்களின் கல்வித்தரம் உயர மேல்நிலை *கல்வியை தொடர முடியாமல் வறுமை நிலையில் உள்ள மாணவ, மாணவிகளுக்கு வங்கி மூலம் லோன் பெற்று தரப்படும்.*

இதனால் அவர்கள் உயர் கல்விக்கு வழிவகை செய்யப்படும்.சிறந்த முறையில் நூலகம் தொடங்கப்பட்டு அமைச்சர் உதவியுடன் சிறந்த பல திட்டங்களை இந்த வார்டுக்கு கொண்டு வரப்படும்.

 

வீடு இல்லாத ஏழை மக்களுக்கு தமிழக அரசின் குடிசை மாற்று வாரியத்தில் இருந்து பால்வளத்துறை அமைச்சரிடம் அனுமதி பெற்று பின்தங்கிய மக்களுக்கு தொகுப்பு வீடுகள் கட்டித்தரப்படும்.

இவரை எதிர்த்து நிற்கும் அதிமுகவை சேர்ந்த பானுமதி கடந்த ஆட்சி காலத்தில் இந்த பகுதிக்கு எந்த விதமான நல்ல வேலைகளையும் செய்யவில்லை.ஆகவே பொதுமக்கள் தன்னெழுச்சியாக சுகன்யாவுக்கு வாக்களிக்க வேண்டும் என்கிற எண்ணத்தில் இருக்கிறார்கள்.

எனவே 18-வது வார்டில் வெற்றியின் உச்சத்தில் இருக்கிறான் உதயசூரியன்.

Share:

இரா. தேவேந்திரன்.

February 18, 2022

Leave a Comment