chennireporters.com

#Udhayanidhi Stalin in Jayalalithaa style; ஜெயலலிதா பாணியில் உதயநிதி ஸ்டாலின்.

ஆவடி பேருந்து நிலையத்தில் உள்ள பழுதடைந்த அண்ணா சிலை புதுப்பிக்கப்பட்டு இருந்தது அதனை திறந்து வைக்க இன்று காலை  நவம்பர் 24 ம் தேதி 10.30 மணிமணியளவில்  துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின்  வருகை தந்திருந்தார். மற்றும் பல்வேறு அரசின் நலத்திட்ட உதவிகளை வழங்கவும் விழா குழுவினர் ஏற்பாடு செய்திருந்தனர்.

வழக்கத்தை காட்டிலும் கூட்டம் குறைவாகத்தான் இருந்தது.  காலை நேரம் என்பதால் பெண்கள் அதிக அளவில்  இந்த நிகழச்சியில் கலந்து கொள்ள வில்லை. ஜெயலலிதா முதலமைச்சராக இருந்த காலத்தில் வீட்டில் பத்து மணிக்கு கிளம்பினால் பத்து ஐந்து மணிக்கு போக்குவரத்தை போலீசார் நிறுத்தி விடுவார்கள்.

அவர் எத்தனை மணிக்கு கிளம்பி தலைமைச் செயலகம் வருகிறாரோ அதுவரைக்கும் பொதுமக்கள் காத்து நிற்பார்கள். அது பேசு பொருளாகி ஜெயலலிதாவுக்கு பெரும் அவப்பெயரை ஏற்படுத்தியது. அந்த  காரணத்தினால் பிற்காலத்தில் அவர் அதை தவிர்த்தார் அதைப்போலவே மற்ற அரசியல் தலைவர்களும்  அதனை பின்பற்றி வந்தனர்.

ஆனால் இன்றைக்கு ஆவடிக்கு அரசு நிகழ்ச்சிக்கு வந்த உதயநிதி ஸ்டாலின் வருவதற்கு அரை மணி நேரத்திற்கு முன்னதாகவே திருவள்ளூர் மார்க்கத்திலிருந்து சென்னை செல்லும் வாகனங்களும்  மற்றும் பேருந்துகள் மற்றும் இருசக்கர வாகனங்களை போலீசார் தடுத்து நிறுத்தினர். அதே போல  சென்னையிலிருந்து திருவள்ளூர் மார்கமாக செல்லும் வாகனங்களையும் போலீசார் தடுப்புகள் வைத்து கயிறு கட்டி நிறுத்தி வைத்து விட்டனர்.

இதனால் வாகன ஓட்டிகள் பெரும் சிரமம் அடைந்தனர்.  ஜெயலலிதாவை தன்னுடைய தவறை உணர்ந்து போக்குவரத்தை தடை செய்யாமல் பொதுமக்கள் பயணம் செய்ய வேண்டும் என்று தன் போக்கை மாற்றிக் கொண்டார். ஆனால் வளர்ந்து வரும் இளம் தலைவர் வருகைக்காக போலீசார் நீண்ட நேரம் பொதுமக்களையும் விடியல் பயண பேருந்துகளையும் நிறுத்தி வைத்தது பொதுமக்கள் மத்தியில் பெரும் பேசுபொருளாக இருந்தது அதை கடுமையாக விமர்சித்தனர். அதேபோல அண்ணாசிலை அருகில் உள்ள ஆட்டோஸ்டேண்ட் மற்றும் கடைகளை காலை11மணிக்குமேல் தான் திறக்கவேண்டும் என்று காவல்துறையினர் கட்டளை விதித்திருந்தனர்.என்பது குறிப்பிடதக்கது.

இந்த நிலையில் எடப்பாடி பழனிச்சாமி நடத்தும் கூட்டங்களில் திடீர், திடீரென 108 ஆம்புலன்ஸ் வருகிறது என்று குற்றம் சாட்டியிருந்தார். அவருடைய குற்றச்சாட்டுக்கு பதில் சொல்லும் வகையில் இன்று ஆவடியில் அண்ணா சிலை திறப்பின் போது  உதயநிதி ஸ்டாலின் பேசிக்கொண்டிருந்த போது திடீரென சத்தம் இல்லாமல் ஒரு 108 ஆம்புலன்ஸ் கோவில் பதாகையிலிருந்து ஆவடி நோக்கி அம்பத்தூர் மார்க்கமாக சென்றது.

ஜெயலலிதா பாணியில் உதயநிதி ஸ்டாலின் என்ற அளவிற்கு இன்றைக்கு நிகழ்ச்சிகளை  வடிவமைத்து இருந்தனர்.  உதயநிதி ஸ்டாலின் தற்போதைய நிலையை மாற்றிக் கொள்வாரா இல்லை அவர் மனதை குளிர்ச்சி அடைய வைக்க வேண்டும் என்று மாவட்ட செயலாளர் மற்றும்  போலீஸ் அதிகாரிகளும் விரும்புகின்றனரா என்று தெரியவில்லை. துணை முதல்வரின் விழாவில் ஆவடி மாநகர காவல் துறை கமிஷனர் சங்கர் மிஸ்ஸிங் என்பது ஐலட்டான செய்தி. 

இதையும் படிங்க.!