சென்னை மக்களின் நினைவில் நீங்க சிறப்பு செய்தி;
கே.கே. நகர் சம்பவத்தை இன்று நினைத்தாலும் நெஞ்சம் வெடிக்கிறது. வாழ்கையில் மறக்கமுடியாத நாளாக கடந்த 2005 ம் ஆண்டு டிசம்பர் 18 ம் தேதி நடந்த அந்த கோர விபத்து மறக்கமுடியாதது.
கடந்த 2005 இதே டிசம்பர் 18-ந் தேதி அன்றுதான், சென்னை எம்.ஜி.ஆர். நகரில் 42 பேர் பலியான சம்பவம் தமிழகத்தையே உலுக்கியது. கனமழை, வெள்ளத்தில் சென்னை மாநகரம் தத்தளித்தது.
கே. கே. நகரை ஒட்டி அமைந்துள்ள எம்.ஜி.ஆர். நகரில் வெள்ள நிவாரண டோக்கன் மையத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் மிதிபட்டு 23 பெண்கள் உள்பட 42 பேர் இறந்தனர். டிச.18 அன்று அதிகாலை 4 மணிக்கு அந்தக் கோரச் சம்பவம் நடந்தது.
தென் சென்னையில் கிண்டி-மாம்பலம் தாலுகாவில் வெள்ளத்தால் பாதிக்கப் பட்டவர்களுக்கு ரூ. 2 ஆயிரம் ரொக்கம், வேட்டி, சேலை, 10 கிலோ அரிசி உள்ளிட்ட நிவாரணப் பொருள்களுக்கான டோக்கன்களை சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் வழங்க அரசு முடிவு செய்தது. இதையடுத்து சென்னை கே.கே. நகரை ஒட்டி அமைந்துள்ள எம்.ஜி.ஆர். நகர் பகுதியில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு அறிஞர் அண்ணா மாநகராட்சி உயர்நிலைப் பள்ளியில் டோக்கன்கள் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது.
இதையடுத்து டோக்கன்களைப் பெறுவதற்காக 4,500 பேருக்கு மேல் நள்ளிரவு 1 மணியிலிருந்தே வரிசையில் நிற்கத் தொடங்கினர். ஞாயிற்றுக்கிழமை மட்டுமே டோக்கன் அளிக்கப்படும் என்றும் அதற்குப் பிறகு டோக்கன் வழங்கப்படாது எனவும் சிலர் கூறியதால், டோக்கன் பெறாதவர்கள் அனைவரும் ஆயிரக்கணக்கில் திரண்டனர். இதனால் டோக்கன் பெற பள்ளி வாயிலில் நள்ளிரவிலிருந்தே கூட்டம் அலைமோதியது.
அதிகாலை 4 மணிக்கு அப்பகுதியில் காவல் பணியில் ஈடுபடுவதற்காக ஒரு போலீஸ் வேனில் போலீஸார் வந்தனர். அதற்காகக் கதவு திறக்கப்பட்டபோது, மக்கள் அனைவரும் உள்ளே நுழைந்தனர். பள்ளியின் நுழைவாயில் சற்று மேடான பகுதியிலும் உள்பகுதி சற்று தாழ்வாகவும் அமைந்திருந்தது. இதனால் முண்டியடித்துக் கொண்டு முதலில் ஓடியவர்கள் தடுமாறிக் கீழே விழுந்தனர். அடுத்து வந்தவர்கள் அவர்கள் மீது ஏறி மிதித்து ஓடியதில் கீழே சிக்கியவர்கள் மூச்சுத் திணறி இறந்தனர். இதில் 42 பேர், பரிதாபமாக உயிரிழந்தனர்.
படங்கள் நன்றி இந்து நாளிதழ்.
இறந்தவர்களில் பெரும்பாலோர் 40 வயதுக்கு மேற்பட்டவர்கள். இந்தச் சம்பவத்தில் 6 போலீஸார் உள்பட 41 பேர் காயமடைந்தனர். காயமடைந்தவர்கள் அரசுப் பொது மருத்துவமனை மற்றும் ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தனர். லேசான காயமடைந்தவர்கள் முதலுதவி சிகிச்சைக்குப் பிறகு வீட்டுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
நன்றி இந்து நாளிதழ்.
இத்தனைக்கும் டிச.17 அன்றும் (சனிக்கிழமை) டோக்கன்கள் வழங்கப்பட்டன. அப்போது எவ்வித பிரச்சினையும் ஏற்படவில்லை. நிவாரண டோக்கன் வாங்குவதற்காக டிச.17 நள்ளிரவு முதல் ஆயிரக்கணக்கானவர்கள் பள்ளியின் முன்பு குவிந்தனர். கூட்டத்தைக் கட்டுப்படுத்த போதிய அளவில் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தால் நெரிசலைத் தவிர்த்திருக்கலாம் என அங்கிருந்தவர்கள் தெரிவித்தனர்.
கூட்ட நெரிசல் ஏற்பட்ட இடத்தை போலீஸ் கமிஷனர் ஆர். நடராஜ், இணை கமிஷனர் சைலேந்திர பாபு உள்ளிட்ட உயர் அதிகாரிகள் நேரில் பார்த்தனர். இந்த சம்பவம் பற்றி விசாரிக்க ஓய்வு பெற்ற நீதிபதி ராமன் தலைமையில் விசாரணை கமிஷன் அமைக்கப்பட்டது.எம்.ஜி.ஆர். நகர் போலீசார் இந்த சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரித்தார்கள். வதந்தியை கிளப்பி விட்டு, கூட்ட நெரிசல் ஏற்பட காரணமாக இருந்ததாக குற்றம் சாட்டி தி.மு.க. கவுன்சிலர் பட்டாசு பாலுவாகிய தனசேகரன் கைது செய்யப்பட்டு இப்ப அப்படியொரு சம்பவமா? நடந்துச்சா? என்று கேட்கிறார் என்பது தனி தகவல்.
1.மல்லிகா (வயது 25) பச்சையப்பன் நாயக்கன் தெரு, ஜாபர்கான் பேட்டை, 2.திலகவதி(வயது 38) அன்னை சத்தியா நகர், ஜாபர்கான் பேட்டை, 3.நடராஜன் (வயது 48) அன்னை சத்தியா நகர், ஜாபர்கான் பேட்டை, 4.செல்லப்பன்(வயது 58) தலைமை செயலக ஊழியர், பச்சையப்பன் தெரு, ஜாபர்கான்பேட்டை, 5.மேரி (வயது 60) பச்சையப்பன் நாயக்கன் தெரு, ஜாபர்கான்பேட்டை, 6.தெய்வசகாயம்(வயது 65) அண்ணல் காந்தி தெரு, எம்ஜிஆர் நகர், 7.லீலாவதி (வயது 80) பச்சையப்பன் நாயக்கன் தெரு, ஜாபர்கான் பேட்டை, 8.சந்திரா (வயது 54) பச்சையப்பன் நாயக்கன் தெரு, ஜாபர்கான் பேட்டை, 9.சுப்பிரமணி (வயது 41) ஜாபர்கான் பேட்டை, 10.சரோஜா (வயது 55) தியாகராய தெரு, எம்ஜிஆர் நகர்,
11.லத்தீப் உன்னிஷா (வயது 38) தேவராஜா தெரு, எம்ஜிஆர் நகர் 12.குணசேகர் (வயது 40) அன்னை சத்தியா நகர், 13.ஆனந்தன் (வயது 13) ஜாபர்கான் பேட்டை 14.ராமு (வயது 46) ஜாபர்கான்பேட்டை 15.நடராஜன் (வயது 53) எம்ஜிஆர் நகர் 16.ஏழுமலை (வயது 43) எம்ஜிஆர் நகர் 17.சாமந்தி (வயது 40) (சேஷசாயி என்பவரின் மனைவி) 18.ஜெயராணி (வயது 40) (மைக்கேல் என்பவர் மனைவி) 19.வெங்கடேசன் (வயது 46) அன்னை சத்யா நகர், ஜாபர்கான்பேட்டை ,
20.கபூர்கான் 21.பச்சையம்மாள் 22.கனகசபை (வயது 28) 23.முனியம்மாள் 24.வெள்ளையம்மாள் 25.சக்திவேல் 26.ஆனந்தன் (வயது 36) எம்ஜிஆர் நகர் 27.சந்திரமோகன் (வயது 40) மேற்கு ஜாபர்கான் பேட்டை 28.பூங்கொடி (வயது 28) கே.கே. நகர் 29.மோகனம்மாள் (வயது 38) அன்னை சத்தியா நகர், ஜாபர்கான் பேட்டை 30.உமாதேவி (வயது 35) இந்திரா காந்தி தெரு, எம்ஜிஆர் நகர்.
31.குப்பம்மாள் (வயது 42) கே.கே நகர் 32.கஸ்தூரி (வயது 42) வளையாபதி தெரு, எம்ஜிஆர் நகர் 33.செல்வராஜ் (வயது 32) ஞானஒளி தெரு 34.போத்தம்மாள் (வயது 58) எம்ஜிஆர் நகர் 35.தேவி, அன்னை சத்யா நகர், ஜாபர்கான் பேட்டை 36.உமா (வயது 42) ஜாபர்கான் பேட்டை 37.மல்லிகா (வயது 60) எம்ஜிஆர் நகர் 38.மலர்கொடி (வயது 50) எம்ஜிஆர் நகர் 39.ராம்தாஸ் (வயது 53) சைதாப்பேட்டை 40.ராமன் (வயது 40) ஜாபர்கான் பேட்டை மற்றவர்கள் பெயர் விவரம் தெரியவில்லை.
நெரிசலை கட்டுப்படுத்த முயன்ற போது காயமடைந்த 12 போலீஸ்காரர்கள் பெயர் விவரம் வருமாறு: 1. அன்பழகன் (வயது 44), 2. விக்ரமன் (வயது 57), 3. சேகர் (வயது 51), 4. பாண்டியன் (வயது 51), 5. ராஜேந்திரன் (வயது 43),6. சேதுராமன் (வயது 48), 7. கோபி, 8. குமரன், 9. மதியழகன், 10. சுப்பிரமணி, 11. சவுரிராஜன், 12. குமரேசன் ஆகியோர் ஆவர்.
கே.கே. நகர் சம்பவத்தை இன்று நினைத்தாலும் நெஞ்சம் வெடிக்கிறது. வாழ்கையில் மறக்கமுடியாத நாளாக கடந்த 2005 ம் ஆண்டு டிசம்பர் 18 ம் தேதி நடந்த அந்த கோர விபத்து மறக்கமுடியாதது.