chennireporters.com

வாய்க்கொழுப்பு எடுத்த நடிகை மீது தீண்டாமை வழக்கு. “கைது” க்கு பயந்து தலைமறைவான நடிகை மீரா மிதுன்.

நடிகை மீரா மிதுன் பட்டியலின மக்கள் பற்றி இழிவான கருத்துக்களை தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார் இதுதொடர்பாக அவர் மீது 7 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டு உள்ளது விரைவில் அவர் கைது செய்யப்படுவார் என தகவல் வெளியாகியுள்ளது.

தற்பெருமைக்காக சமூகவலைதளத்தில் எதை வேண்டுமானாலும் பேசலாம் யாரைப் பற்றி எது வேண்டுமானாலும் சொல்லலாம் என்ற மனநிலை தற்போது அதிகரித்து வருகிறது பிரபலங்களைப் பற்றி அவதூறாக பேசி புகழ் தேட பார்க்கும் நபர்களின் முக்கிய நபர்களில் ஒருவராக நடிகை மீரா மிதுன் இருந்து வருகிறார்.

விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மாநில துணைப் பொதுச்செயலாளர் வன்னியரசு சென்னை போலீஸ் கமிஷனர் சங்கர் ஜுவாலை சந்தித்து புகார் அளித்தார்.

அந்த புகாரில் திரைப்பட நடிகை மீரா மிதுன் தனது டுவிட்டர் பக்கத்தில் பட்டியலின மக்கள் பற்றி இழிவான கருத்துகளை பதிவு செய்துள்ளார்.

நடிகை மீரா மிதுன் வீடியோவால் கோடிக்கணக்கான பட்டியலின மக்கள் வேதனை அடைந்துள்ளனர்.
மீரா மிதுன் வீடியோ வீடியோ தமிழகத்தில் பதட்டத்தை உண்டாக்கும் விதமாக உள்ளதால் அவரையும் அவரது காதலர் அபிஷேகம் ஆகிய இருவரையும் தீண்டாமை மற்றும் வன் கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்ய வேண்டும் என புகார் கொடுத்துள்ளனர்.
இந்த சம்பவம் தற்போது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது .

இது தொடர்பாக மத்திய குற்றப்பிரிவு சைபர் கிரைம் போலீசார் வழக்கை விசாரணை நடத்தி வருகின்றனர் விசாரணையின் முடிவில் நடிகை மீரா மிதுன் மீது தீண்டாமை பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

இந்த நிலையில் நடிகை மீரா மிதுன் விரைவில் கைது செய்யப்படுவார் என்று விடுதலை சிறுத்தைகள் கட்சியை நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர்  சாதிரீதியாக தமிழகத்தில் முதன்முறையாக திரைப்பட நடிகை ஒருவர் பேசியது இதுவே முதல் முறையாகும்.

இதையும் படிங்க.!