பாலஸ்தீனர்களு டனான உறவை புதுப்பிக்கும் வகையில் ஜெருசலேமில் உள்ள அமெரிக்க துணை தூதரகத்தை மீண்டும் திறப்பதாக அமெரிக்க வெளியுற
வுத்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்.
அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் ஆண்டனி பிளங்கன் இஸ்ரேலுக்கு பயணம் மேற்கொண்டுள்ளார் அங்கு மேற்கு கரையில் உள்ள ரமல்லாவில் பாலஸ்தீன அதிபர் மஹ்மூத் அப்பாஸை சந்தித்தார்.
இதன்பிறகு ஜெருசலேமில் உள்ள அமெரிக்க துணை தூதரகம் மீண்டும் திறக்கப்படும்.
பாலஸ்தீனர்கள் உடனான உறவை புதுப்பிக்கும் வகையில் இம்முடிவு எடுக்கப்பட்டுள்ளது என்று அறிவித்துள்ளார்.பாலஸ்தீனர்கள் உடனான தூதரக உறவு தொடர்பான விஷயங்களுக்காக துணை தூதரகம் முன்னர் செயல்பட்டு வந்தது.
இஸ்ரேலுக்கான அமெரிக்க தூதரகத்தை ஜெருசலேமுக்கு முன்னாள் அதிபர் டிரம்ப் மாற்றினார்.இதன்பின் இந்த துணை தூதரகத்தின் நடவடிக்கைகள் இஸ்ரேலுக்கான அமெரிக்க தூதரின் அதிகாரத்திற்குள் கொண்டு வரப்பட்டுள்ளது.