chennireporters.com

#Vadodara accident; போதையில் கார் ஓட்டி மூன்று பேரை கொலை செய்து ஓம் நமச்சிவாய மந்திரம் சொன்ன குஜராத் இளைஞன்.

குஜராத் மாநிலம் வதோதராவில் இளைஞர் ஒருவரை கார் ஏற்றி கொன்றதாகக் குற்றம் சாட்டப்பட்ட சட்ட மாணவர் ரக்ஷித் சௌராசியா யார்? என்று இபரம் தற்போது வெளியாகி உள்ளது. ஒருவர் கொல்லப்பட்டு நான்கு பேர் காயமடைந்த விபத்துக்கு 20 வயது சட்ட மாணவர் ரக்ஷித் சௌராசியா முழுப் பொறுப்பேற்றுக்கொண்டுள்ளார் என்று காவல் துறையினர் அறிவித்துள்ளனர்.

குடிபோதையில் இருந்ததாகக் கூறப்படும் சௌராசியா, தன் காரை பல வாகனங்கள் மற்றும் மக்களை மோதிய பிறகு, அவரது கார் நடு ரோட்டில் நின்றது. பின்னர் அவர் காரில் இருந்து இறங்கி, குடி போதையில் என்ன பேசுகிஇறோம் என்று சுய நிலைவில்லாமல் பேசி  கத்தினார். “மற்றொரு முறை “ஓம் நம சிவாய்”  “ஓம் நம சிவாய்” “ஓம் நம சிவாயா என்று அவர் மீண்டும் மீண்டும் கத்திக்கொண்டே சாலையில் ஓட த்தொடங்கினார். இது சம்பவத்தின் போது எடுக்கப்பட்ட வீடியோக்கள் காட்டுகிறது.

ஹோலி வண்ணப்பூச்சுகளை வாங்க வெளியே சென்றிருந்த ஹேமலிபென் படேல் சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததாக கூறப்படுகிறது . இந்த விபத்தில் ஜெயினி (12), நிஷாபென் (35), அடையாளம் தெரியாத 10 வயது சிறுமி மற்றும் அடையாளம் தெரியாத 40 வயது ஆண் உட்பட நான்கு பேர் படு காயமடைந்தனர்.

யார் அந்த ரக்ஷித் சௌராசியா ?

ரக்ஷித் சௌராசியா உத்தரபிரதேசத்தின் வாரணாசியைச் சேர்ந்தவர், அங்கு அவரது குடும்பம் குழாய் தொழில் நடத்தி வருகிறது. அவர் தற்போது சட்டம் பயின்று வருகிறார், வதோதராவில் ஒரு  விடுதியில்  தங்கி படித்து வருகிறார்.

சௌராசியா, பரோடாவின் மகாராஜா சாயாஜிராவ் பல்கலைக்கழகத்தில் ஒரு மாணவர். அவர் 2021 இல் ஐந்தாண்டு படிப்பைத் தொடர பல்கலைக்கழகத்தில் சேர்ந்து படித்து வருகறார்.

Vadodara Accident: Woman Took Children On Scooty Ride, Minutes Later They Were Mowed Down By Car | Times Now“நாங்கள் ஒரு ஸ்கூட்டிக்கு முன்னால் சென்று கொண்டிருந்தோம். நாங்கள் வலதுபுறம் திரும்பும்போது சாலையில் ஒரு பள்ளம் இருந்தது. வலதுபுற திருப்பத்தில் ஒரு ஸ்கூட்டியும் ஒரு காரும் நின்றிருந்தன. எங்கள் கார் ஸ்கூட்டரைத் தொட்டது, ஏர்பேக்குகள் திறந்தன. அதன் பிறகு கார் எங்கு சென்றது என்று என்னால் கண்டுபிடிக்க முடியவில்லை,” என்று அவர்  விவரித்தார்.

விபத்து நடந்த நேரத்தில் அவர் மணிக்கு 50-60 கிமீ வேகத்தில் வாகனம் ஓட்டியதாகக் கூறுகிறார். இருப்பினும், காவல்துறையினரின் கூற்றுப்படி, ஓட்டுநர் அதிக வேகத்தில் வாகனம் ஓட்டியிருக்கவேண்டும் என்று கருதுகின்றனர்.

அந்த கார் அவரது நண்பர் மீட் சவுகானுக்கு சொந்தமானது என்றும், அவர் இணை ஓட்டுநர் இருக்கையில் அமர்ந்திருந்தார் என்றும் டிசிபி பன்னா மோமயா செய்தியாளர்களிடம் தெரிவித்தார். அவரை கைது செய்ய போலீசார் தேடி வருகின்றனர்.

Vadodara tragedy: Woman in Gujarat crushed in drunken hit-and-run, law student arrested – 10 points to know | India News - The Times of India

ஆரம்பத்தில்,  சௌராசியா குடிபோதையில் இருந்ததாகவோ அல்லது எந்த போதைப் பொருளையும் உட்கொண்டதாகவோ மறுத்தார். இருப்பினும், பின்னர் அவர் பாங் (கஞ்சா) உட்கொண்டதாக ஒப்புக்கொண்டார்.

விபத்துக்கு அந்த இளைஞன் முழுப் பொறுப்பையும் ஏற்றுக்கொண்டான். “ஒரு பெண் இறந்துவிட்டதாகவும், சிலர் காயமடைந்துள்ளதாகவும் எனக்குத் தெரிவிக்கப்பட்டது. பாதிக்கப்பட்டவர்களின் குடும்பத்தினரைச் சந்திக்க விரும்புகிறேன், அது என் தவறு, அவர்கள் விரும்புவது நடக்க வேண்டும்,” என்று அவர் கூறினார்.

குஜராத்தில் சொகுசு கார் ஒன்றில் இரண்டு இளைஞர்கள் குடித்துவிட்டு வாகனம் ஓட்டி எதிரில் வந்த மூன்று பேரை காரை ஏற்றி கொலை செய்துள்ளனர்.Vadodara youth whose reckless driving killed 1 and injured 4 persons claims he wasn't drunk | Vadodara youth whose reckless driving killed 1 and injured 4 persons claims he wasn't drunk - Gujarat Samachar

காயம் அடைந்தவர்கள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். காரில் உள்ள ஒரு இளைஞர் காரை விட்டு இறங்கி ஓடுகிறார்.Vadodara: Woman Killed As Drunk Driver Rams Car Into 2 Two-Wheelers, Screams 'Another Round'மற்றொரு இளைஞர் காரில் இருந்து இறங்கி ஓம் நமச்சிவாயா ஓம் நமச்சிவாயா என்று மந்திரம் சொல்லிக் கொண்டே தப்பிக்க முயற்சிக்கிறார் இருப்பினும் பொதுமக்கள் அவரை பிடிக்க முற்படுகின்றனர்.

Vadodara accident: Wasn't drunk, car was going at 50 kmph: Law student who mowed down 5 - India Todayஆனால் அவர் தப்பித்து செல்கிறார் இந்த வீடியோ காட்சி தற்போது சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகிறது சொகுசு கார் முன்பகுதி முழுவதும் சுக்குநூறாகி நடுரோட்டில் நிற்பதை வீடியோவில் காணலாம்.

Vadodara Accident Video: 'Another Round, Nikita, Om Namah Shivaay', Shouts ' Drunk' Youth After Killing 1 Woman, Injuring 4-5 Under His Carகுஜராத் முழுவதும் மதுவிலக்கு அமல்படுத்தப்பட்டிருக்கிறது என்று சொல்லி பெருமைப்படும் பாஜக அரசு இந்த கொலைக்கு என்ன பதில் சொல்லப் போகிறார்கள்?WATCH | Drunk law student screams 'another round' after he kills woman, injures 4 ramming car into two-wheelers in Gujarat- The Weekஇந்தியாவிலேயே போதைப் பொருட்கள் போதை மருந்துகள் அதிகம் குஜராத்தில் தான் கண்டுபிடிக்கப்படுகிறது. குஜராத் கடற்கரையில் இருந்து தான் கடத்தப்படுகிறது இறக்குமதியும் செய்யப்படுகிறது என்பதை பல செய்திகள் மக்களுக்கு காட்டியுள்ளது.

இதையும் படிங்க.!