chennireporters.com

வள்ளலாரின் பொன்மொழிகள்.

திருவருட்பா

மருந்தறியேன் மணிஅறியேன் மந்திரம் ஒன்றறியேன்.மதி அறியேன், விதி அறியேன், வாழ்க்கைநிலை அறியேன்.

திருந்தறியேன் திருவருளின் செயலறியேன்.அறந்தான்செய்தறியேன்.

மனமடங்கும் திறத்தினில் ஓர் இடத்தேஇருந்தறியேன்.அறிந்தோரை ஏத்திடவும் அறியேன்.

எந்தைபிரான் மணிமன்றம் எய்த அறிவேனோஇருந்ததிசை சொலஅறியேன்.

எங்ஙனம் நான் புகுவேன்.யார்க்குரைப்பேன் என்ன செய்வேன்?ஏதும் அறிந் திலனே !

திருவருட்பிரகாச வள்ளலார்

இதையும் படிங்க.!