chennireporters.com

#vellore police; கார் திருடும் மாபியாவுடன் கைகோர்த்த வேலூர் போலீசார்.

தமிழ்நாடு முழுவதும் கார் வாடகைக்கு எடுத்து உரிமையாளர்களை ஏமாற்றி திருட்டுத்தனமாக அடமானம் வைத்து முதலாளிகளை ஏமாற்றி வரும் கார் மாபியாவுடன் வேலூர் டவுன் போலீசார் கைகோர்த்துக்கொண்டு கட்டிங் வாங்கி வருவது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகிறது.

கேரள மாநிலம் கடுகுமுடி டிவிஷன் மூணாறு பகுதியை சேர்ந்தவர் கண்ணன் லாரி ஓட்டுநர் இவருக்கு சொந்தமாக மாருதி சுசுகி ஸ்விப்ட் டிசையர் கார் நம்பர் கே.எல் 27 சி 3564 என் கொண்ட வெள்ளை நிற காரை வேலூரை சேர்ந்த சுரேஷ் சன் டிரான்ஸ்போர்ட் ஜெகதாம்பாள் காம்ப்ளக்ஸ் மெயின் ரோடு வேலூர் என்ற முகவரியில் உள்ள சுரேஷ் என்பவர் கடந்த பிப்ரவரி மாதம் கண்ணன் உடன் ஒப்பந்தம் போட்டார். மாதம் 20,000 ம் ரூபாய்க்கு காரை வாடகைக்கு எடுத்துச் சென்றார்.

கார் எடுத்துச் சென்றதிலிருந்து கண்ணன் வங்கி கணக்குக்கு ஒரே ஒரு முறை மட்டும் 20 ஆயிரம் ரூபாய் செலுத்தியுள்ளார். மீதி 3 மாதம் மாத வாடகையை சுரேஷ் தரவில்லை. சம்பந்தப்பட்ட காரின் உரிமையாளர் கண்ணன் சுரேஷை கேட்டதற்கு வேலூருக்கு வந்து பணத்தை நேரில் வாங்கிச் செல்லுங்கள் என்று கடந்த ஜூன் மாதம் 28ஆம் தேதி வேலூருக்கு வர சொன்னார். 40,000 ரூபாய்க்கு பெடரல் வங்கி செக் ஒன்றை கொடுத்துள்ளார்.

கார் உரிமையாளர் கண்ணன்.

இரண்டு நாள் கழித்து உங்கள் காரை உங்களிடம் திருப்பி தந்து விடுகிறேன் என்று சொன்னார். ஆனால் இதுநாள் வரை காரையும் தரவில்லை அவர் கொடுத்த செக்கில் பணம் இல்லை வங்கியில் இருந்து திரும்பி வந்து விட்டது. கார் மாபியா 420 சீட்டிங் சுரேஷ் இடம் கார் உரிமையாளர் கண்ணன் கேட்டதற்கு போனை எடுக்காமல் இழுத்தடித்து வந்துள்ளார்.

போலீசில் புகார் கொடுத்தாலும் ஒன்றும் செய்ய முடியாது போலீசில் எனக்கு நிறைய அதிகாரிகள் தெரியும் என்னை ஒன்றும் செய்ய மாட்டார்கள் என்று கண்ணனை ஏமாற்றி வந்தார். இது குறித்து கண்ணன் மூணாறில் இருந்து வேலூர் வந்து விசாரித்த போது தான் அதிர்ச்சி தரும் பல தகவல்கள் தெரியவந்துள்ளது.

கார்த்திருடன் 420 சுரேஷ்.

மேற்படி சுரேஷ் இதுபோன்று பலரை ஏமாற்றியுள்ளார். கார் வைத்திருக்கும் உரிமையாளர்களை தொடர்பு கொண்டு கார் வாடகைக்கு தேவைப்படுகிறது.  மாதம் வாடகை சரியாக தந்து விடுவேன் என்று ஒரு போலியான முகவரியை கொடுத்து காரை வாங்கிக் கொண்டு ஒரு மாதம் மட்டும் பணத்தை சரியாக கொடுத்துவிட்டு மீதி பணத்தை தராமல் அவர்களுடைய காரை வேறு ஒருவரிடம் பாதி விலைக்கு விற்றுவிட்டு சல்லாபமாக ஊர் சுற்றுவது தான் இவரது வேலையாக இருந்து வருகிறது. இப்படி பல பேர் பல புகார்கள் தமிழ்நாடு முழுவதும் இவர் மீது கொடுத்துள்ளனர்.

வாலாஜா பகுதியைச் சேர்ந்த ஒரு ஷேஷாத்திரி என்ற போலீஸ்காரரும் தன்னுடைய காரை இந்த சுரேஷிடம்  வாடகைக்கு கொடுத்து ஏமாந்துள்ளார். அவர் கொடுத்த புகார் மீதும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

கடந்த மாதம் 12ஆம் தேதி கண்ணன் வேலூர் டவுன் குற்றப்பிரிவு காவல் நிலையத்தில் தலைமை காவலர் குமரவேல் என்பவரிடம் புகார் கொடுத்துள்ளார். புகாரை பெற்றுக் கொண்ட குமரவேல் இது பெரிய விஷயம் இந்த புகார் குறித்து எங்களால் எதுவும் விசாரிக்க முடியாது. இது பெரிதாக போய்க் கொண்டிருக்கிறது என்று சொல்லி கையை விரித்து விட்டார்.

அதன் பிறகு சப்-இன்ஸ்பெக்டர் சத்தியவாணி என்பவரிடம் புகார் அளிக்கப்பட்டது. சத்தியவாணி இடம் இந்த புகார் குறித்து கேட்டதற்கு விசாரிக்கிறேன் பிஸியாக இருக்கிறேன் நாளை வாருங்கள் மதியம் வாருங்கள் என்று இழுத்து அடித்து வந்துள்ளார். இந்த நிலையில் நேரடியாக சென்று கேட்டதற்கே நான் டிஜிபி ஆபிஸ் போகிறேன் நிறைய வேலை இருக்கிறது.

ஒரு வாரம் கழித்து வாருங்கள் என்று இழுத்து அடித்து வந்தார்.

தற்போது அவனை கைது செய்ய முடியாது எங்கு இருக்கிறான் என்று தெரியாது முயற்சி செய்கிறேன் என்று சொல்கிறார் ஆனால் இந்த சுரேஷ் குறித்து அந்த பகுதியில் உள்ளவர்கள் வேலூர் டவுன் போலீஸில் உள்ள அனைத்து போலீசாரும் சன் ட்ரான்ஸ்போர்ட் உரிமையாளர் சீட்டிங் பார்ட்டி 420 சுரேஷுக்கு நெருக்கமானவர்கள் அதனால்தான் அவனை யாரும் விசாரிக்க மாட்டார்கள்.

பாதிக்கப்பட்ட நபருக்கு நியாயமும் கிடைக்காது என்கிறார்கள் சம்பந்தப்பட்ட சுரேஷ் போலீஸ்காரர்களின் குடும்பத்திற்கு வெளியூர் செல்வதற்கு தேவையான பொழுது வாடகை இல்லாமல் கார்களை கொடுத்துள்ளார். என்றும் பலமுறை அவர்களுக்கு கட்டிங், கிம்பளம், லஞ்சம் என்று பலமுறை கொடுத்ததால் அனைத்து காக்கிகளும் சுரேஷுக்கு சாதகமாக வேலை செய்கிறார்கள் என்கிறார்கள் சட்டம் ஒழுங்கில் உள்ள சில காக்கிகள்.

இந்த புகார் குறித்து டி.ஐ.ஜி  மற்றும் எஸ்.பிக்கு தெரியாமல் வேலூர் டவுன் கிரைம் போலீசார் மறைத்துள்ளனர். சுரேஷ் இதுபோன்று இருபதுக்கும் மேற்பட்ட நபர்களிடமிருந்து காரை வாங்கி திருடி விற்று உள்ளார். அந்த புகார்கள் மீது இதுவரை எந்த நடவடிக்கையும் குற்ற பிரிவு போலீசார் நடவடிக்கை எடுக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க.!