பத்திரிகையாளர் நலன்களுக்கு பாடுபட்ட மூத்த பத்திரிகையாளர், மாலைச்சுடர் நாளிதழ் ஆசிரியர் திரு.எம்.சுப்பிரமணியன் (வயது 72) அவர்கள் உடல் நலமின்றி சிகிச்சை பெற்று வந்தார்.
இந்த நிலையில் இன்று (29-09-2021) பிற்பகலில் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி இயற்கை எய்தினார்.
அவரது மறைவுக்கு அனைத்து பத்திரிகையாளர் சங்கங்கள் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறது.நீண்ட காலமாக பத்திரிகை துறையில் பெரும் அனுபவம் கொண்டவர்.
பத்திரிகையாளர் அமைப்புகள் மற்றும் எம்.யூ.ஜே வில் தலைவராக இருந்தவர்.பலருக்கு வழிகாட்டியாக அமைந்தவர்.அனைவருடனும் அன்பு பாராட்டுபவர்.இன்றைக்கு நம்மிடையே இல்லை என்பது பெரும் வேதனையை தருகிறது.
இந்தாண்டு துவக்கத்தில் நடந்த பத்திரிகையாளர் ஓய்வூதிய குழு கூட்டத்தில் பத்திரிகையாளர் நலன்களுக்காக வலியுறுத்திப் பேசிய மூத்த பத்திரிகையாளர் திரு.எம்.சுப்பிரமனியன் அவர்களை பிரிந்துவாடும்குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள்,
பத்திரிகை, ஊடகதுறை நண்பர்களுடன் துயரத்தில் பங்கேற்கிறோம்.